அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்.
மார்ச் 17, 2011 at 2:48 முப பின்னூட்டமொன்றை இடுக
மேல்நிலை கணக்கு வகைகளைத் தீர்ப்பதற்கு Scientific Calculator
பயன்படுத்துவோம் ஆனால் இந்த சையிண்டிபிக் கால்குலேட்டர் -ல்
கூட எல்லா வகையான கணிதத்திற்கும் இன்புட்(உள்ளீடு) எப்படி
கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றனர்.
ஆனால் இனி மேல்நிலை கணக்கு வகைகளை எளிமையாக
தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

படம் 2
மேல் நிலை கணக்கு புத்தகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே
நாம் இன்புட் கொடுக்கலாம் எந்த வகையான சூட்சமமும் இல்லாமல்
உடனடியாக நாம் விடை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Notepad-ல் எப்படி தட்டச்சு செய்வோமோ அப்படியே நாம் இந்த
மென்பொருளிலும் கணக்கை தட்டச்சு செய்து கொடுக்கலாம்.
தரவிரக்க முகவரி : http://www.redchillicrab.com/calculator/redcrab.zip
மேற்கண்ட சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிரக்கி
நம் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். Integration முதல் Differentiation
வரை அனைத்து வகையான கணக்கிற்கும் நாம் இந்த Scientific
Calculator பயன்படுத்தி எளிதாக தீர்வு காணலாம். எலக்ட்ரிக்கல்
மற்றும் எலக்ட்ரானிக்ஸ்-ல் வரும் கணக்கிற்கு கூட இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தி தீர்வு காணலாம். கல்லூரி மாணவர்கள்
முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைன்-ல் வித்தியாசமான சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific calculator)
அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.
பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.
கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்
வின்மணி சிந்தனை நல்ல நண்பர்களை கூட்டவும், கெட்ட நண்பர்களை கழிக்கும் கணக்கை நாம் கற்று கொள்ள வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.திரிகடுகம் நூலாசிரியர் யார் ? 2.சீறாப்புராணம் நூலாசிரியர் யார் ? 3.கலிங்கத்துப்பரணி நூலாசிரியர் யார் ? 4.கொண்டல் என்ற சொல்லின் பொருள் என்ன ? 5.வளி என்ற சொல்லின் பொருள் என்ன ? 6.அல் என்ற சொல்லின் பொருள் என்ன ? 7.ஆக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன ? 8.குருசு என்ற சொல்லின் பொருள் என்ன ? 9.ஒடுக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன ? 10.முழவு என்ற சொல்லின் பொருள் என்ன ? பதில்கள்: 1.நல்லாதனார்,2.உமறுப்புலவர், 3.செயங்கொண்டார், 4.கார்முகில்,5.காற்று, 6.இரவு, 7.பெருஞ்செல்வம், 8.சிலுவை, 9.முடிவு, 10.மத்தளம்.
இன்று மார்ச் 171996 ஆம் ஆண்டு மார்ச் 17 நாள் இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இலங்கை 7 இலக்குகளால் ஆஸ்திரேலியாவை வென்றது. 124 பந்துகளுக்கு முகம் கொடுத்து 107 ஓட்டங்களை இலங்கை அணிக்குப் பெற்றுக் கொடுத்த அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்..
Subscribe to the comments via RSS Feed