பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper

ஜனவரி 20, 2011 at 7:43 முப 12 பின்னூட்டங்கள்

புதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்
வைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச
பிரிண்டபிள் பேப்பர் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு
தரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,
கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்
எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.printablepaper.net

கிரிக்கெட் ஸ்கோர் முதல் மாத பட்ஜெட் வரை அனைத்திற்கும்
உள்ள Template இந்ததளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது
இதை தரவிரக்கி பிரிண்ட் செய்து உடனடியாக பயன்படுத்தலாம்.
பெயிண்ட் அல்லது போட்டோஷாப்-ல் சென்று ஒவ்வொரு
கோடாக போட்டு அதை நம் பிரிண்டருக்கு தகுந்தாற் போல்
சோதனை செய்வதற்குள் நமக்கு பிரிண்ட் செய்யும் ஆசையே
வெறுத்துவிடும் இதற்காகத்தான் இந்ததளம் நமக்கு அனைத்து
துறைகள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் Template -ஐ இலவசமாக
கொடுக்கிறது. கண்டிப்பாக பிரிண்டர் வைத்திருக்கும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மது அருந்தி விட்டு பெற்ற குழந்தைகளுக்கு துன்பம்
கொடுப்பவன் எந்தப்பிறவி எடுத்தாலும் பாவம் 
தொலைவதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரண்டாம் உலகப்போரில்  இங்கிலாந்து பிரதமர் யார் ?
2.அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு 
  தொடங்கப்பட்டது ?
3.இந்திய தேசிய இராணுவத்தை நிறுவியவர் யார் ?
4.கானிங் பிரபு அரச பிரதிந்தியாக இருந்தபோது இந்திய
  அமைச்சர் யார் ?
5.இந்தியாவில் தொழிற்சாலை சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
6.வங்கப்பிரிவினை எந்த ஆண்டு நீக்கப்பட்டது ?
7.இரட்டை ஆட்சி முறை எந்த வருடம் கொண்டுவரப்பட்டது ?
8.முதலாவது அனைத்திந்திய பெண்களின் மாநாடு எங்கு 
   நடை பெற்றது ?
9.திலகர் தொடங்கிய செய்தித்தாளின் பெயர் என்ன ?
10.வரதட்சணை ஒழிப்புச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு
   வரப்பட்டது ?
பதில்கள்:
1.வின்ஸ்டன் சர்ச்சில்,2.1929,3.சுபாஸ் சந்திரபோஸ்,
4.உட்பிரபு, 5.1884,6.1911,7.1919, 8.பூனாவில்.9.கேசரி,
10.1961.
இன்று ஜனவரி 20 
பெயர் : பெரியசாமி தூரன் ,
மறைந்த தேதி : ஜனவரி 20, 1987
தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக
இசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்
சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின்
ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968
வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை
வெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்
போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை
நடத்தவும் காரணமாக இருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி 20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. துரை. ந. உ  |  8:56 முப இல் பிப்ரவரி 1, 2011

    மிகவும் பயனுள்ள பகிர்வு.. நன்றி நண்பரே …

    மறுமொழி
    • 2. winmani  |  3:48 பிப இல் பிப்ரவரி 1, 2011

      @ துரை. ந. உ
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. Speed Master  |  10:28 முப இல் பிப்ரவரி 1, 2011

    பயனுள்ள பதிவு நன்றி

    மறுமொழி
    • 4. winmani  |  3:48 பிப இல் பிப்ரவரி 1, 2011

      @ Speed Master
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. ♠புதுவை சிவா♠  |  4:38 பிப இல் பிப்ரவரி 1, 2011

    தகவலுக்கு நன்றி வின்மணி

    மறுமொழி
    • 6. winmani  |  10:29 பிப இல் பிப்ரவரி 1, 2011

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. Sadaam-Srilanka  |  10:34 பிப இல் பிப்ரவரி 1, 2011

    wow ரொம்ப பயனுள்ள இணைய பக்கம்
    பதிவுக்கு நன்றி

    மறுமொழி
    • 8. winmani  |  10:44 பிப இல் பிப்ரவரி 1, 2011

      @ Sadaam-Srilanka
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. Hari  |  9:25 முப இல் பிப்ரவரி 2, 2011

    very useful to person who have printers….

    Keep posting

    மறுமொழி
  • 11. shareef  |  5:31 பிப இல் பிப்ரவரி 2, 2011

    SUPER NA CHANCE ILLA VERY USE FULL
    THANK U ANNA

    மறுமொழி
    • 12. winmani  |  8:44 பிப இல் பிப்ரவரி 2, 2011

      @ shareef
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...