நீளமான ஆங்கிலக் கட்டுரையை கொடுக்கும் பயனுள்ள தளம்.
மார்ச் 18, 2011 at 7:29 முப 5 பின்னூட்டங்கள்
ஆங்கிலத்தில் விரிவாக உள்ள கட்டுரையைத் தேடி இனி
ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து கொண்டு எத்தனை வார்த்தைகளுக்கு மேல் உள்ள கட்டுரை
வேண்டும் என்பதில் இருந்து படிக்க எவ்வளவு நேரம் ஆகும்
வரை உள்ள அனைத்துவகையான ஆங்கிலக்கட்டுரையையும்
எளிதாக படிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கிலக்கட்டுரைளில் தரமான கட்டுரைகளையும் பிழை
இல்லாத பொருள் பொதிந்த கட்டுரைகளையும் எளிதாக நமக்கு
கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://longreads.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search our Archive
என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எதைப்பற்றிய விரிவான
கட்டுரை வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுக்க வேண்டும்
அடுத்து All Article Lengths என்பதில் இந்தக்கட்டுரையை படிக்க
எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் எவ்வளவு வார்த்தைகளுக்கு
மேல் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நமக்கு நாம் கொடுத்த வார்த்தைக்கு பொருத்தமாக
உள்ளபடி பலவிதமான கட்டுரைகள் நமக்கு கிடைக்கும். ஆங்கிலத்தில்
கட்டுரை எழுதுபவர்களுக்கும் படிப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்கலாம்.
ஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.
அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி
ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.
உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.
விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்
ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்
வின்மணி சிந்தனை ஒரு மொழி இருக்கும் வரை தான் அதன் பண்பாடும் கலாச்சாரமும் மக்களிடத்தில் இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இறும்பூது என்ற சொல்லின் பொருள் என்ன ? 2.மதுகரம் என்ற சொல்லின் பொருள் என்ன ? 3.துன்று என்ற சொல்லின் பொருள் என்ன ? 4.புரை என்ற சொல்லின் பொருள் என்ன ? 5.அலகை என்ற சொல்லின் பொருள் என்ன ? 6.குற்றாலக் குறவஞ்சி என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 7.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலின் நூலாசிரியர் யார்? 8.காவடிச்சிந்து என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 9.நந்திக்கலம்பகம் என்ற நூலின் நூலாசிரியர் யார் ? 10.திருவாய்மொழி என்ற நூலின் நூலாசிரியர் யார் ? பதில்கள்: 1.வியப்பு,2.தேனீ,3.செறிவு, 4.குற்றம்,5.பேய், 6.திரிகூட ராசப்பக் கவிராயர், 7.குமரகுருபர், 8.அண்ணாமலை ரெட்டியார், 9.ஆசிரியர் பெயர் தெரியவில்லை,10.நம்மாழ்வார்.
இன்று மார்ச் 181922 ஆம் ஆண்டு மார்ச் 18-ம் நாள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார். [ஒத்துழையாமை இயக்கம் என்பது இந்தியாவில் ஆட்சியிலிருந்த பிரிட்டன் அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நீளமான ஆங்கிலக் கட்டுரையை கொடுக்கும் பயனுள்ள தளம்..
1.
சுகுமாரன்.சீ.அ, | 8:31 முப இல் மார்ச் 19, 2011
பயனுள்ளப் பதிவுகள்.
2.
winmani | 4:07 பிப இல் மார்ச் 19, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி
3.
எஸ்.கே | 2:21 பிப இல் மார்ச் 19, 2011
very useful! thank you sir!
4.
winmani | 4:08 பிப இல் மார்ச் 19, 2011
@ எஸ்.கே
மிக்க நன்றி
5.
Raja | 5:34 பிப இல் மார்ச் 19, 2011
I need message from this site