ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library

ஜனவரி 22, 2011 at 4:05 முப 8 பின்னூட்டங்கள்

கணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில்
முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால்
உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான
கோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு
இலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த
கோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும்
ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப்புகளை பிறருக்கு
பகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://fliiby.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எதைப்பற்றி
தகவல்கள் வேண்டுமோ அதை கொடுத்து டாக்குமெண்ட் அல்லது
ஆடியோ,வீடியோ அல்லது Zip போன்ற எந்த கோப்பு வகைகளில்
தேடவேண்டுமோ அதைக்கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் உடன் வரும் திரையில் நாம் தேடிய
டாக்குமெண்ட் பல கிடைக்கிறது. மாணவர்களுக்கும் பிஸினஸ்
செய்யும் நண்பர்களுக்கும் முக்கிய டாக்குமெண்ட் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட் பற்றிய தகவல்களை இந்ததளத்தில்
பல கிடைக்கிறது.இது மட்டுமின்றி பிளாஷ் அனிமேசன்
கோப்புகளை கூட நாம் தேடி தரவிரக்கலாம். அனைத்து
துறையினருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
யாரிடமும் உதவி கேட்பதில் தப்பில்லை ஆனால்
அடிமையாக மட்டும் தான் இருக்க கூடாது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தன்னாட்சி இயக்கம் யாரால் தயாரிக்கப்பட்டது ? 
2.அஸ்ஸாம் பீகார் மாநிலங்கள் எப்போது வங்காளத்தில்
  இருந்து  பிரிக்கப்பட்டது ?  
3.மனிதனின் உரிமைகள் என்ற நூலை எழுதியவர் யார் ? 
4.சுதந்திர இந்தியாவின் பிறப்புரிமை என்று முழங்கியவர் யார் ?
5.ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த வருடம் நடந்தது ?
6.மிகவும் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட 
  மாநிலம் எது ? 
7.’மே தின’ கொண்டாட்டம் வேண்டும் என்று வேண்டுகோள் 
  விடுத்தவர் யார்  ?
8.துணைக் குடியரசு தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?
9.இந்திய அரசியலில் முதல் சமபந்தி சாப்பாடு எப்போது
   நடைபெற்றது ?
10.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்விச்சங்கம் தொடங்கப்பட்ட
   ஆண்டு ? 
பதில்கள்:
1.திலகர்,அன்னிபெசண்ட் அம்மையார்,2.1912,3.தாமஸ் பெயின்,
4.பாலகங்காதர திலகர், 5.1919,6.அஸ்ஸாம் ,7.ஈ.வெ.ரா,
8.பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்களால்.
9.1920,நாக்பூர், 10.1928.
இன்று ஜனவரி 22 
பெயர் : விக்டோரியா ,
மறைந்த தேதி : ஜனவரி 22, 1901
இந்தியாவின் முதல் பேரரசியாக 1876
மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்
63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை
பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட
ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம். எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  7:42 முப இல் பிப்ரவரி 3, 2011

    wow! very useful! Thank you very much sir!

    மறுமொழி
    • 2. winmani  |  5:12 பிப இல் பிப்ரவரி 3, 2011

      @ எஸ். கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Speed Master  |  10:55 முப இல் பிப்ரவரி 3, 2011

    thanks for sharing

    மறுமொழி
    • 4. winmani  |  5:12 பிப இல் பிப்ரவரி 3, 2011

      @ Speed Master
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. jiyathahamed  |  2:03 பிப இல் பிப்ரவரி 3, 2011

    புதுமையான தளமொன்றை பகிர்ந்தமைக்கு நன்றி. மென்மேலும் சிறப்பான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

    மறுமொழி
    • 6. winmani  |  5:14 பிப இல் பிப்ரவரி 3, 2011

      @ jiyathahamed
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. ♠புதுவை சிவா♠  |  5:30 பிப இல் பிப்ரவரி 3, 2011

    பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி வின்மணி

    மறுமொழி
    • 8. winmani  |  6:01 பிப இல் பிப்ரவரி 3, 2011

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...