Archive for மே 27, 2010

ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்

ஒவியர்கள் தங்கள் படைப்ப உலகறியச் செய்யவும் , வரைந்த
அல்லது செதுக்கியிய அழகான ஒவியத்தை எப்படி ஆன்லைன்
மூலம் விற்கலாம் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2

காலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்
உருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை
உலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை
செய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது
உங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு
கொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க
உதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.artflock.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச
கணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்
ஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்
பொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமாக
பதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்
சில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்
செய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்
மூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்
நம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்
இவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை
கமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்
துறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மக்கள் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும்
அரசியல்வாதி பெரும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக
அவதிப்படுவான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது ? 
2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் ?
3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில்
  எங்குள்ளது ?
4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது ?
5.இந்தியாவின் இயற்கை அரண் எது ?
6.அமீபா எத்தனை செல் உயிரினம் ?
7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது ?
8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது ?
9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் ?
10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் ? 
பதில்கள்:
1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர்,
4.இங்கிலாந்து,5.இமயமலை, 6.ஒரே செல்,7.வையாபுரி,
8.கார்பன்டைஆக்சைடு,9.மாயாவதி,10.100 ஆண்டுகள்
இன்று மே 27 
பெயர் : ஜவஹர்லால் நேரு ,
மறைந்த தேதி : மே 27, 1964
நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின்
பிரதம மந்திரியாக சேவை செய்தவர்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான
நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு
பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்
காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமராக  பதவி ஏற்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 27, 2010 at 9:42 பிப 4 பின்னூட்டங்கள்

பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்

கணினி விட்டு கணினி தகவல்களை பாதுகாப்பாகவும் வேகமாகவும்
அனுப்பலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2

இமெயில் மூலமும் ரேபிட்ஷேர் இன்னும் பல இணையதளங்கள்
மூலமும் நாம் தகவல்களை அனுப்பி இருக்கிறோம் ஆனால்
ஒருவருக்கு மட்டும் தகவல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம் இதற்க்கு டீம்வியூவர்,ரெட்மின் போன்ற தளங்கள்
இருந்தாலும் இந்தத்தளத்தில் நாம் தகவல்களை அப்லோட் செய்ய
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இப்படி எந்தப்பிரச்சினையும்
இல்லாமல் நம் தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம்.

இணையதள முகவரி :  http://isendr.com

இந்தத்தளத்திற்க்கு சென்று படம் 1-ல் காட்டியபடி send file என்ற
பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்
கடவுச்சொல் வேண்டுமால் கூட கொடுத்துக்கொள்ளலாம். இப்போது
படம் 2 ல் காட்டியபடி ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த
முகவரியை நாம் யாருக்கு கோப்பு அனுப்ப வேண்டுமோ அவருக்கு
கொடுக்கவும் இப்போது peer to peer protocol மூலம் நம் கணினியில்
நாம் தேர்ந்தெடுத்த கோப்பை அவர் நேரடியாக தரவிரக்க முடியும்.
தரவிரக்கி முடிந்ததும் அந்த இணையதள முகவரி தன் பயன்பாட்டை
முடித்துக்கொள்ளும்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர் உழைப்பினால் விழையும் எந்த பொருளுக்கும்
ஆசைப்படாதவன் மன அளவில் கூட பாதிக்கப்பட மாட்டான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?
2.இந்தியத் திட்டக்கமிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
3.சுயிங்கம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது ?
4.ஆஃப்செட் அச்சு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
5.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
6.விடுபடும் திசைவேகத்திற்க்கு உதாரணம் என்ன ?
7.உலகத்திரை உலகின் திகில் மனிதர் யார் ?
8.கிருஷ்ணன் குடையாக தூக்கிய மலை எது ?
9.மெளஃளேன் என்றால் என்ன ?
10.டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண்முதல்வர் யார் ?
பதில்கள்:
1.எறும்புகளால், 2.1950, 3.சயோடில்லா,
4.ரபேல்,5.ரேடியம், 6.ராக்கெட்,7.ஹிட்சாக்,
8.கோவர்த்தனகிரி,9.காட்டு வெள்ளாடு,10.சுஷ்மா சுவராஜ்
இன்று மே 26 
நாள் : மே 26 , 2002
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு
கோள். இது சூரியனலிருந்து நான்காவது கோள்
ஆகும். மார்ஸ் ஒடிசி என்னும் விண்ணூர்தி
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
இருப்பதை அறிந்த மகிழ்ச்சியான நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

மே 27, 2010 at 7:38 முப 9 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2010
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...