யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்

மார்ச் 28, 2010 at 9:12 பிப 3 பின்னூட்டங்கள்

கடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித
மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த
அலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட
அப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.

வந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை
கண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து
இரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்
மேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்
பல சேவைகளை வரிந்துகட்டி கொண்டு கொட்டினாலும் இன்னும்
பல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்
இல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி
வைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்
வெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்
”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்
மென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்
உள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல
வேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்
போதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்
ஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல
வேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.
தற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்
தேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர
லண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த
சேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்
தேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்
என்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்
இந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்
”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய
”இடம் தேடல் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண்பர்களின்
சார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய
ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி இன்றைய சிந்தனை
தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான
ஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு
அதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில்
இல்லாமல் போகும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
AJAX - Browser support
if (window.XMLHttpRequest)
 {
// code for IE7+,Firefox,Chrome,Opera,Safari
 return new XMLHttpRequest();
 }
if (window.ActiveXObject)
 {
// code for IE6, IE5
 return new ActiveXObject("Microsoft.XMLHTTP");
}
இன்று மார்ச் 28 
பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
மறைந்த தேதி : மார்ச் 28, 2006
ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது 
எங்களுக்குத் தான் பெருமை.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. shankar  |  9:20 பிப இல் மார்ச் 28, 2010

    நல்ல பதிவு,,,பகிர்வுக்கு நன்றி!!

    மறுமொழி
  • 2. Googler  |  3:45 முப இல் மார்ச் 29, 2010

    அடப் போங்க சார், Google Maps ல இந்த வசதி எப்பவோ வந்தாச்சு. 32 நகரம் என்ன, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்த வசதி உண்டு. அதுமட்டுமில்லாமல் traffic ஐ கண்டுபிடித்தல், மூடப்பட்ட வீதிகளை கண்டுபிடித்தல் அப்பிடின்னு பல வசதி கூகிள் maps ல இருக்கு.

    மறுமொழி
    • 3. winmani  |  6:29 பிப இல் மார்ச் 29, 2010

      கூகுள் மேப்ஸ்-ல் எல்லாம் இருக்கு சரிதான் , ஆனால் டச் போன் -ல கூட கூகுள் மேப்ஸ் டச் பண்ணி நாம் தேடும் இடம் போகமுடியாது இந்த வீடியோவைவை இன்னொறுமுறை பார்த்தால் தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைத்தவிர கூகுள் நெக்சஸ் போன் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்றெல்லாம் இல்லாமல் அனைத்து ஐபோன்களிலும் இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தலாம். அதிக அளவு மெமரி தேவையில்லை. மற்றபடி வேகம் மட்டும் கூகுளை விட குறைவாகத்தான் இருக்கிறது

      நன்றி.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...