1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம்.
மே 31, 2011 at 12:14 முப 1 மறுமொழி
தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.fontsquirrel.com
இத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம். குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவிரக்கலாம்.
ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.
ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.
புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.
வின்மணி சிந்தனை நல்லவர்களுடன் நாம் இருப்பது நாம் முன் பிறவியில் செய்த பாக்கியம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.1900-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி பெற்ற நாடு எது ? 2.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது ? 3.1904-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி பெற்ற நாடு எது ? 4.அமெரிக்கா எந்த நாட்டை வென்றது ? 5.1908-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி பெற்ற நாடு எது ? 6.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது ? 7.1912-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி பெற்ற நாடு எது ? 8.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது ? 9.1920-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி பெற்ற நாடு எது ? 10.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது ? பதில்கள்: 1.பிரிட்டன்,2.பெல்ஜியம்,3.அமெரிக்கா-நீயூயார்க் அத்லெடிக்கிளப், 4.அமெரிக்கா சிக்காகோ அத்லெடிக்கிளப்,5.பிரிட்டன்,6.பெல்ஜியம் 7.பிரிட்டன்,8.ஸ்வீடன்,9.பிரிட்டன்,10.பெல்ஜியம்.
இன்று மே 31
பெயர் : ஜான் ஆபிரகாம் , மறைந்த தேதி : மே 31, 1987 கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக்கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர்.ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
M. T. Abdulla | 7:29 முப இல் ஜூன் 2, 2011
நீங்கள் வழங்கிய ஆங்கில பொன்ட்களை பலவற்றை தரவிறக்கி பயனடைந்தேன். அதுபோல் தமிழ், அரபு பொன்ளை இலவசமாகத் தரவிறக்கம் செயவதற்கு உதவி செய்யுங்கள்.