நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
மார்ச் 21, 2011 at 2:30 பிப 29 பின்னூட்டங்கள்
மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல்
பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப் பதிவு.

படம் 1
மெமரி கார்டு , பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும்.
நம் மெமரி கார்டு அல்லது பெண்டிரைவ்-களை ரிப்பேர் செய்ய
கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணினியில்
இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும்
அவர்களிடம் இருக்கும் மென்பொருள் துணை கொண்டு அந்த
கணினியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான
எந்த அறிவிப்பும் அந்த கணினியின் திரையில் தெரியாது. கணினி
பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம்
ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள்
மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸை நீக்க
சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்னதான் நாம் மெமரி
கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக
Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை
பார்த்துகொண்டு தான் இருப்போம் ஆனாலும் நம் மெமரி கார்டின்
ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்றுவரை உள்ள்
அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும்,
உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ்
நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வரைஸை நீக்கலாம்,வைரஸ்
பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க
வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore
என்பதை சொடுக்கி வரும் திரையில் இடதுபக்கத்தில் Memory
Card -க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை
காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி
செய்து முடித்த பின் Memory Card -ஐ Format செய்து பயன்படுத்தலாம்.
கூடுதல் விளக்கங்கள் பெற பின்னோட்டத்தில் உங்கள் கேள்விகளை
கேளுங்கள். இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
படம் பிடிக்கும் மறைமுக கேமிராக்கள் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2
இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?
பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.
வின்மணி சிந்தனை அடுத்தவர் மேல் நாம் வைத்திருக்கும் கெட்ட எண்ணமும் ஒரு வைரஸ் தான். அதை நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தோனேஷியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 2.தாய்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 3.குவைத் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 4.பர்மா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 5.எகிப்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 6.சீனா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 7.துருக்கி நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 8.கென்யா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 9.பிராஸ் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 10.ஓமன் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? பதில்கள்: 1.ரூபியா,2.பாட்,3.தினார்,4.கையட்,5.பவுண்ட், 6.யுவான்,7.லிரா, 8.ஷில்லிங், 9.பிராங்க்,10.ரியால்.
இன்று மார்ச் 21பெயர் : ஜோசப் போரியர் , பிறந்த தேதி : மார்ச் 21, 1768 ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆய்வுகளுக்காகவும், கணிதவியலில் போரியர் தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..
1.
ABDULGAFOOR | 3:01 பிப இல் மார்ச் 22, 2011
How we can recover again the deleted files from hardisk or other secondary storage device? Is there any special software for this and its available free?
2.
winmani | 3:04 பிப இல் மார்ச் 22, 2011
@ ABDULGAFOOR
இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் முழுமையான பயன்பாடு இல்லை.
3.
Anand | 5:39 பிப இல் மார்ச் 22, 2011
How to delete completely the files from Mobile phone memory
4.
ஸிராஜ் | 12:27 பிப இல் ஏப்ரல் 26, 2011
//How to delete completely the files from Mobile phone memory//
நண்பர் வின்மணி,
மேலுள்ள ராஜாவின் சந்தேகத்துக்கு இதுவரை பதில் இல்லையே.format செய்தால் திரும்ப பெற முடியாத வகையில் முழுமையாக அழிந்து விடுமா?
அவசியம் விளக்கவும்
5.
winmani | 4:54 பிப இல் ஏப்ரல் 26, 2011
@ ஸிராஜ்
எந்த வகையில் பார்மெட் செய்து அழித்தாலும் தகவல்களை மீட்க பல தனியார் நிறுவன மென்பொருட்கள் உள்ளது.
அதனால் format செய்து தகவல்களை முழுமையாக அழிக்க முடியாது.
நன்றி
6.
g.varadharajan | 9:49 பிப இல் மார்ச் 22, 2011
சிறந்த தகவல்களை பயன் பெறும் வகையில் தினமும் தருகிறிகள் எங்கிருந்து தான் திரட்டுகிறிர்கள் என்பத்னை கானும் போது பிரமிப்பாக இருக்கின்றது.
தொடரட்டும் உங்கள் பணி பெருகட்டும் எங்களது மென் பொருள் அறிவு, நன்றி ஜி வரதராஜன் புதுக்கோட்டை
7.
winmani | 10:25 பிப இல் மார்ச் 22, 2011
@ g.varadharajan
மிக்க நன்றி
8.
g.varadharajan | 9:50 பிப இல் மார்ச் 22, 2011
பார்மட் செய்வது பற்றி விளக்கவும்
9.
winmani | 10:27 பிப இல் மார்ச் 22, 2011
@ g.varadharajan
Start -> Run -> cmd -> Format h:
where,
h: – > Memory Card Drive.
10.
g.varadharajan | 9:51 பிப இல் மார்ச் 22, 2011
சிறந்த படைப்புகளை தினமும் வழங்கி வருவது பாராடுகுரியது நன்றி
11.
winmani | 10:28 பிப இல் மார்ச் 22, 2011
@ g.varadharajan
நன்றி
12.
Raja | 10:19 பிப இல் மார்ச் 22, 2011
Sir, Please suggest some software to SD Memory card password recovery. I forget the password. I can’t access the card through computer and mobile. Could you help me?
13.
winmani | 10:30 பிப இல் மார்ச் 22, 2011
@ Raja
மெமரி கார்ட் பற்றிய கூடுதல் விபரங்கள் கொடுக்கவும் , வாரண்டி இருந்தால் வாங்கிய கடையிலே சரி செய்து கொடுப்பார்கள்.
14.
Raja | 10:34 பிப இல் மார்ச் 22, 2011
Micro SD 2GB Memory card. Brand name is SAN DISK. I don’t have a separate bill for Card. I got through Nokia Mobile bundle offer.
15.
winmani | 11:32 பிப இல் மார்ச் 22, 2011
@ Raja
உங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு.
நன்றி
16.
GANDHI KANAGASABAPATHY | 5:37 முப இல் மார்ச் 24, 2011
Really it is very very useful information.
Thanks
17.
winmani | 5:07 பிப இல் மார்ச் 24, 2011
@ GANDHI KANAGASABAPATHY
மிக்க நன்றி
18.
padmahari | 11:28 முப இல் மார்ச் 24, 2011
//அடுத்தவர் மேல் நாம் வைத்திருக்கும் கெட்ட எண்ணமும் ஒரு
வைரஸ் தான். அதை நம் மனதில் இருந்து நீக்கிவிட்டால்
மகிழ்ச்சியாக வாழலாம்.//
🙂
19.
winmani | 5:06 பிப இல் மார்ச் 24, 2011
@ padmahari
மிக்க நன்றி ஹரி , முதல் வாழ்த்துக்கு அப்புறம் இப்ப தான் வந்திருக்கிங்க.
நன்றி
20.
Devarajan | 3:14 பிப இல் மார்ச் 24, 2011
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி..!! 🙂
21.
winmani | 5:07 பிப இல் மார்ச் 24, 2011
@ Devarajan
மிக்க நன்றி
22.
ஒப்பிலான் மு.பாலு | 5:40 பிப இல் மார்ச் 25, 2011
எனக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கிறது …மிக்க நன்றி .. வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..!
23.
winmani | 11:17 பிப இல் மார்ச் 26, 2011
@ ஒப்பிலான் மு.பாலு
மிக்க நன்றி
24.
நாஞ்சில் சபரி | 6:58 பிப இல் மார்ச் 25, 2011
இது போன்று தகவல்களை எவ்வாறு மீட்டெடுகிறார்கள் ..அதற்க்கு பயன்படும் மென்பொருட்கள் என்ன என்பது பற்றி கூறினால் நாம் தொலைத்த முக்கிய தகவல்களை மீண்டும் பெற மிகவும் உதவும் …
25.
winmani | 11:18 பிப இல் மார்ச் 26, 2011
@ நாஞ்சில் சபரி
தனித்தன்மையான டிஸ்க் டிராக் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.
நன்றி
26.
A.Sathananthan | 12:23 முப இல் மார்ச் 27, 2011
பயனுள்ள தளம்,சிறந்த படைப்புக்கள்,
நன்றி, நன்றி, -Sathananthan From Sri lanka
27.
winmani | 10:39 முப இல் மார்ச் 27, 2011
@ A.Sathananthan
மிக்க நன்றி
28.
surya | 9:29 பிப இல் ஏப்ரல் 4, 2011
pentrive or memory cardirku antivirus podamudiuma? irunthal virus software kuravum nantri…..
29.
winmani | 7:13 முப இல் ஏப்ரல் 5, 2011
@ surya
மெமரிக்காடுக்கு ஆண்டிவைரஸ் தேவையில்லை , பயன்படுத்தும் கணினியில் ஆண்டி வைரஸ் இருந்தால் போதும்.
நன்றி