அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
மார்ச் 16, 2011 at 11:45 பிப 3 பின்னூட்டங்கள்
சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
இது போல் மேஜிக் ட்ரிக்ஸ் செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1
பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://easybartricks.com
இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி
செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர்
இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ
அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம்.
Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks
Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும்
தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ்
பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.
கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ
விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்
அனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்
வின்மணி சிந்தனை புன்னகை நம் முகத்தில் இருக்கும் ஒரு மேஜிக் தான், இதை சரியாகப் பயன்படுத்தினால் அனைவரும் நம்முடன் அன்போடு இருப்பார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பிரித்து எழுது : புறநானுறு ? 2.பிரித்து எழுது : கிழங்கையகழ்ந்தெடுக்கும் ? 3.பிரித்து எழுது : தனித்தமிழ் ? 4.பிரித்து எழுது : நிற்பதொன்றில் ? 5.எதிர்ச்சொல் தருக : வெகுளி ? 6.எதிர்ச்சொல் தருக : நல்வினை ? 7.எதிர்ச்சொல் தருக : அகம் ? 8.எதிர்ச்சொல் தருக : அண்மை ? 9.எதிர்ச்சொல் தருக : பெருமை ? 10.நாரைவிடுதூது நூலாசிரியர் யார் ? பதில்கள்: 1.புறம் + நான்கு + நூறு,2.கிழங்கு + அகழ்ந்து + எடுக்கும், 3.தனி + தமிழ், 4.நிற்பது + ஒன்று + இல்,5.மகிழ்ச்சி, 6.தீவினை, 7.புறம், 8.சேய்மை, 9.சிறுமை, 10.சத்திமுத்தப்புலவர்.
இன்று மார்ச் 16பெயர் : இரா. திருமுருகன் , பிறந்த தேதி : மார்ச் 16, 1929 முனைவர் இரா. திருமுருகன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர்.புதுச்சேரி அரசுப்பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். சிந்துப்பாவியல் என்ற புதிய இலக்கணம் உருவாக்கியவர். உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நன்றி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பொங்கல் வாழ்த்துக்கள். Tags: அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்..
1.
எஸ்.கே | 1:56 பிப இல் மார்ச் 17, 2011
சுவாரசியமான தகவல் மிக்க நன்றி!
2.
karthikeyan | 10:49 முப இல் மார்ச் 19, 2011
உங்களுடையது அனைத்துமே அக்மார்க் தங்கம் வாழ்த்துக்கள் . அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு
3.
winmani | 4:08 பிப இல் மார்ச் 19, 2011
@ karthikeyan
மிக்க நன்றி