படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம்.
நவம்பர் 11, 2010 at 1:57 முப 7 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் நம் புகைப்படத்தை ASCII எழுத்தாக மாற்றலாம்
அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புகைப்படத்தை எழுத்தாக மாற்ற பல இணையதளங்கள் வந்து
கொண்டே இருக்கின்றன அந்த வகையில் இன்று புகைப்படத்தை
ASCII ( American Standard Code for Information Interchange) எழுத்தாக
மாற்ற நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://picascii.com
படத்தை எழுத்தாக மாற்றுவது ஒரு பெரிய வேலை தான் என்று
பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் சோசியல் நெட்வோர்க்
-களில் புகைப்படத்தை எழுத்தாக மாற்றி உலாவ விட்டு இருப்பர்
அந்த வரிசையில் இனி நாமும் எளிதாக இந்தத்தளத்திற்கு சென்று
படம் 1-ல் காட்டியபடி Choose என்ற பொத்தானை அழுத்தி விரும்பிய
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து எழுத்தின் அளவை
அடுத்த கட்டத்தில் கொடுக்கவும் அடுத்தும் இருக்கும் Check box-ல்
கலருடன் எழுத்து வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு Generate என்ற பொத்தானை அழுத்தவும் சில நொடிகளில்
நாம் கொடுத்த புகைப்படத்தை எழுத்தாக மாற்றி அடுத்து வரும்
திரை காட்டும் அந்த எழுத்தை காப்பி செய்து Notepad-ல் பேஸ்ட்
செய்தாலும் புகைப்படம் அப்படி கருப்பு வெள்ளையுடன் வரும்
புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை உங்களுக்காக வேலை செய்யும் தொழிலாளியுடன் அன்பு காட்டி தேவையில்லாதவற்றை குறைத்தால் வேலை நடக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவில் எத்தனை வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன? 2.பீங்கான் பாத்திரங்களை உருவாக்கியவர் யார் ? 3.ஒரு சிவப்பணு எத்தனை நாட்கள் உயிர் வாழும் ? 4.நாய்க்கடி நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது ? 5.மனிதன் கையிலுள்ள எலும்புகள் எத்தனை ? 6.கங்கை எங்கே போய் சேருகிறது ? 7.ஆப்பிள் கணினியை கண்டுபிடித்தவர் யார் ? 8.ஒரு குழந்தை எத்தனை எலும்புகளுடன் பிறக்கிறது ? 9.நிலத்தில் மெதுவாக நகரும் விலங்கு எது ? 10.குறட்டை விடாமல் தூங்கும் மிருகம் எது ? பதில்கள்: 1.150, 2.சீனர்கள்,3.115 நாட்கள்,4.நரம்பு மண்டலம், 5.27,6.வங்காள விரிகுடா, 7.ஸ்டீன் வோஸ்னியா, 8.330, 9.ஸ்லோத்.10.கொரில்லா குரங்கு.
இன்று நவம்பர் 11 பெயர் : லியோனார்டோ டிகாப்ரியோ, பிறந்த தேதி : நவம்பர் 11, 1974 ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர்.டைட்டானிக் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார். தேர்ந்தெடுத்த சிலப்படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம்..
1. எஸ். கே | 1:11 பிப இல் நவம்பர் 13, 2010
மிக அழகான எளிமையானது! தகவலுக்கு நன்றி!
2. winmani | 8:04 பிப இல் நவம்பர் 13, 2010
@ எஸ். கே
மிக்க நன்றி
3. babu | 9:24 பிப இல் நவம்பர் 14, 2010
your work is excellent sir, and also your additional work gk,question and answer very useful. thank you sir……………….
4. Jiyath | 3:13 பிப இல் நவம்பர் 16, 2010
ரொம்ப நல்லா மாறியது.
5. winmani | 4:28 பிப இல் நவம்பர் 16, 2010
@ Jiyath
நன்றி
6. nilaamathy | 5:31 முப இல் நவம்பர் 22, 2010
பயனுள்ள் பதிவுகள் தரும் உங்களுக்கு என் நன்றி.
தமிழில் எழுதும் முறை google transliterate எப்படி
என் வலைத்தளத்தில் இணைப்பது என் அறிய தரவும் . நன்றி
7. winmani | 6:07 முப இல் நவம்பர் 22, 2010
@ nilaamathy
விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
நன்றி