Archive for மார்ச் 4, 2010
டிவிட்டரில் யாரை எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் ஒரே நிமிடத்தில்
டிவிட்டரில் நண்பர்களின் டிவிட்டர் முகவரியை கொடுத்து
அவர்களை எத்த்னை பேர் பின் தொடர்கின்றனர் என்று
பார்க்கலாம். அவர்கள் செய்த டிவிட் மொத்தம் எத்தனை
என்று டிவிட்டரின் இணையதளத்திற்கு செல்லாமலே
பார்க்கலாம். உங்கள் டிவிட்டரிலும் உங்களின் நண்பர்
டிவிட்டரிலும் உங்களை பொதுவாக பின்தொடர்பவர்கள்
எத்தனை பேர் என்று எளிதாக தேடலாம் இதைப்பற்றி
தான் இந்த பதிவு.

படம் 1
இணையதள முகவரி : http://twiangulate.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் யாருடைய டிவிட்டர்
முகவரியை வேண்டுமானாலும் கொடுத்து தேடலாம். அதுவும்
ஒரே நிமிடத்தில் அவர்களை பின் தொடர்பவர்கள் எத்த்னை பேர்
என்று எளிதாக பார்க்கலாம் அதேடு இதுவரை அவர் செய்துள்ள
மொத்த டிவிட் எததனை என்ற முடிவும் உடனடியாக கிடைக்கும்.
உதாரணமாக நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் டிவிட்டரின்
முகவரியை கொடுத்து தேடினோம் அவரை பின்தொடர்பவர்கள்
எத்தனை பேர் என்று படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
அடுத்து இதே போல் நம் முகவரியும் நண்பர்களின் டிவிட்டர்
முகவரியையும் கொடுத்து Common followers -ஐ கண்டுபிடிக்கலாம்.
இதே போல் Common friends -ஐயும் கண்டுபிடிக்கலாம்.
உதாரணமாக பில்கேட்ஸ்க்கும் வின்மணிக்கும் உள்ள Common followers
எத்த்னைபேர் என்று கொடுத்து பார்க்கும் போது ஒருவரும் இல்லை
(கொஞ்சம் வருத்தமான செய்திதான் நம்மை தொடரும் நண்பர்கள்
முடிந்தால் நம் சங்கத்தலைவரையும் பாலோ செய்யுங்கள் ).
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் JAVA Method Description focusGained() Invoked whenever a component gains keyboard focus. focusLost() Invoked whenever a component loses keyboard focus. keyTyped() Invoked whenever a key is typed
இன்று மார்ச் 41931 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரிட்டனின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.