அனைத்து அலகு மாற்றி ( Unit Conversion ) நொடியில் அறிந்து கொள்ளலாம்.

மார்ச் 19, 2011 at 2:44 பிப 2 பின்னூட்டங்கள்

inches , feet , metres , miles , centimetres , kilometres. இன்ச்ஞ், ஃபீட்,
மீட்டர், மைல், செ.மீ, கி.மீ , Temperature , weight போன்ற அனைத்து
அளவுகளையும் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றுவதற்காக
நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

செ.மீ இருக்கிறது இதை மீட்டராக மாற்றுங்கள் அல்லது இன்ஞ்-ல்
இருக்கிறது இதை ஃபீட் ஆக மாற்றுங்கள் என்று சொல்லி பல
கேள்விகள் நமக்கு வந்தாலும் , இப்படி வரும் அனைத்து விதமான
அலகு மாற்றி கேள்விக்கும் நொடியில் பதில் சொல்லும்படி நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://convert.francepropertyshop.com

இந்ததளத்தில் சென்று படம் 1-ல் காட்டியபடி நீள அகலங்களைப்
பற்றிய Conversion-க்கு LENGTH என்பதை சொடுக்கவும் அடுத்து
Temperature  Conversion-க்கு TEMPERATURE என்பதையும்,
Weight Conversion-க்கு WEIGHT என்பதையும் சொடுக்கி எளிதாக
தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு அளவையும் மற்றொரு அளவாக
நொடியில் எளிதாக மாற்றி தெரிந்து கொள்ளலாம். படம் 1-ல்
காட்டியபடி முதல் எந்த அலகில் இருக்கிறதோ அதையும்
இரண்டாவது கட்டத்திற்குள் எந்த அளவாக மாற்ற வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுக்கும்
நடுவில் இருக்கும் பொத்தானை சொடுக்கி எந்த அலகும் எளிதாக
மாற்றி தெரிந்து கொள்ளலாம். அனைத்து துறையில்
இருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம்.

யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.

ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்

உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

வின்மணி சிந்தனை
பணம் இருப்பவனிடம் பல்லைக் காட்டி வாழ்வதை விட நம்மிடம்
அன்பாக இருப்பவரிடம் நட்பாக வாழ்வது சிறந்தது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குண்டலகேசி என்ற நூலின் நூலாசிரியர் யார் ?
2.திருவருட்பா என்ற என்ற நூலின் நூலாசிரியர் யார் ?
3.பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலின் நூலாசிரியர் யார் ?
4.நெடுந்தொகை எனப்போற்றபடும் நூல் எது ?
5.வேளாண்வேதம் எனக் குறிக்கப்பெறும் நூல் எது ?
6.முத்தமிழ்க் காவலர் என அழைக்கப்பட்டவர் ?
7.கவிமணி என்ற சொல்லால் போற்றப்படும் சான்றோர் யார் ?
8.லால்பகதூர் சாஸ்திரி போற்றப்படும் இடம் எது ?
9.வீரபாண்டிய கட்டபொம்மன் போற்றப்படும் இடம் எது ?
10.வ.உ.சி போற்றப்படும் இடம் எது ?
பதில்கள்:
1.நாதகுத்தனார்,2.இராமலிங்க அடிகள்,3.வேதநாயகம்பிள்ளை,
4.அகநானுறு,5.நாலடியார்,6.கி.ஆ.பெ.விசுவநாதன், 7.தேசிக 
விநாயகம் பிள்ளை, 8.விஜய்காட், 9.கயத்தாறு,10.தூத்துக்குடி.
இன்று மார்ச் 19 
பெயர் : ஆர்தர் சி.கிளார்க் ,
மறைந்த தேதி : மார்ச் 19, 2008
பிரிட்டனின் அறிவியல் புதின எழுத்தாளரும்
கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100
புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல்
பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே
தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம்
உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி
பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நீளமான ஆங்கிலக் கட்டுரையை கொடுக்கும் பயனுள்ள தளம். CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ayyappan  |  11:37 பிப இல் மார்ச் 20, 2011

    anna…veera pandiya katta bomman was hanged in kayathar.
    not born in kayathar

    மறுமொழி
    • 2. winmani  |  1:42 முப இல் மார்ச் 21, 2011

      @ ayyappan
      நண்பருக்கு கேள்வியில் தான் சிறு பிழை , திருத்தியாகிவிட்டது.
      பிறந்த இடம் அல்ல , போற்றப்படும் இடம் ,
      மிக்க நன்றி.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...