அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி
மே 30, 2011 at 12:01 முப 2 பின்னூட்டங்கள்
ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகிள் போன்ற தளங்கள் பதில் அளித்துக்கொண்டு தான் இருக்கின்றன , ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவிடூ முதல் உள்ளூர் தகவல் வரை , கணினி மூலம் சாட்டிலைட் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மெடிக்கல் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம் இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://www.wolframalpha.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும் , ஒரு நாட்டைப்பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன ? , எந்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும் , சாட்டிலைட் பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் , ஒரு மருந்து மாத்திரையைப்பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும், குறிப்பிட்டை ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின் சாட்டிலைட் படமும், பிரபலமானவர்களைப்பற்றி கேட்டால் அவர்கள் படம், பிறந்த இடம் மற்றும் பல தகவல்கள் இப்படி பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம். அதிகமான தகவல்களை ஒரே தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய படங்களை தேடித்தர புதுமையான தேடுபொறி
சைவசாப்பாட்டு பிரியர்களுக்கான வித்தியாசமான தேடுபொறி
கூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும்
கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.
வின்மணி சிந்தனை மது அருந்துபவர் எவ்வளவு தான் தப்பு செய்யவில்லை என்று நியாயப்படுத்தினாலும் அவர் குற்றவாளி தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.1968-ல் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் வென்றவர் யார் ? 2.பிரான்ஸிஸ்கோ ரோட்ரி கியூஜ் எந்த நாட்டை சேர்ந்தவர் ? 3.பிரான்ஸிஸ்கோ ரோட்ரி கியூஜ் யாரைத் தோற்கடித்தார் ? 4.1972-ல் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் வென்றவர் யார் ? 5.ஜியார்ஜி ஜெடோ எந்த நாட்டை சேர்ந்தவர் ? 6.ஜியார்ஜி ஜெடோ யாரைத் தோற்கடித்தார் ? 7.1976-ல் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் வென்றவர் யார் ? 8.ஜார்ஜி ஹெர்னான்டஜ் எந்த நாட்டை சேர்ந்தவர் ? 9.ஜார்ஜி ஹெர்னான்டஜ் யாரைத் தோற்கடித்தார் ? 10.1980-ல் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் வென்றவர் யார் ? பதில்கள்: 1.பிரான்ஸிஸ்கோ ரோட்ரி கியூஜ்,2.வெனிசுலா,3. யங்-ஜூஜீ, 4.ஜியார்ஜி ஜெடோ,5.ஹங்கேரி,6. யூஜில் கெம்,7.ஜார்ஜி ஹெர்னான்டஜ்,8.கியூபா,9.பியாங்யுக்லி,10.ஷாமில்
இன்று மே 30
பெயர் : போரிஸ் பாஸ்ரர்நாக் , மறைந்த தேதி : மே 30, 1960 ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர்.இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களிடமும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார். PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி.
1.
சுகுமாரன்.சீ.அ, | 7:30 முப இல் மே 30, 2011
பயனுள்ள தகவல்களாகவேத் தருகிறீர்கள்.மீண்டும் ,மீண்டும் நான் பாராட்டிக்கொண்டேயிருக்கிறேன்.
2.
winmani | 9:57 முப இல் மே 30, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி