Archive for மார்ச் 7, 2010
சில நிமிடங்களில் ஆன்லைன் -ல் குவிஸ் உருவாக்கலாம்.
ஆன்லைன் -ல் ரெஸ்யும் உருவாக்கலாம் என்பதெல்லாம்
பழசாகிவிட்டது போல இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக
நாம் குவிஸ் உருவாக்கலாம் இதைப் பற்றி தான் இந்த பதிவு.
ஜாவா ஸ்கிரிப்ட் ஐ பயன்படுத்தி நாம் எளிதாக குவிஸ்
உருவாக்கலாம். வழக்கமாக குவிஸ் உருவாக்க அதிகநேரம்
எடுத்து கொள்ளும் ஆனால் இந்த குவிஸ் ஆன்லைன்-ல் சில
நிமிடங்களில் யார் துணையும் இல்லாமல் உருவாக்கிவிடலாம்.
ஒவ்வொரு குவிஸ்க்கும் தனித்தனியாக டைட்டில் கொடுத்து பிரித்து
வைத்துக்கொள்ளலாம். கணிதம் என்றால் கணிதவகையான
கேள்விகள் இருக்கும் என்று டைட்டிலில் கொடுக்கலாம்.
ஒரு கேள்விக்கு உதாரணமாக ஐந்து பதில்கள் வரை கொடுத்து
வைத்துக்கொள்ளலாம், இதைத்தவிர ஒவ்வொரு கேள்விக்கும்
Feedback வாங்கிக்கொள்ளலாம். சில குவிஸ் கேள்விகளுக்கு
படம் வைக்க வேண்டியதிருக்கும் அவ்வாறு கேள்வியுடன் படம்
சேர்க்க வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம்.
போட்டித்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் , பட்டதாரிகள்
போன்றவர்கள் இதைப்போல் சிறிதாக குவிஸ் ஒன்றை உருவாக்கி
வைத்து இணையதளத்தில் இருக்கும் நண்பருடன் தன் அறிவை
பகிர்ந்துகொள்ளலாம். பிராக்டிஸ் மற்றும் கிரேடட் என இரண்டு
வசதியும் உள்ளது. உங்கள் இணையதளம் அல்லது பிளாக்-ற்கு
லிங் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். குவிஸ் என்பது எல்லாத்
துறைக்கும் தேவையான ஒன்று கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
இணையதளமுகவரி : http://www.attotron.com/pub/Quizmake.htm
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் JAVA Method Description windowOpened() Invoked when the window is made visible for the first time. windowClosing() Invoked when the user attempts to close the window from the Windows system menu. windowClosed() Invoked when the window has been closed as a result of calling the dispose() method. windowActivated() Invoked when the window is made active i.e. the window can receive keyboard events.
இன்று மார்ச் 7பெயர் : ஸ்டான்லி குப்ரிக் , மறைந்த தேதி : மார்ச் 7, 1999 ஒரு செல்வாக்குப் பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும்,தயாரிப்பாளரும் ஆவார். இவர் மிகவும் புகழ் பெற்றனவும், சில சமயங்களில் சர்ச்சைக்கு உரியனவுமான பல படங்களை இயக்கியுள்ளார். படங்களுக்கான கருப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் கவனம், மெதுவாக வேலை செய்தல், அவரது ஆக்கங்களின் பல்வகைத் தன்மை, தொழில்நுட்பத் துல்லியம் என்பவை இவருடைய குறிப்பிடத்தக்க இயல்புகள்.