குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்

ஏப்ரல் 4, 2010 at 5:22 பிப 8 பின்னூட்டங்கள்

சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும்
தேவையான அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு விடியோக்கள்
அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது இதைப்பற்றி தான் இந்த
பதிவு.

படம் 1

இண்டர்நெட் ஐ பொருத்தவரை குழந்தைகள் பார்பதற்கு தகுந்த மாதிரி
பல இணையதளங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்காகவே சிறப்பான
முறையில் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
தளத்தில் குழந்தைகள் அறிவை வளர்க்கும் விடியோக்கள் மற்றும்
பல வேடிக்கை விளையாட்டுகள் விளையாடுவது எப்படி எப்பதை
பற்றிய விடியோவும் செல்லப்பிரானிகள் செய்யும் சுட்டித்தனங்களைப்
பற்றிய அனைத்து விடியோக்களும் இந்த இணையதளத்தில்
இலவசமாக கிடைக்கிறது. உங்கள் செல்லக்குழந்தை செய்யும் சுட்டித்
தனத்தை நீங்கள் உலகறிய செய்யலாம் இந்த இணையதளத்தின்
மூலம் எப்படி என்றால் இந்த இணையத்ளத்தில் நீங்கள் புதிதாக
ஒரு இலவச கணக்கை உருவாக்கி உங்கள் குழந்தைகளின் சுட்டி
விடியோவை பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விடியோக்
களை நாம் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அன்பான தந்தை
குழந்தைக்காக சொல்லும் வேடிக்கை கதைகளை கூட நாம் இந்த
தளத்தில் விடியோவுடன் சேமித்துக்கொள்ளலாம்.யூடியுப் துனையுடன்
சிறந்த வீடியோக்களை தேர்ந்தெடுத்து நம் சிறார்களுக்கு கொடுக்கும்
இந்த இணையதளம் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி :  http://www.kideos.com

 
வின்மணி இன்றைய சிந்தனை
உண்மையாக , நியாயமாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு
சோதனை அதிகம் வந்தாலும் முடிவில் வெற்றி 
அவர்களின் பக்கம் தான் இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பின்நோக்கி பறக்கும் பறவை எது ?
2.ரேடியோ கதீர்விச்சை கண்டுபிடித்தவர் யார் ? 
3.முதல் வீட்டு கம்ப்யூட்டர் எது ?
4.உலகிலே மிக உயரமான அணை எது ?
5.சூடான கிரகம் எது ? 
6.ஜோடி சேர்ந்து சதம் அதிகமாக அடித்த வீரர்கள் ?
7.கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ? 
8.தமிழின் முதல் சமூக படம் எது ?   
9.போலர் கரடி எங்கு வசிக்கின்றது ? 
10.மிக விரிவான இறக்கை உடைய பறவை எது ? 
பதில்கள்
1.ஹம்மிங் பறாவை , 2.கியூரி ,3.கோமா டோர் 20,
4. கிராண்ட் டிக்சென்சி , ஸ்விட்சர்லாந்து ,5.புதன்,
6.சச்சின் - கங்குலி,7.கொல்கத்தா ,8.மேனகா , 
9.ஆர்டிக் பிரதேசத்தில் , 10.ஆல்பட்ராஸ்
 
இன்று ஏப்ரல் 4

பெயர்:மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை,
பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855
மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக
நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில்
இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்
பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்
கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்
வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம். டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Elamurugan  |  6:46 பிப இல் ஏப்ரல் 4, 2010

    மிக்க நன்றிங்க pdf கொடுத்ததற்கு
    வாழ்க உங்கள் பணி

    மறுமொழி
  • 3. puduvaisiva  |  3:52 முப இல் ஏப்ரல் 5, 2010

    Thanks winmani

    மறுமொழி
  • 5. Kiyas  |  7:09 முப இல் ஏப்ரல் 5, 2010

    இன்டர்நெட் பெரியவர்களுக்கு மாத்திரம் அல்ல சிறியவர்களுக்கும் பல சுவாரசியமான தகவல்களும் உண்டு என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். மென்மேலும் வளரட்டும் உமது சேவை. தகவுக்கு நன்றி …

    மறுமொழி
  • 7. Life Direction Network  |  12:19 முப இல் ஜூன் 25, 2011

    http://www.totlol.com இந்த வீடியோ தளம் எங்கே காணோமே.. அதற்குள் அதை விற்பனைக்கு விட்டுவிட்டார்களே, வெறும் பத்தாயிரம் டாலர் தான் கேட்கிறார்கள், வின்மணிக்கு தேவைப்படும் வாங்கி வைத்துக் கொள்ளுங்களேன்/ இவர்களை என்ன சொல்வது, தளத்தை கட்டுவதும், இடிப்பதுமாக இருக்கிறார்கள், எல்லாவற்றிர்கும் பண ஆசையே காரணம்.

    மறுமொழி
    • 8. winmani  |  10:36 முப இல் ஜூன் 25, 2011

      @ Life Direction Network
      பதிவை புதுப்பிச்சாச்சு , அத்தளத்தை நீக்கி மற்றுமொரு தளத்தை சேர்த்தாச்சு,
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...