Archive for பிப்ரவரி, 2010

உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.

உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்
புகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு
உதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.

படம் 1

இணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை
உருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்
புகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.

இணையதளமுகவ்ரி : http://3d-pack.com

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை
படம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு
வேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை
தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்
நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை
வைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்
“ Create 3d-box” என்ற பட்டனை அழுத்தவும்.சில
நிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்
இனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து
எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.
எல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த “jpg,png,
gif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்
கணினியில் சேமித்துகொள்ளலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method    Description
init()  Invoked by the browser or the
     applet viewer to inform that the
     applet has been loaded
start()  Invoked by the browser or the
     applet viewer to inform that
     applet execution has started
stop()  Invoked by the browser or the
     applet viewer to inform that
     applet execution has stopped
இன்று பிப்ரவரி 28 
பெயர் : இராசேந்திர பிரசாத் ,
மறைந்த தேதி : பிப்ரவரி 28, 1963
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவரும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
1950  முதல் 1962  வரை இந்திய குடியரசுத்
தலைவராக இருந்தார். நல்ல மனிதர், என்றும்
நம் தேசம் உங்களை மறவாது.

பிப்ரவரி 28, 2010 at 11:46 பிப 5 பின்னூட்டங்கள்

உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்

இசைஞானி இளையராஜாவிலிருந்து அனைத்து இசைக்கலைஞர்களும்
நம்மை இசையால் சந்தோசப்படுத்துகின்றனர் அந்த வகையில்
இப்போது நம் இணையதளத்தை இசையாக மாற்றி கேட்கலாம்
இதற்காகவே இரு இணையதளம்  வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.

நம் இணையதளத்திற்கு என்று சொந்தமாக ஒரு பாட்டு வைத்து
நம் இணையதள ரசிகர்கள் எங்கு சென்றாலும் இந்த பாட்டை
போட்டு சேர்ந்துகொள்ளலாம் என்று தான் இந்த தளத்தை
உருவாக்கி இருப்பார்கள் போல் ஆம் இந்த இணையதளத்திற்கு
சென்று நம் இணையதள முகவரியை கொடுத்தால் அதை
அழகான இசையாக மாற்றி ஆன்லைன்-ல் கேட்கலாம்.

இணையதளமுகவரி : http://www.codeorgan.com

இந்த இணையதளத்திறகு சென்று நம் இணையதள முகவ்ரியை
கொடுக்க வேண்டியது தான் அடுத்து “Play this website”
என்ற பட்டனை அழுத்தவும் இப்போது உங்கள் இணையதளதிற்கு
இணையான இசை சில நிமிடங்களிலே தயாராகிவிடும்.இந்த
இசையை நம் டிவிட்டர், பேஸ்புக்-ல் இருக்கும் நண்பருடனும்
பகிர்ந்து கொள்ளலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் (java.io.InputStream class) உள்ள சில மெத்தட்
available() Returns the number of bytes that can be
      read
close()     Closes the input stream and releases
      associated system resources
mark()      Marks the current position in the input
      stream
இன்று பிப்ரவரி 27 
பெயர் : சுஜாதா ,
மறைந்த தேதி : பிப்ரவரி 27, 2008
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

பிப்ரவரி 27, 2010 at 9:22 பிப 3 பின்னூட்டங்கள்

மழையோடு விளையாட ஒரு புதுமையான இணையதளம்

பல நேரங்களில் வேலைச்சுமை , டென்சன் என அத்தனையும்
நம்மை ஆட்கொண்டாலும் அந்த நேரம் மழை வந்தால் நாம்
அடையும் மகிழ்ச்சியும் தனி சுகம் தான் அத்தனை கவலைகளும்
பறந்து விட்டதுபோல் தோன்றும் அந்த வகையில் மழை வராத
நேரத்தில் நீங்கள் நினைக்கும் போது மழை சத்தத்தை கேட்க ஒரு
இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.

இன்னும் சில பேர் மழைசத்தத்தை கேட்டவுடன் மகிழ்ச்சியாகி
விடுவர் குழந்தைகளும் இந்த மழை சத்தத்தை கேட்டதும்
வெளியில் சென்று மழைநீரில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட
நினைப்பர் அப்படி மழை நீரை ரசிக்கும்  குழந்தை உள்ளம்
கொண்டவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் மழையின்
சத்தத்தை காது குளிர கேட்கலாம். தொடர்ந்து கேட்டு கொண்டே
இருக்கலாம்.இணையப்பக்கமும் முழுவதும் மழைநீரால்
நனைந்துள்ளது. இனி உங்களுக்கு எப்போதெல்லாம்
போரடிக்கிறதோ அந்த நேரத்தில் நீங்கள் இந்த மழை சத்தத்தை
கேட்கலாம்.
இணையதள முகவ்ரி : http://www.rainymood.com
அதோடு நீங்கள் மழையில் விளையாடியதை உங்கள் நண்பருக்கு
பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தும் கொள்ளலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் பயன்படுத்தப்படும் மெத்த்ட்
renameTo()  Renames the file represented by the
       path name
delete()     Deletes the file or directory represented
       by the path name
canRead()    Checks whether the application can read
       from the specified file
இன்று பிப்ரவரி 26 
பிப்ரவரி 26,1991-ல் உலகம் பரவிய வலையை
(WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ
நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய
உலாவியை அறிமுகப்படுத்தியநாள் தான் இன்று.
(HTTP)மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப்
பார்க்க நெக்சஸ் உலாவி பெரிதும் உதவியது.

பிப்ரவரி 26, 2010 at 10:54 பிப 7 பின்னூட்டங்கள்

உங்கள் ஐடியாவை சேமித்துவைக்க எளிதான ஒரு இணையதளம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் கூட நமக்கு ஐடியா
திடீரென்று தோன்றி கொண்டே தான் இருக்கும் அந்த வகையில்
நமக்கு தோன்றும் ஐடியாவை உடனடியாக ஆன்லைன் -ல்
சேமித்துவைக்க ஒரு இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான்
இந்த பதிவு.

படம் 1

நமக்கு பல ஐடியாக்கள் தோன்றும் அனைத்தயுமே எழுதிவைத்து
திரும்பி பார்க்ககூட நேரம் இருக்காது சரி இமெயில் சேமித்து
வைதுக்கொள்ளலாம் என்றாலும் தினம் தினம் வரும் இமெயிலை
படிக்கவே நமக்கு நேரம் சரியாக இருக்கிறது அப்படி இருக்கும் போது
இந்த ஐடியாவை நாம் எப்படி படித்துபார்க்க முடியும் அந்த வகையில்
தான்  இந்த இணையதளம் வந்துள்ளது ஐடியாவை மட்டும் சேமித்து
வைத்துக்கொள்ளலாம் என்று இந்த தளம் வந்துள்ளது.

இணையதளமுகவரி : http://www.ideary.ru

படம் 2

படம் 3

இதில் கணக்கு வைப்பதற்கு பெரிதாக தகவல் ஒன்றும் கொடுக்க
வேண்டாம் ஒரு பயனாளர் பெயர் ,கடவுச்சொல் மற்றும் இமெயில்
முகவரி என்ற மூன்றும் கொடுத்து நொடியில் உருவாக்கிவிடலாம்.
(படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது). கணக்கை உருவாக்கி முடித்ததும்
படம்-2ல் உள்ளது போல் add என்பதை அழுத்தி நம் ஐடியாவை
கொடுத்து சேமித்துக்கொள்ளவும் அவ்வளவு தான் இனி உங்கள்
கணக்கை திறந்ததும் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் ஐடியா
படம்3-ல் உள்ளதுபோல் காட்டப்படும். இந்த தளம் ஐடியாவை
சேமித்து வைத்துக்கொள்ள பயனுள்ளதளமாக இருக்கும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML Predefined General Entities 
Entity   Displays As   Character Value 
&      &            & 
&lt;       <           &#60; 
&gt;      >           > 
&apos;    '           ' 
&quot;    "           " 
இன்று பிப்ரவரி 25
பெயர் : டான் பிராட்மன்,
மறைந்த தேதி : பிப்ரவரி 25, 2001
சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்  கிரிக்கெட்
வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர்
என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்.
பிராட்மனின் டெஸ்ட் மட்டையடி சராசரியான 
99.94 புள்ளிவிவரப்படி,முக்கிய விளையாட்டுகள்
அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 25, 2010 at 9:10 பிப 6 பின்னூட்டங்கள்

கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

கல்லூரில் பணிபுரியும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் தன் வருவாயை
மேலும் அதிகரிகரிக்க விரும்பும் துடிப்பு மிக்க தொழிலதிபர்களுக்கும்
மற்றும் பலருக்கு உதவவே இந்த இணையதளம் வந்துள்ளது.எப்படி
என்றால் சில பேராசிரியர்கள் மிகவும் அறிவாளியாக இருப்பார்கள்
ஆனால் அதிகம் பேச மாட்டார்கள் இதனாலே அவர்கள் திறமை
வெளியே தெரியாமலே இருந்து விடுகிறது உதாரணமாக இவர்கள்
செய்த மிகப்பெரிய ஒரு பிராஜெக்ட்டை கூட சரியாக மக்கள் மத்தியில்
கொண்டு செல்லாமல் இருப்பார்கள் அவர்களுக்கு என்றே உங்கள்
பிராஜெக்ட்-ன் பவர்பாய்ண்ட்(Powerpoint presentation) மட்டும்
எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் நீங்கள் அனுப்பிய அந்த
பிராஜெக்ட்டை பேச்சுத்திறமை கொண்ட ஆண் அல்லது பெண்
யார் பேசினால் நன்றாக இருக்குமோ அவர்களை வைத்து
பேசவைக்கலாம் இதில் பேசுபவர்களை நாமே தேர்ந்தெடுக்கலாம்.

இதே பிரச்சினை தான் பிஸினஸ் செய்பவர்களுக்கும் சாதாரண
பொருளை கூட சரியாக பேசும் திறம் கொண்ட ஆட்களை வைத்து
சிலர் விற்று விடுகின்றனர் ஆனால் நல்ல பொருளாக இருந்தும்
விற்காமல் இருக்கும்  நீங்களும் இதே போல் சரியான ஆட்களை
ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுத்து உங்கள் பவர்பாய்ண்ட்
பிரசண்டெசனை படிக்க வைக்கலாம். இதற்காக சிறிய அளவில்
கட்டணம் வசூலிக்கின்றனர் நமக்கு பிடித்து இருந்தால் அந்த
வீடியோவை நாம் வாங்கிகொள்ளலாம்.கண்டிப்பாக இந்த
இணையதளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதளமுகவரி : http://www.zentation.com

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
xml Enumerated Value Descriptions 
(a|b|c)    List of attribute values (Or between) 
NOTATION   Names of notations (Requires a list of 
(x|y)      values as well as the keyword. Values 
      declared elsewhere with NOTATION.)
இன்று பிப்ரவரி 24 
பெயர் : ஆர்.முத்தையா,
பிறந்த தேதி : பிப்ரவரி 24, 1886
தமிழ் தட்டச்சுப் பொறியையும்,தமிழில்தட்டச்சு
செய்வதற்கான தொழிநுட்பங்களையும் 
உருவாக்கியவர்.இவர் தமிழ்தட்டச்சுப்பொறியின்
தந்தை என அழைக்கப்படுகிறார்.தமிழுக்கு நீங்கள்
செய்த சேவைக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

பிப்ரவரி 24, 2010 at 7:21 பிப 4 பின்னூட்டங்கள்

கோழிமுட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்கவேண்டும் சொல்லித்தரும் விநோதமான தளம்.

கோழிமுட்டையை எவ்வளவு சரியாக நேரம் வேக வைக்க வேண்டும்
என்பதை நமக்கு தெரிவிப்பதற்காக வித்தியாசமான இணையதளம்
ஒன்று வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.

கோழிமுட்டை சிறியதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேக வைக்க
வேண்டும் பெரியதாகவும் சிறியதாகவும் இல்லாமல் மீடியம் ஆக
இருந்தால் அல்லது பெரியதாக இருந்தால் எவ்வளவு நேரம் வேக
வைக்க வேண்டும் இதைப்பற்றி மட்டும் தான் சொல்கிறது இந்த
இணையதளம்.
இணையதள முகவரி: http://www.eggwatchers.com
இந்த இணையதளத்திற்கு சென்று சிறியதான முட்டையா அல்லது
பெரியதான முட்டையா என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து அந்த முட்டை எவ்வளவு நேரம் சரியாக வேகவேண்டும்
என்றும் சொல்லித்தருகிறது.வேகவைக ஆகும் சைக்கிள் கேப்-ல்
ஒரு யுடியூப் வீடியோவையும் அதற்கு தகுந்த மாதிரி காட்டுகின்றனர்.
இந்த முட்டை வேகவைத்தது முடிந்ததும், நான் முட்டையை சரியாக
வேகவைத்து சாப்பிட போகிறேன் என்று உங்கள் டிவிட்டர்,பேஸ்புக்-ல்
இருக்கும் நண்பருடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML Occurrence Indicators 
(no indicator)  Required  One and only one
 ?            Optional  None or one
 *            Optional, repeatable  None, one, or more
 +            Required, repeatable  One or more
இன்று பிப்ரவரி 23
பெயர் : மைக்கேல் டெல்,
பிறந்த தேதி : பிப்ரவரி 23, 1965
இவர் டெல் நிறுவனத்தின் (Dell,Inc.)நிறுவனர்.
டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த
யூதகுடும்பத்தவர்.தனது பதினைந்தாவது வயதில்
தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே
ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப்
பூட்டினார்.பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த
காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற
நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது
பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு
நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார்.
1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர்
கார்ப்பொரேசன்  (Dell Computer Corporation)
என மாற்றினார்.

பிப்ரவரி 23, 2010 at 8:11 பிப 3 பின்னூட்டங்கள்

உங்கள் உல்லாச பயணத்துக்கான செலவை திட்டமிட பயனுள்ள இணையதளம்.

உல்லாசப்பயணம் செய்ய அனைவருக்கும் ஆசை தான் ஆனால்
பல நேரங்களில் திட்டமிடாமல் சென்று உல்லாச பயணத்தை
மகிழ்ச்சியாக செலவிட முடியாமல் போகிறது.திட்டமிட்டு
பயணம் செய்தால் உங்கள் பயணம் இனிதாக அமையும் அந்த
வகையில் உங்கள் பயணத்தின் செலவை திட்டமிட ஒரு
பயனுள்ள இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றிதான் இந்த பதிவு.

உதாரணமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றால்
கூட சில நேரங்களில் நம் கையில் இருக்கும் பணம் எளிதாக
கரைந்துவிடும் அப்படி இல்லாமல் நாம் பயணத்தை திட்டமிட்டு
சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்ல பேருந்து அல்லது
இரயில் மூலம் செல்லும் செலவுக்கு ஆகும் பணம் அங்கு
சாப்பாட்டுக்கு,குடிதண்ணிருக்கு,எத்தனை நாள் தங்குகிறோமோ
அத்தனை நாளுக்கான ரூம் செலவு,விளையாட்டு பொருட்கள்,
அங்கிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் செலவு என
அனத்தையும் நாம் பயணம் செல்லும் முன்பே தீர்மானித்தால்
நம் பயணம் உண்மையிலே மகிழ்ச்சியானதாகமாறிவிடும். இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் செல்லும் பயணத்துக்கு ஆகும்
செலவை நாமே திட்டமிடலாம்.

இணையதள முகவரி:http://www.budgetyourtrip.com

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML Connectors 
Then”  Follow with (in sequence) 
|  “Or”  Select (only) one from the group
       Only one connector type per group — no mixing
இன்று பிப்ரவரி 22 
பெயர் : பேடன் பவல்,
பிறந்த தேதி : பிப்ரவரி 22, 1857
ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை
உருவாக்கியவர் ஆவார்.இவர் இங்கிலாந்தில்
பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906ஆம் ஆண்டு
சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910
இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

பிப்ரவரி 22, 2010 at 8:26 பிப 2 பின்னூட்டங்கள்

டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

டிவிட்டரை சமீபத்தில் தான் ஒரு வழிபடுத்தினர் ஹக்கர்கள் உடனடியாக
டிவிட்டர் தன் பாதுகாப்பை மேம்படுத்தியது. பாதுகாப்பு பணிக்கென்றே
(Security Engineer)ஐ அதிக அளவில் நியமித்தது இனி டிவிட்டரில்
கணினி கொள்ளையர்களை கண்டுபயப்பட தேவையில்லை என்ற
அறிவிப்பு டிவிட்டரில் இருந்து வெளிவந்தது.இந்த அறிவிப்பு வெளிவந்த
சில நாட்களில் கணினி கொள்ளையரின் அட்டகாசம் கொஞ்சம்
குறைந்து இருந்தது ஆனால் மறுபடியும் கொள்ளையர்கள் தங்கள்
பொழுதுபோக்கை நேரடியாக டிவிட்டரில் இப்போது ஆரம்பித்துவிட்டனர்
இதிலிருந்து உங்கள் கணக்கை எப்படி பாதுகாக்கலாம் என்பது பற்றிய
வழிமுறையை பற்றி பார்ப்போம்.

படம் 1

கணினி கொள்ளையர்கள் டிவிட்டரில் நேரடியாக உங்களுக்கு
“Direct Message” அதாவது நேரடியான அழைப்பு செய்தி
அனுப்புகின்றனர் ”என்னுடன் காபி அருந்த வருகிறிர்களா ”
அல்லது ”இந்த படம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது”அல்லது
“எனக்கு உங்களை பிடிக்கும் ஏன் தெரியுமா ? ” இப்படி பட்ட
வார்த்தைகளை அனுப்புகின்றனர் நாம் இப்படி வரும் செய்தியில்
உள்ள சுருக்கப்பட்ட முகவரி (Short url) சொடுக்கியதும்
நம் டிவிட்டர் கணக்கு அவர்கள் கையில்.எப்படி எல்லாம் செய்தி
வரலாம் என்று படம் 1-ல் காட்டியுள்ளோம். இதுபோன்று
உங்களுக்கு ஏதாவது செய்திவந்தால் அதை தவிர்த்துவிடுவது
நல்லது. உங்கள் டிவிட் கணக்கும்  பாதுகாப்பாக இருக்கும்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
XML Reserved Attributes 
xml:space Preserve whitespace or use default 
xml:lang  Indicate language of element and that 
     element’s attributes and children
இன்று பிப்ரவரி 21 
பெயர் : ராபர்ட் முகாபே,
பிறந்த தேதி : பிப்ரவரி 21, 1924
1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின்
தலைவராக உள்ளார்.1980 முதல் 1987வரை
பிரதமராக பதவி வகித்தார்.1987 முதல் இன்று
வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார்.
1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட
வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று
ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.
நம் தமிழை நேசிக்கும் நல்ல மனிதர்.

பிப்ரவரி 21, 2010 at 7:32 பிப பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்

எல்லோருக்கும் தனித்தனி இணையதளம் என்று வந்துவிட்டது
அந்த வகையில் நம் செல்லப்பிராணிகளுக்கும் மிகவும் உதவும்
வகையில் புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி
தான் இந்த பதிவு.

நம் செல்ல நாய்குட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று வைத்துக்
கொள்வோம் நமக்கு டாக்டரை சந்திக்க கூட நேரமில்லை என்றாலும்
உங்களுக்கு உதவ இந்த இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி: http://www.petfinder.com
இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் செல்லப்பிராணியை
தேர்ந்தெடுங்கள் உதாரணமாக உங்கள் நாய்க்குட்டி இரண்டு நாளாக
சரியாக சாப்பிடாமல் இருக்கிறது என்றாலும் அதற்கான தீர்வும்
இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதைத்தவிர செல்லப்பிராணியை
எப்படி வளர்க்க வேண்டும் என்றும் சொல்லித்தருகின்றனர்.உங்கள்
செல்லப்பிராணியின் புகைப்படத்தை இந்த தளத்தில் இலவசமாக
பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது. சிலருக்கு செல்லப்பிராணிகளை
போட்டிக்கு அழைத்து செல்லும் ஆசையும் இருக்கும் அந்த வகையில்
எங்கே எந்த நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான போட்டி நடக்கிறது
என்பதை பற்றிய முழுவிபரத்தையும் இந்த இணையதளம்
தெரிவிக்கிறது. எப்படி போட்டிக்கு செல்லும் பிராணிகளை பழக்கலாம்
என்று வீடியோவுடன் சொல்லித்தருகின்றனர்.இதையெல்லாம் தவிர
அனைத்து வளர்ப்பு பிராணிகளுக்கும் உரிய நடவடிக்கையை விரிவாக
எடுத்துகூறுகின்றனர். இதில் ஒவ்வொரு வளர்ப்பு பிராணிகளுக்கும்
என்று தனித்தனி குரூப்-ம் உள்ளது அந்தந்த குரூப்-ல் அதைப்பற்றி
விரிவாக நாம் பேசலாம்.இந்த இணையத்ளம் செல்லப்பிராணி
வைத்திருப்பவர்களுக்கு  ஒரு வரப்பிரசாதம் தான்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
getName() Returns the current thread’s name
getPriority() Returns the thread’s priority
 as an integer
இன்று பிப்ரவரி 20
பெயர் : கா. நமச்சிவாயம்,
பிறந்த தேதி : பிப்ரவரி 20, 1876
தமிழகத்தின் சிறந்த புலவராக தமிழறிஞராக
விளங்கியவர் தமிழ்ப்பேராசிரியர்.தைத்திங்கள்
முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட
வழி செய்தவர்.திருவள்ளுவருக்கு முன் -
திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால
அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற
துணையாக உ.வே.சாமிநாதய்யரும்,மறைமலை
அடிகளாரும் இருந்தனர்.

பிப்ரவரி 20, 2010 at 7:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: