Archive for மார்ச் 2, 2010
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
கடவுளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும்
நல்ல எண்ணம் உள்ள மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு
சொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம்
கேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல
ஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான
சிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க
அலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான
தீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது
இந்த மூன்று இணையதளங்களும்.
முதல் இணையதள முகவரி : http://askmedicaldoctor.com
ஆஸ்க் மெடிக்கல் டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று
உங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல்,
இரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும்
நீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில்
உள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.
இரண்டாம் இணையதள முகவரி : http://www.medhelp.org
மெட் கெல்ப் இந்த இணையதளத்திற்கும் உங்கள் உடம்பில்
நோயினால் ஏற்படும் மாற்றங்களை கூறினால் அவர்கள்
உங்களுக்கு எந்த மருந்து ஏற்றதாக இருக்கும் எவ்வளவு
நாள் சாப்பிட வேண்டும் என்ற அத்தனை தகவல்களையும்
கொடுக்கின்றனர் இதில் ஒரு இலவச கணக்கை உருவாக்கி
உங்கள் கேள்விகளை பதியலாம்.
மூன்றாம் இணையதள முகவரி : http://mdadvice.com
மேற்குரிய இரண்டு இணையதளத்தில் என்ன சேவையெல்லம்
கூறினோமோ அந்த சேவையையும் கூடவே நோயில்லாமல்
மனிதன் வாழ என்னென்ன வழிமுறைகளை நாம் கடைபிடிக்க
வேண்டும் ,ஆரோக்கியமான் உணவுவகைகள் என்னென்ன,
எபோதும் உடல் குறைக்க வழிமுறைகள் என்னென்ன என்று
தெளிவாக தெரிவிக்கின்றனர். பல இலட்சம் பேர் இதுவரை
கேட்ட கேள்விகள் அனைத்தையும் நாம் தேடியும் பார்க்கலாம்.
கண்டிப்பாக இந்த மூன்று முத்தான இணையதளங்களும்
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் JAVA Method Description setBackground() Sets the background color of the component setForeground() Sets the foreground color of the component SetSize() Re sizes the component
இன்று மார்ச் 2பெயர் : குன்னக்குடி வைத்தியநாதன் , பிறந்த தேதி : மார்ச் 2, 1935 இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார்.கர்நாடகஇசையை வயலினில் வாசித்தோரில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.