ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்
மே 5, 2010 at 5:23 பிப 11 பின்னூட்டங்கள்
ஆன்லைன் -ல் நாம் தட்டச்சு செய்யத வார்த்தை ஒலி கோப்பாக (MP3)
ஆக மாற்றி சேமிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

படம் 2

படம் 3
நண்பர் வெங்கட் ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த வார்த்தையை mp3
ஆக மாற்றுவது எப்படி என்பது பற்றி கேட்டிருந்தார் பல
இணையதளங்கள் வார்த்தையை ஒலிகோப்பாக மாற்றுவதற்க்கு
இருந்தாலும் மிகவும் எளிமையாக அதிவேகமாக நாம் கொடுக்கும்
வார்த்தைகளை mp3 ஆக மாற்றி நம் கணினியில் சேமிக்க ஒரு
இணையதளம் உள்ளது.
இனையதள முகவரி : http://vozme.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த
வார்த்தையை ஒலிகோப்பாக மாற்ற வேண்டுமோ அதை தட்டச்சு
செய்துகொள்ளவும் தட்டச்சு செய்து முடித்ததும் யார் நாம் எழுதியைதை
ஆண் குரலில் வேண்டுமா அல்லது பெண் குரலில் வேண்டுமா
என்பதையும் தேர்ந்தெடுத்து படம் 2 -ல் காட்டியபடி தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Create mp3 என்ற பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில்
நாம் கொடுத்த வார்த்தை mp3 கோப்பாக மாற்றப்பட்டு படம் 3-ல்
இருப்பது போல் காட்டப்பட்டுவிடும் இதில் இருக்கும் Download mp3
என்பதை கிளிக் செய்து நம் கணினியில் mp3 கோப்பாக சேமிக்கலாம்.
கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை நான் கஷ்டப்படும் போதெல்லாம் என் அருகில் நின்ற தாயை நான் பணம் சம்பாதித்தபின், அன்பாக ஒரு வார்த்தை பேசக்கூட நேரம் இல்லை என்று கூறினால் சத்தியமாக நான் மனிதனே இல்லை. அவள் என்னிடம் எதிர்பார்ப்பது பணம் அல்ல பாசம் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.திட்டக் கமிஷனின் தலைவர் யார் ? 2.நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ? 3.மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ? 4.உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ? 5.பண்டைய இந்தியாவில் கப்பற்ப்படை வைத்திருந்த தென்னிந்திய மன்னர்கள் ? 6.மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ? 7.நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ? 8.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ? 9.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ? 10.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? பதில்கள்: 1.பிரதமர்,2.திரிபலா, 3.அமீபா,4.சோடியம் குளோரின் 5.சேரர்கள் , சோழர்கள்,6.கிலோவாட்ஸ், 7.கைட்டின் என்ற சுண்ணாம்பு, 8. புகைப்பிடிப்பது 9.வசந்த குமாரி,10.1986
இன்று மே 5பெயர் : முதலாம் நெப்போலியன், மறைந்த தேதி : மே 5, 1821 பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்.
1.
Ilakkuvanar Thiruvalluvan | 9:55 பிப இல் மே 5, 2010
தரவிறக்கம் என்பதே சரியான சொல்லாகும். எனவே. தரவிரக்கம் எனத் தவறாகக் குறிப்பதை இனிச் சரியாகக் குறிக்க வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2.
Ilakkuvanar Thiruvalluvan | 10:17 பிப இல் மே 5, 2010
ஆகத் தரவிறக்கம் என வல்லெழுத்து இடையில் வரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்க. நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3.
winmani | 7:52 முப இல் மே 6, 2010
சரி இனி வரும் பதிவுகளில் திருத்திக்கொள்கிறோம்.
நன்றி
4.
முனைவர்.இரா.குணசீலன் | 2:11 முப இல் மே 6, 2010
நல்ல பதிவு நண்பரே..
தமிழ்எழுத்துக்களை எம்பி3யாக மாற்ற என்ற எனது இடுகை..
http://gunathamizh.blogspot.com/2009/10/3.html
இதுபோல தமிழுக்கு வேறு எம்பி3யாக்கும் வசதிகள் இருக்கின்றனவா நண்பரே..?
5.
winmani | 7:50 முப இல் மே 6, 2010
தெரிந்ததும் கண்டிப்பாக சொல்கிறோம்.
மிக்க நன்றி
6.
shibly | 4:22 முப இல் மே 6, 2010
Thanks superb information..realy nice
7.
winmani | 7:49 முப இல் மே 6, 2010
@shibly நன்றி
8.
முனைவர்.இரா.குணசீலன் | 8:24 முப இல் மே 6, 2010
எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.
9.
winmani | 8:26 முப இல் மே 6, 2010
@ முனைவர்.இரா.குணசீலன்
கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.
மிக்க நன்றி
10.
priya | 4:20 பிப இல் மே 6, 2010
arumaiyana pathivu.thanks to winmani
11.
winmani | 4:22 பிப இல் மே 6, 2010
@ priya
மிக்க நன்றி