Archive for மார்ச் 19, 2010
ஒய்வாக இருக்கும் தேதியை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள புதுமை.
நாம் பல நேரங்களில் வேலைப்பளுவுடன் இருப்போம் அந்த நேரத்தில்
வரும் நம் நண்பர்களிடம் சரியாக கூட பேச முடியாமல் இருப்பது
உண்டு என்ன தான் போன் வசதி இருந்தாலும் நாம் எப்போது எந்த
நாள் ஒய்வாக இருப்போம் என்பதை நம் நண்பர்களுக்கு ஆன்லைன்
மூலம் அறிவிக்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
வீட்டுவாசல் மற்றும் அலுவலகம் இதில் மேலதிகாரியின் அறையின்
முகப்பில் தான் உள்ளே – வெளியே என்று ஒரு பலகை தொங்கு
வதை பார்த்திருக்கிறோம் இதுவும் அப்படி தான் ஆனால் பலகைக்கு
பதில் ஆன்லை-ன் மூலம் எந்த நாள் எந்த நண்பரிடம் பேசப்
போகிறோம் என்பதை ஒரு சார்ட் தயார் செய்து நம் நண்பர்களிடம்
பகிர்ந்து கொள்ளலாம் அதிகப்படியான மக்கள் உள்ள சோசியல்
நெட்வோர்க்கான பேஸ்புக் மற்றும் நம் பிளாக்களில் கூட நாம் இந்த
தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த இணையதளத்திற்கு சென்று
நீங்கள் எந்த பயனாளர் கணக்கும் உருவாக்க தேவையில்லை சில
நொடிகளில் நாம் நமக்கு தேவையான தேதிகளை கொடுத்து அன்று
எந்த நண்பரிடம் பேசப்போகிறோம் என்பதையும் “ Free / Busy ”
என்று குறித்து வைத்துக் கொள்ளலாம். சரியான தேதியை நாம்
நண்பரிடம் சொல்வதால் நம் நேரமும் நண்பர்களின் நேரமும்
பயனுள்ளதாக இருக்கும்.காலம் வேகமாகப்போகிறது நாமும் அதற்கு
தகுந்தாற்போல் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா அதற்காகத்தான்.
இணையதள முகவரி : http://www.meetifyr.com
வின்மணி இன்றைய சிந்தனை உயர்ந்த பதிவியில் இருக்கும் ஒருவருக்கு தலைக்குமேல் வேலை இருக்கும் சமயத்திலும், தனக்கு கீழ் வேலைபார்க்கும் நபர்கள் அல்லது பொதுமக்கள் வந்து கேட்கும் சந்தேகங்களுக்கு மலர்ந்த முகத்துடன் பதில் அளிக்கும் அதிகாரிதான் சிறந்த மனிதர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Math Functions sin() Returns the sine of a number cos() Returns the cosine of a number tan() Returns the tangent of an angle round() Rounds a number to the nearest integer
இன்று மார்ச் 19பெயர் : ஆர்தர் சி.கிளார்க் , மறைந்த தேதி : மார்ச் 19, 2008 பிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.