Archive for மார்ச் 27, 2010

எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்

நம் பெயரின் எழுத்துக்கு ஏற்ற எழுத்து உள்ள படத்தை பிளிக்கரில்
இருந்து சில நிமிடங்களில் தேடி எடுக்கலாம். பெயரின் எழுத்தை
வைத்து அதை எப்படி படமாக தேடி எடுக்கலாம் என்பதைப் பற்றித்
தான் இந்த பதிவு.

நம் பெயர்,நிறுவனத்தின் பெயர் அல்லது நமக்கு பிடித்தமான
பெயர்-க்கு தேவையான எழுத்து வரும் படத்தை சில நொடிகளில்
நமக்கு எளிதாக எடுத்துக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது

இனையதள முகவரி :  http://picurio.us

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் எந்த எழுத்துக்கு இணையான
படம் வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து தேடவேண்டியது
தான் சில நிமிடங்களில் நாம் கொடுத்த் தகுந்த சரியான எழுத்து உள்ள
படத்தை தேர்ந்தெடுத்து நமக்கு கொடுக்கும். எந்த விளம்பரமும்
இல்லாமல் முகப்பு பக்கம் எளிதாக உள்ளது. இதில் என்ன விநோதம்
இருக்கிறது என்றால் ஒரே வார்த்தையை எத்தனை முறை கொடுத்து
தேடினாலும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு படத்தை
தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிலருக்கு தங்கள் பெயரை எப்படி
எல்லாம் அழகுபடுத்தலாம் என்ற ஆசை இருக்கும் அப்படிப்பட்ட
நண்பர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி இன்றைய சிந்தனை
நல்ல நடத்தையும் நீதி தவறாத செயலும் ஒரு
ஆன்மீகவாதிக்கு முக்கியமான ஒன்று. இதை மீறினால்
ஆன்மீகவாதி செய்த ஒரு சில நல்லது கூட அனைவராலும்
மறக்கப்படும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP libxml Functions
libxml_clear_errors()    Clear libxml error buffer
libxml_get_errors()      Retrieve array of errors
libxml_get_last_error()  Retrieve last error from libxml
இன்று மார்ச் 27 
பெயர் : விபுலாநந்தர் ,
பிறந்த தேதி : மார்ச் 27, 1892
கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி
வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர்.
இலக்கியம், சமயம், தத்துவஞானம்,
அறிவியல்,இசை முதலிய பல துறைகளில்
கற்றுத் தேர்ந்த புலவர். தமிழ் மொழிக்கு
நீங்கள் செய்த சேவைக்கு என்றும் நன்றி.

மார்ச் 27, 2010 at 7:19 பிப 12 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...