விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி
மார்ச் 29, 2010 at 11:01 பிப 17 பின்னூட்டங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியவும் தமிழ்நாடு அரசும்
இணைந்து நடத்தும் உலகத்தமிழ் இணையமாநாட்டுக்கான கட்டுரைப்
போட்டியில் தமிழர்கள் அனைவரும் பங்குபெற்று தமிழின் பெருமையை
உலகறியச்செய்யவேண்டும் என்பதற்கான சிறப்புப்பதிவு.
ஒன்பதாவது உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணையத்தமிழ்
செம்மொழி மாநாட்டையும் வரும் 2010-ஆம் ஆண்டு சூன் மாதம்
23-ம் திகதி முதல் சூன் 27-ம் திகதி வரை கோயம்புத்தூரில் நடத்த
தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து அதற்கான முழு ஈடுபாட்டுடன் ஆயத்தப்
பணிகளை செய்து வருகிறது.தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் இணையதள
மாநாட்டுக்காக அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் கட்டற்ற
களஞ்சியமான விக்கிப்பீடியாவுடன் இணைந்து வலைவாசல் கட்டுரைப்
போட்டியை நடத்துகிறது.இப்போட்டியில் கலை,அறிவியல்,பொறியியல்,
மருத்துவம்,விளையாட்டு, வேளாண்மை, சட்டம்,கல்வியியல்,
இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி),சித்த மருத்துவம்,பல்
மருத்துவம்,செவிலியர், கால்நடை மருத்துவம்,பல்தொழில்நுட்பப்
பயிலகம் முதலியதுறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு
கொள்ளலாம். ஒவ்வொரு துறையிலும் சிறந்த தகவல் பக்கங்களை
எழுதுவோருக்குப் மதிப்பு மிகுந்தபரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள்:
1. தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில்
நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல்,
தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500
வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும்.
4. தகவல் பக்கங்களை ஏப்ரல் 30, 2010க்குள் நிறைவு செய்து
http://tamilint2010.tn.gov.in இணையத் தளத்தின் வழியாக
அனுப்ப வேண்டும்.
5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
6. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்
இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன்
இங்கு தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்
பீடியாவில் சேர்க்கப்படும்.
8. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
மேலும் இதைப்பற்றிய கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள
வின்மணி இன்றைய சிந்தனை
தாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்
தாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்
உழவர் மேன்மையானவர்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் PHP Directory Functions opendir() Opens a directory handle readdir() Returns an entry from a directory handle rewinddir() Resets a directory handle scandir() Lists files and directories inside a specified path
இன்று மார்ச் 292007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள் கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: விக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி.
1.
நீச்சல்காரன் | 11:51 பிப இல் மார்ச் 29, 2010
நல்ல தகவல்
http://tamilint2010.tn.gov.in/ எனக்கு இந்த தளம் கடந்த ஒரு வாரமாக திறக்கமுடிவதில்லை
2.
winmani | 12:20 முப இல் மார்ச் 30, 2010
தொழில் நுட்பகோளாறாக இருக்கலாம் விரைவில்
சரியாகிவிடும்..
நன்றி
3.
nanrasitha | 5:58 முப இல் மார்ச் 30, 2010
//தாய் நாட்டில் படித்து வெளிநாட்டில் பணத்துக்காக வேலைசெய்யும்
தாயை மறந்தவரைவிட விட, தாய் நாட்டிற்காக விவசாயம் செய்யும்
உழவர் மேன்மையானவர்.
அருமை
4.
winmani | 7:37 முப இல் மார்ச் 30, 2010
நன்றி
5.
Arun | 9:21 முப இல் மார்ச் 30, 2010
Hi , Thanks for ur information.
Arun Prasath J
Bangalore.
6.
winmani | 5:09 பிப இல் மார்ச் 30, 2010
@Arun நன்றி
7.
hari | 8:58 முப இல் மார்ச் 31, 2010
Hai, Thanks for information.It is very useful
8.
winmani | 5:01 பிப இல் மார்ச் 31, 2010
@ hari
நன்றி
9.
ரவி | 11:10 முப இல் மார்ச் 31, 2010
வணக்கம்,
நான் தங்களது வலைப்பக்கத்தின் நீண்ட நாளைய வாசகன்… ஆனால் இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்…
தங்களது அனைத்து பதிவுகளும் அதைத்தொடர்ந்த சிந்தனையும் செய்தியும் வரவேற்கும் விதமாக உள்ளது…
தங்களது பணி தொடர என் வாழ்த்துக்கள்…
அன்புடன்..
ரவி
10.
winmani | 5:02 பிப இல் மார்ச் 31, 2010
@ ரவி
நன்றி
11.
ரவி | 5:22 முப இல் ஏப்ரல் 1, 2010
தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி.
//. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும்
இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.//
என்பதில் இந்தப் பக்கத்தில் என்பதற்குப் பதில்
http://ta.wikipedia.org தளத்தில் என்று மாற்ற முடியுமா
நன்றி
12.
winmani | 5:44 முப இல் ஏப்ரல் 1, 2010
@ ரவி
நண்பருக்கு தாங்கள் நம் இணையதளத்தில் அந்த இணைப்பை (லிங்) சொடுக்கி பார்த்து இருந்தால் தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்
மறுபடியும் முயற்சித்து பாருங்கள்.
நன்றி
13.
ரவி | 3:23 பிப இல் ஏப்ரல் 18, 2010
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
போட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி,
இரவி.
14.
winmani | 7:23 பிப இல் ஏப்ரல் 18, 2010
@ ரவி நன்றி
15.
rajkumar | 4:36 பிப இல் ஏப்ரல் 25, 2010
super.very good idea.i love tamil team
16.
rajkumar | 4:49 பிப இல் ஏப்ரல் 25, 2010
tamil nadu cm is very good idea and very super in tamil nadu pupils.all side tamil and allthinks tamil.every tamil people is happy .tamil manadu.cm mr.kalanger karunanithi is very super man pa.all people loves you
17.
winmani | 6:49 பிப இல் ஏப்ரல் 26, 2010
@rajkumar நன்றி