CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
மார்ச் 20, 2011 at 2:55 பிப பின்னூட்டமொன்றை இடுக
நம் படிப்பு, திறமை எல்லாம் பெரிய அளவில் இருந்தாலும் நம்மிடம்
இருக்கும் அனைத்தையுமே வெளியே காட்டும் ஒரு பேப்பர் தான்
இந்த பயோடேட்டா. எதை எப்படி எங்கே எடுத்துக்கூற வேண்டும்
என்று தெரியாமல் பலருக்கு பெரிய வேலையை வாய்ப்பை
கிடைக்காமல் போகிறது இவர்களுக்கு சில நிமிடங்களிம் Professional
Resume உருவாக்குவதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
எதை செய்தாலும் நாம் சொல்லும் ஒரே வார்த்தை நேரம் இல்லை
என்பது தான் ஆனால் பல மணி நேரம் செலவு செய்தாலும் ஒரு
திறமையான பயோடேட்டா உருவாக்க முடியவில்லையே என்பது
தான் இந்தப்பிரச்சினையை நீக்கி நமக்கு வெற்றி தரும்
பயோடேட்டாவை உருவாக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://cvmaker.in
இந்தத்தளத்திற்கு சென்று நம்மைப்பற்றிய விபரங்களும் நம் கல்வி,
அனுபவம் போன்ற சில கேள்விகளுக்கு சரியான பதிலை பதிலை
கொடுத்தால் போதும் சில நிமிடங்களில் அழகான பயோடேட்டாவை
நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. எந்த இடத்தில் நம் அனுபவம்
திறமை போன்றவற்றை காட்டவேண்டும் என்று சரியாக காட்டி
நம் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. நாம் உருவாக்கும் Resume-ஐ
PDF கோப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
வேலை தேடுபவர்களுக்கும் , பெரிய நிறுவனங்களில் வேலைக்காக
முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை வேலையும் பணமும் ஒரு மனிதனை நிரந்தரமான நல்லவனாக காட்டாது, மற்றவரிடம் காட்டும் அன்பு தான் அவரை நல்லவராக காட்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ? 2.மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சட்ட சிக்கல்களை தீர்த்து வைக்க அமைக்கப்பட்ட நீதிமன்றம் எது ? 3.இந்திய பாராளுமன்றத்தின் இரண்டு சபைகள் என்னென்ன ? 4.அவசரச்சட்டங்கள் பாராளுமன்றம் ஆரம்பித்த எத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் ? 5.தீண்டாமையை தடை செய்வது இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது விதி ? 6.இணைப்பு பத்திரம் யாரால் தயாரிக்கப்பட்டது ? 7.தலையிடாக்கொள்கை என்று எதனைக் கூறுவர் ? 8.பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது ? 9.அமிர்தசரஸ் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு ? 10.இந்திய தண்டனைச்சட்டம் சட்டமாக்கப்பட்ட ஆண்டு ? பதில்கள்: 1.5 ஆண்டுகள்,2.கூட்டாச்சி நீதிமன்றம்,3.இராஜ்ய சபை, மக்கள் சபை, 4.6 வாரம்,5.17 வது விதி,6.சர்தார் படேல், 7.பிட் இந்தியச்சட்டத்தை, 8.1966, 9.1809,10. 1859.
இன்று மார்ச் 20பெயர் : ஹென்ரிக் இப்சன் , பிறந்த தேதி : மார்ச் 20, 1828 நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும் ஆவார்.ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர்.இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்..
Subscribe to the comments via RSS Feed