Archive for மார்ச் 5, 2010

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.

நமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம்
தெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும்
நம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை  உதாரணமாக நாம்
டிக்ஸ்னரியில் Teaching  என்ற வார்த்தைக்கு Teach என்று
தேடினால் தான் முடிவுகள் கொடுக்கும் அதேப்போல் இல்லாமல்
நாம் கொடுக்கும் அங்கில வர்த்தைக்கு துல்லியமான அர்தத்தை
சொல்ல இந்த இணையதளம் வந்துள்ளது. அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

இணையதள முகவரி:  http://advertt.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் வார்த்தையை
கொடுத்து தேடினால் நாம் கொடுத்த வார்த்தைக்கான துல்லியமான்
முடிவை இந்த் இணையதளம் காட்டுகிறது. வீக்கிப்பிடியாவில்
இந்த வார்த்தை வருகிறது என்றால் அதன் பொருள் என்ன என்று
தெளிவாக விளக்கி காட்டுகின்றனர்.அடுத்து சாதாரண டிக்ஸ்னரியில்
நாம் கொடுத்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் வேறு
எங்கெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்
துல்லியமாக கூறுகின்றனர். அதோடு இந்த வார்த்தையை பயன்படுத்தி
வந்துள்ள யூடியுப் வீடியோவையையும் இத்துடன் காட்டுகின்றனர்.
நாம் தேடும் அத்தனை வார்த்தைக்கான அர்த்தமும் உள்ள இந்த
இணையதளம் ஒரு மெகா ஆங்கில டிக்ஸ்னரி தான்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
JAVA
Method            Description
mark Supported()  Returns true if mark() and reset()
                  methods are supported by  the input
                  stream
read()            Abstract method which  reads the next
                  byte of data from the input stream
read(byte b[])    Reads bytes from the input stream and
                  stores them in the buffer array
இன்று மார்ச் 5 
பெயர் : கங்குபாய் ஹங்கல் ,
பிறந்த தேதி : மார்ச் 5, 1913
60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத்
துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த கங்குபாய் 
கிரானா கரானா  என்ற வாய்ப்பாட்டு 
பாரம்பரியத்தில் வந்தவர். 1971-ம் ஆண்டில்
பத்ம பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது,
2002-ம் ஆண்டில் பத்ம விபூசன்  உட்பட தேசிய அளவிலும் 
சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.

மார்ச் 5, 2010 at 7:52 பிப 5 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...