Archive for ஏப்ரல், 2010
கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி
கூகுள் ஜீடாக்-ல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருப்போம் சில
நேரங்களில் நாம் வெளியே சென்றதும் நண்பர் ஏதாவது தகவல்
கொடுத்தால் Auto Reply செய்துவைத்தால் அவருக்கு உடனடியாக
தகவல் கொடுக்கப்பட்டுவிடும் எப்படி செய்யலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1
ஜீடாக்-ல் ஸ்டேட்டஸ் மெசேஸ் கொடுத்து வைக்கலாம் சில
நேரங்களில் நாம் பிஸியாக இருப்பதாக வைத்திருப்போம் அல்லது
பாட்டு கேட்டுகொண்டிருக்கிறோம் என்று பல Status மேசேஸ்
கொடுத்து வைத்திருப்போம் இனி அதையும் தாண்டி நாம் ஜீடாக்
ஆன் செய்துவிட்டு வெளியே சென்றாலும் நமக்கு ஜீடாக்-ல் யாராவது
தொடர்பு கொண்டால் உடனடியாக அவருக்கு என்ன பதில் கொடுக்க
வேண்டும் என்பதை முதலிலே Autoreply கொடுத்து வைக்கலாம்
இதற்க்காக ஒரு சிறப்பு மென்பொருள் உள்ளது இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://gtalkautoreply.codeplex.com
இந்த மென்பொருளை தரவிரக்கி இன்ஸ்டால் செய்து Run செய்ததும்
படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும் இதில் நம் ஜீமெயில்
நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து அடுத்ததாக
Message என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்க்குள் நாம் என்ன
Autoreply செய்தி கொடுக்கவேண்டுமோ அதை கொடுத்தபின்
Save and Enable Autoreply என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரலாம் இனி உங்களை ஜீடாக்-ல் யாராவது தொடர்பு
கொண்டால் உடனடியாக அவருக்கும் நாம் கொடுத்து வைத்திருக்கும்
Autoreply சென்றுவிடும்.கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “ நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான நண்பன் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ? 2.நதிகள் இல்லாத நாடு எது ? 3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ? 4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ? 5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ? 6.ஈரானின் பழைய பெயர் என்ன ? 7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ? 8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ? 9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில் உள்ளது ? 10.லில்லி பூக்களை உடைய நாடு எது ? பதில்கள்: 1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன், 4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர், 8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30பெயர் : தாதாசாஹெப் பால்கே, பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி
லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1
கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.
முகவரி : http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe
இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும் தீங்கு செய்ய மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ? 3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ? 4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ? 5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ? 6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ? 7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ? 8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ? 9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ? 10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ? பதில்கள்: 1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள், 5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ, 9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29பெயர் : ரவி வர்மா, பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848 நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.
இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்
சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 4
இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது வேகம் இல்லை என்று கூறும்
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம். முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.
வின்மணி சிந்தனை அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை இல்லாமல் சென்றுவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ? 2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? 3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ? 4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ? 5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது? 6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ? 8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ? 9.சூரியனின் வயது ? 10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? பதில்கள்: 1.1964,2. தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை, 5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள், 9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28பெயர் : உ.வே.சாமிநாதையர், பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942 பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட்
அமெரிக்கவில் அதிகமான பேர் பார்க்கும் முதல் இணையதளமாக
இருந்த கூகுளை பேஸ்புக் இணையதளம் பின்னுக்கு தள்ளி முதல்
இடம் பிடித்துள்ளது இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.
எதற்க்கு என்றாலும் கூகுள் தான் என்று ஆகிவிட்ட இந்த நிலையில்
கூகுளின் முதலிடத்தை சற்று அசைத்து பார்த்திருக்கிறது பேஸ்புக்.
அதிகமான பேர் திரும்ப திரும்ப பயன்படுத்தும் இணையதளமாக
பேஸ்புக் முதல் இடத்தில் வந்துள்ளது. தொடமுடியாத இடத்தில்
இருந்த கூகுள் முதன் முறையாக இப்போது தான் இரண்டாவது
இடத்திற்க்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் நம் சங்கத்தலைவர்
பில்கேட்ஸ் பேஸ்புக் -உடன் டாக்ஸ்-ல் இணைந்தார் என்ற
செய்தியை வெளியீட்டு இருந்தோம் ஏன் பேஸ்புக்-ல் மைக்ரோசாப்ட்
டாக்ஸ்-ஐ இணைந்தார் என்று புரியாத புதிராக இருந்த நமக்கு
இப்போது தான் உண்மை தெரிந்திருக்கிறது. (சோலையன் குடுமி
சும்மா ஆடுமா ) ஆனாலும் இது நிரந்தரமில்லை என்று தான்
தோன்றுகிறது. கூகுள் கொடுக்கும் சேவையில் ஒன்றை கூட்டினால்
கூட அவர்கள் முதலிடத்தை மட்டுமல்ல யாரும் நெருங்ககூட முடியாத
இடத்தை பிடிப்பார்கள் என்பது நம் நோக்கம்
வின்மணி சிந்தனை தன் சுயலாபத்துக்காக மக்களை அடிமையாக நடத்தும் அரசியல்வாதிகள்,அதிகாரிகளின் வாழ்நாள் இறுதி காலம் மிக மிக மோசமாக இருக்கும் தண்ணீர் கொடுக்க கூட யாரும் வரமாட்டார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவுடன் இணைந்த 22 வது மாநிலம் எது ? 2.தமிழ் நாட்டில் முதலில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட ஊர் எது ? 3.மன்னர் அதியமான் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் எது ? 4.பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார் ? 5.பிரான்ஸ் நாட்டு அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 6.இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ? 7.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம் எது ? 8.இலங்கையின் தேசிய விளையாட்டு எது ? 9.கோகோ விளையாட்டின் தாயகம் எது ? 10.எரிமலையே இல்லாத கண்டம் எது ? பதில்கள்: 1. சிக்கிம்,2. தரங்கம்பாடி, 3.தர்மபுரி, 4.கவர்னர் , 5.ஏழு ஆண்டுகள்,6.சந்திரலேகா,7. வில்லோ மரம், 8. ரக்பி,9. இந்தியா, 10.ஆஸ்திரேலியா
இன்று ஏப்ரல் 27பெயர் : வலேரி பொல்யாக்கொவ் பிறந்த தேதி : ஏப்ரல் 27, 1942 ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார். மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் 14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.
இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்
விடுமுறை தொடங்கிவிட்டது நம் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
விடுமுறை மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை எப்படி
அனுப்பலாம் என்று பார்க்கப்போகிறோம் இதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

படம் 1
பிறந்த நாள் வாழ்த்து முதல் திருமண நாள் வாழ்த்து வரை அனைத்து
திருவிழாவுக்கும் வாழ்த்து அட்டைகளை எளிதாக உடனடியாக
உருவாக்கி நம் நண்பருக்கும் உறவினருக்கும் எளிதாக அனுப்பலாம்
இதற்க்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.

படம் 2

படம் 3
இணையதள முகவரி : http://www.cardsimple.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
send this card என்ற பட்டனை அழுத்தவும் அடுத்து படம் -2 ல்
காட்டியபடி நாம் அனுப்பும் வாழ்த்துச்செய்தியை தட்டச்சு செய்யவும்.
தட்டச்சு செய்து முடித்ததும் அனுப்புபவரின் பெயர் மற்றும் இமெயில்
முகவரி அடுத்து பெறுநர் பெயர் மற்றும் இமெயில் முகவரியை
கொடுத்து என்றைக்கு வாழ்த்துச்செய்தி கிடைக்க வேண்டும் என்ற
தேதியைம் கொடுத்து preview என்ற பட்டனை அழுத்தவும் எந்த
கணக்கும் தேவையில்லை. இப்போது படம் 3-ல் காட்டியபடி
send card என்ற பட்டனை அழுத்தி படத்தை எளிதாக அனுப்பலாம்.
பல்வேறுபட்ட வாழ்த்துச்செய்திக்கான அட்டை மற்றும் செய்தியும்
உள்ளே இருக்கிறது இதில் நமக்கு ஏது வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து இதே போல் எளிதாக அனுப்பலாம்.
வின்மணி சிந்தனை நண்பர்கள் செய்யும் உதவி ஆற்று நீர் போல ஆனால் உறவினர்க்ள் செய்யும் உதவி கிணற்று நீர் போல.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியா சுதந்திரம் அடையும் முன் இருந்த சமஸ்தானங்கள் எத்தனை ? 2.மகாத்மா காந்தியின் அன்னை பெயர் என்ன ? 3.பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் ? 4.தமிழகத்தில் முதன் முதலில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்ட இடம் எது ? 5.ஞானபீட விருதை உருவாக்கியவர் யார் ? 6.இசைத் தட்டினை கண்டுபிடித்தவர் ? 7.பாரதியார் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ? 8.தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படுவது எது ? 9.முதல் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை நாடுகள் பங்கு பெற்றன? 10.பழைய ஓவியத்தை புதுப்பிக்க பயன்படும் கதிர் ? பதில்கள்: 1.586,2.புத்திலிபாய், 3.தமிழ்நாடு , 4.சேலம் , 5.ரமாதேசி ஜெயின்,6.பெர்லின்,7. இந்தியா, 8.திருக்குறள்,9. 15 நாடுகள், 10.புறஊதா கதிர்
இன்று ஏப்ரல் 26பெயர் : இராமானுஜர் மறைந்த தேதி : ஏப்ரல் 26, 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். உங்களால் பாரததேசத்திற்க்கே பெருமை.
நாசா வெளியீட்டுள்ள சூரியனின் பிரேத்யேகமான படம் மற்றும் வீடியோக்கள்
அமெரிக்காவின் நாசா வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயற்க்கைக்
கோள் உதவியுடன் சூரியனின் வெவ்வெறு விதமான படம் மற்றும்
வீடியோக்களை வெளியீட்டுள்ளது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.
வெகுவிரைவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூரியனின்
அரியவகை புகைப்படம் மற்றும் வீடியோவை செயற்கைகோள்
உதவியுடன் எடுக்கப்பட்டு நேற்று வெளிவந்துள்ளது. சூரியனின்
காட்சிகளைப் பார்க்கும் போது சற்றே மெய்சிலிர்க்க வைக்கிறது.
அறிவியல் பூர்வமான காட்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளதான்
வேண்டும் என்றாலும் சாதாரணமாக சூரியனிடம் கூட நெருங்க
முடியாத அளவு வெப்பம் இருந்தும் அத்தனையும் தாண்டி நாசா
விஞ்ஞானிகள் அதிநவீன சிறப்பு கேமிரா ஒன்றை வடிவமைத்ததோடு
இல்லாமல் வெற்றிகரமாக அனுப்பி எதிர்பார்த்தபடி வெற்றியும்
பெற்றிருக்கின்றனர். இந்த நவீன கேமிராவால் சூரியனை சுற்றி
எடுக்கப்பட்ட படம் மற்றும் விடியோக்களை இத்துடன்
இணைத்துள்ளோம்.
படம் நன்றி நாசா
வின்மணி சிந்தனை நாம் வறுமையில் இருக்கும்போது கடவுள் நம்முடன் இருக்கிறார். நாம் பணக்காரர் ஆக இருக்கும் போது கடவுளைத் தேடி எங்கெங்கொ அலைகிறோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சிந்துசமவெளி மக்கள் அறியாத மிருகம் எது ? 2.இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட இடம் ? 3.இந்திய இராணுவத் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? 4.சர்வதேச நீதிமன்றத்தின் தலமையகம் எங்குள்ளது ? 5.இந்தியாவின் முப்படைத் தலைவர் யார் ? 6.பாலே நடனத்தை கண்டுபிடித்தது எந்த நாடு ? 7.3டி சினிமா எப்போது அறிமுகமானது ? 8.ஒலிம்பிக் போட்டியில் தீபம் ஏற்றும் நாடு எது ? 9.மனித இரத்தங்களில் அபூர்வமானது ? 10.ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள்: 1. குதிரை,2.கொல்கத்தா, 3.ஜனவரி 15, 4.தி ஹேக் , 5.குடியரசுத் தலைவர்,6.பிரான்ஸ் 7. 1955, 8.கிரேக்கம்,9. A-H, 10.டன்லப்
இன்று ஏப்ரல் 25பெயர் : மார்க்கோனி பிறந்த தேதி : ஏப்ரல் 25, 1874 வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார்.1890 மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம் [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.
ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.
ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட்-ன் ஆபிஸ்
வேர்ட்-ல் எளிதாக எப்படி பார்க்கலாம் என்பதை பற்றிதான்
இந்த பதிவு.

படம் 1

படம் 2
மைக்ரோசாப்ட்-ன் பயன்பாடு பற்றி சொல்வதென்றால் நமக்கு
நேரம் காணது. சில பொருள்களுக்கான வார்த்தையை நாம்
இணையத்தில் சென்று தேடுவதற்க்கு பதில் மைக்ரோசாப்ட்
வேர்டு-ல் எளிதாக பார்க்கலாம். இதற்க்கு நாம் மைக்ரோசாப்ட்
வேர்டு- ஐ திறந்து நாம் தட்டச்சு செய்வதை தொடங்கலாம் எந்த
வார்த்தைக்கான பொருளுள்ள வார்த்தை தேவையோ அந்த
வார்த்தையின் மேல் வைத்து Right Clik செய்யவும் அதில் Synonyms
என்பதில் சென்றால் அதில் நாம் தேர்ந்தெடுத்த வார்த்தைக்கான
பல வகையான வார்த்தைகளை பார்க்கலாம் எது தேவையோ
அதை எடுத்துக் கொள்ளலாம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் people என்ற வார்த்தையின் மேல்வைத்து
Right Click செய்து Synonyms என்பதை தேர்ந்தெடுத்துள்ளோம்
இதற்க்கான ஒரே பொருளுள்ள வார்த்தை படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது. இண்டெர்நெட் இணைப்பு இல்லாத நேரத்திலும்
நாம் வேர்ட்-ல் பொருளுக்கு இணையான வார்த்தையைப்
பார்க்கலாம் கண்டிப்பாக இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை ஞானம் வருவதற்கு எளிய வழி “ ஒரு மனிதன் இறந்த பின் என்ன நடக்கிறது என்பதை உள் மனதால் ஆழ்ந்து பார்த்தால் ஞானம் உன்னைத்தேடி வரும் ”
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பாரதரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி யார் ? 2.இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது ? 3.”வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டவர் யார் ? 4.பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது ? 5.ராஜ் சபா உறுப்பினர்களின் பதிவிக்காலம் எத்தனை ஆண்டு ? 6.இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவ்ர் யார் ? 7.உலகின் மிகப்பெரிய மசூதி எது ? 8.உலகின் முதல் பெண் பிரதமர் யார் ? 9.2012 -ல் ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடக்க இருக்கிறது ? 10. உலகிலே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது ? பதில்கள்: 1.டாக்டர் இராதாகிருஷ்ணன்,2.1963, 3.தந்தை பெரியார், 4.தாராள பணப்புழக்கம் ,குறைந்த உற்பத்தி, 5. 6 வருடம் 6.தாதா சாகேப் பால்கே, 7. ஜீம்மா மசூதி(டெல்லி), 8.பண்டார நாயகா (இலங்கை),9. இங்கிலாந்து, 10.சீனா
இன்று ஏப்ரல் 24பெயர் : சச்சின் டெண்டுல்கர் பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973 தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால் இந்தியாவுக்கு பெருமை.
பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்
பேஸ்புக் நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் டாக்ஸ்
என்ற சேவையை மக்களுக்கு கொடுப்பதற்க்காக இணைந்துள்ளனர்
இதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.
உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்டு முதலிடத்தில்
இருந்து வரும் பேஸ்புக் டிவிட்டர் வந்த பின் கொஞ்சம் பயனாளர்கள்
பேஸ்புக் பயன்படுத்துவது குறைந்து வருகிறது இதேப் போல் தான்
மைக்ரோசாப்ட்-ன் நிலமையும் கூகுள் டாக்ஸ் வந்த பின் அதிக
பயானர்கள் கூகுள் பக்கம் திரும்பியுள்ளனர் இதற்க்கு தீர்வாக
இரண்டும் கைகோர்த்து மைக்ரோசாப்ட்-ன் டாக்ஸ் -ஐ இனி
பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் நண்பர்களிடம் எளிதாக
பகிர்ந்துகொள்ளலாம். தன் சேவையை அனைத்து மக்களிடமும்
எடுத்துச்செல்லவும் கூகுள் டாக்ஸ் -க்கு போட்டியாக அதிக
பயனார்களை எளிதாக பிடிக்கும் நோக்கத்துடன் தான் மைக்ரோசாப்ட்
இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பேஸ்புக் வாடிக்கையாளர்கள்
http://docs.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் எல்லா
கோப்புகளையும் பேஸ்புக்-ல் உள்ள அனைவரிடமும் எளிதாக
பகிர்ந்து கொள்ளலாம். இப்படியே சென்றால் கூகுள் டாக்ஸ்-ம்
டிவிட்டரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.
வின்மணி சிந்தனை அதிக பணம் வைத்திருப்பவனுக்கு கடைசிகாலத்தில் போதுமான நிம்மதி இல்லாமல் போகிறது. நடுத்தரவாசிக்கு வாழ்நாளின் கடைசி காலம் அன்பாகவும் சந்தோஷமாகும் நிம்மதியாகவும் இருக்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிர்மானிக்கப்பட்ட முதல் துறைமுகம் எது ? 2.இந்தியாவில் சிவில் சர்வீஸ் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? 3.அன்னை தெரசா மரணமடைந்த ஆண்டு ? 4.உலகின் முதல் பெண் டாக்டர் யார் ? 5.தமிழகத்தை ஆண்ட முதல் பெண் அரசி யார் ? 6.இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற ஆண்டு எது ? 7.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ? 8.வைரஸால் ஏற்படாத ஒரு நோய் எது ? 9. நர்மதை நதி எந்தக் கடலில் கல்க்கிறது ? 10. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது ? பதில்கள்: 1.சூரத்,2.ரிப்பன் பிரபு, 3.1997, 4.மேரி ஷெர்லிப்(லண்டன்), 5.வேலு நாச்சியார்,6.1948, 7.பேஸ்பால்,8.டைபாய்டு 9. அரபிக்கடல் 10.கனடா
இன்று ஏப்ரல் 23பெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916 ஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார், ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் "பார்ட் ஆஃப் அவான்" (அல்லது வெறுமனே "தி பார்ட்") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வரிசைகள் இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் உள்ளன.
நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
தினமும் பல இலட்சம் இணையதளம் வந்து கொண்டுதான் இருக்கிறது
இதில் நமக்கு பிடித்த இணையதளங்களை ஆன்லைன் மூலம் எளிதாக
எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
நண்பர் புதுவை சிவா ஆன்லைன் மூலம் இணையதளங்களை சேமிக்க
ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டிருந்தார் தேவையான கேள்வியை
சரியான நேரத்தில் கேட்டிருக்கிறார் நன்றி . நாம் பார்க்கும் பல இணைய
தளங்களில் சில இணையதளங்களை நம் கணினியில் சேமித்து
வைப்பதை விட ஆன்லைன் மூலம் சேமித்து வைத்தால் நாம் எங்கு
சென்றாலும் இந்த இணையதளங்களுக்கு எளிதாக செல்லலாம் நமக்கு
உதவுவதற்க்காக ஒரு இணையதளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.transferr.com

படம் 2

படம் 3
இந்த இணையதளத்திற்க்கு சென்று Register என்பதை அழுத்தி படம் 1-ல்
காட்டியபடி ஒரே நிமிடத்தில் உங்கள் கணக்கை உருவாக்கி
கொள்ளலாம். உங்கள் கணக்கை உருவாக்கி முடித்ததும் உங்கள்
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
செல்லவும். அடுத்து 1 முதல் 15 வரை கட்டங்கள் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் உங்களுக்கு பிடித்த எண்ணின் மேல் வைத்து
சொடுக்கி படம் 2 -ல் காட்டியபடி இனையதளத்துக்கான
தலைப்பையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இப்படி உங்களுக்கு பிடித்த இணையதளங்களை பிடித்த எண்ணில்
சேமித்துக் கொள்ளலாம். படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இனி நாம்
எங்கு சென்றாலும் இந்த இணையதளத்தில் நம் கணக்கை திறந்து
நாம் சேமித்து வைத்த இணையதளங்களுக்குள் எளிதாக செல்லலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அதிக கணினி அறிவு உள்ளவன் பணிவாக இருப்பான் ஆனால் அரை குறை படித்தவன் சும்மா இருக்காமல் படம் போட்டுக் கொண்டே காலத்தை நகர்த்துவான் என்றாவது ஒரு நாள் உண்மை வெளிச்சத்தில் வரும். TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சென்னை வானொலியில் முதலில் ஒலிபரப்பான பாடல் எது? 2.புக்கர் பரிசு எதற்க்காக வழங்கப்படுகிறது ? 3.இராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர் யார் ? 4.கீதாஞ்சலியின் ஆசிரியர் யார் ? 5.புரோட்டீன்களில் காணப்படும் தனிமம் எது ? 6.காஸ்பியன் கடல் எந்த நாட்டில் உள்ளது ? 7.உலகமக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது? 8.மழை நீரின் வேகம் என்ன ? 9.பாலில் உள்ளதைவிட அதிகமாக கால்சியம் உள்ள காய்கறி எது? 10.தமிழக அரசின் சின்னம் எது ? பதில்கள்: 1.திருவடி சரணம்,2.இலக்கிய சேவைக்கு, 3.வால்மீகி, 4.இரவீந்தரநாத் தாகூர், 5.நைட்ரஜன்,6.ஈரான்,7.ஜெனிவா, 8.மணிக்கு 7 மைல், 9. வெங்காயம், 10.கோபுரம் இன்று ஏப்ரல் 22பெயர் : இம்மானுவேல் கண்ட் பிறந்த தேதி : ஏப்ரல் 22, 1724 ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர். இவர் கிழக்குப் பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். இவரது முதலாவது தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது.