பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

மே 17, 2011 at 1:00 முப 2 பின்னூட்டங்கள்

பெரிய அளவுள்ள புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் போடுவதால் இடங்களை அடைத்துக்கொள்ளும் என்ற கவலை இல்லாமல் படத்தின் அளவை சுருக்காமலும் நம் வலைப்பூவில் காட்டலாம் எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? , இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில நேரங்களில் பெரிய அளவிலான புகைப்படங்களை நம் வலைப்பக்கத்தில் காட்டலாம் என்று பார்த்தால் நம் தளத்தின் வடிவமைப்பு பெரிய அளவுள்ள படங்களுக்கு துணை புரியாமல் இருக்கலாம் ஆனால் இனி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள புகைப்படங்களின் அளவை சுருக்காமல் நமக்கு காட்டுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bigimg.it

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த படத்தை காட்ட வேண்டுமோ அதன் Image URL (படத்தின் நீளம் மற்றும் அகலம் பற்றி யோசிக்கமால் எவ்வளவு பெரிய படத்தின் URL முகவரியும் கொடுக்கலாம்) கொடுத்து Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நம் வலைப்பூவில் படத்திற்காக எந்த அளவு வைத்திருக்கிறோமோ எந்த அளவை தேர்ந்தெடுத்து Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த அளவில் படம் காட்டப்படும் அடுத்து அங்கு இருக்கும் Next என்ற பொத்தானை சொடுக்கினால் Copy-and-paste this HTML in place of the original image என்ற கட்டத்திற்குள் இருக்கும் Iframe code -ஐ காப்பி செய்து நம் வலைப்பூவில் தேவையான இடத்தில் படத்தை வைத்துக்கொள்ளலாம். இதில் நாம் படத்தை சொடுக்கி வலது பக்கம், இடது பக்கம், Zoom In , Zoom Out செய்து பார்க்கலாம். கண்டிப்பாக பெரிய அளவிலான படங்களை வலைப்பூவில் காட்ட விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்

முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்

நாசா வெளியீட்டுள்ள சூரியனின் பிரேத்யேகமான படம் மற்றும் வீடியோக்கள்

ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்.

 
வின்மணி சிந்தனை
ஆலயங்களில் நாம் அடுத்தவர் முன்னிலையில் ஒருவரை
மனம் கலங்க வைத்தால் அந்த இறைவன் கூட நம்மை மன்னிக்க
மாட்டான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.செஞ்சிலுவைச்சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?
2.சுதந்திர கட்சியை தோற்றுவித்தவர் யார் ? 
3.இந்திய தேசிய இரானுவத்தை தோற்றுவித்தவர் யார் ? 
4.சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார் ? 
5.கிலாபாத் இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் யார் ?  
6.தினத்தந்தி நாளிதழை தோற்றுவித்தவர் யார் ? 
7.இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ? 
8.திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் யார் ? 
9.திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் யார் ? 
10.அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தை 
 தோற்றுவித்தவர் யார் ?
பதில்கள்:
1.ஹென்றி டுனாட்,2.ராஜாஜி, 3.நேதாஜி,4.சி.ஆர்.தாஸ்,5.அலி 
சகோதரர்கள்,6.சி.பா.ஆதித்தனார் ,7.கோபாலகிருஷ்ண கோகலே,
8.ஈ.வே.ரா.பெரியார் , 9.சி.என்.அண்ணாதுரை, 10.எம்.ஜி.ஆர்.
 
இன்று மே 17

பெயர் : செந்தில் ராமமூர்த்தி, 
பிறந்த தேதி : மே 17, 1974
ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில்
தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில்
ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார்.
அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்"
என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக
நடித்து புகழுக்கு வந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள். முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...