நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.
மே 16, 2011 at 1:43 முப பின்னூட்டமொன்றை இடுக
கணினியில் நம் செல்லக்குழந்தைகளின் ஒவியம் வரையும் திறமையை வளர்ப்பதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பலதரப்பட்ட பெயிண்ட் கருவிகளுடன் வலம் வரும் இந்த மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
விடுமுறையில் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டை விட கணினியில் ஒவியம் வரையும் விருப்பத்தை வளர்ப்பதற்காகவே ஒரு இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தறவிரக்க முகவரி : http://tuxpaint.org/download
இந்த முகவரியை சொடுக்கி நாம் பயன்படுத்தும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு துணை புரியும் வகையில் இருக்கும் மென்பொருளின் சுட்டியை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கிக் கொள்ளலாம். சாதாரன மைக்ரோசாப்ட் பெயிண்ட் பயன்படுத்தி நம் குழந்தைகள் ஒவியம் வரைவதை விட எளிமையாக ஒன்றல்ல இரண்டல்ல பல வகையான பிரஷ் மற்றும் கருவிகளும் சில வகையான மேஜிக் வடிவங்களும் எளிதாக ஒரே சொடுக்கில் பயன்படுத்தும் வண்ணம் இருக்கிறது. குழந்தைகள் எப்படி பெயிண்ட் பயன்படுத்துவார்களோ அவர்களுக்கு தகுந்தாற்போல் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு விருந்தாக வந்திருக்கும் இந்த மென்பொருள் குழந்தைகளின் ஒவியத்திறமையை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்
வின்மணி சிந்தனை குழந்தைகளுக்கு அன்பையும் மரியாதையும் நாம் கற்றுகொடுத்தால் மட்டும் போதாது நாமும் அப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.1928-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 2.1932-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 3.1936-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 4.1948-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 5.1952-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 6.1956-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 7.1960-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 8.1964-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 9.1968-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? 10.1972-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது? பதில்கள்: 1.நெதர்லாந்து, 2.அமெரிக்கா, 3.ஜெர்மனி, 4.இங்கிலாந்து, 5.பின்லாந்து, 6.ஆஸ்திரேலியா,7.இத்தாலி,8.ஜப்பான், 9.மெக்சிகோ, 10.மேற்கு ஜெர்மனி.
இன்று மே 16
பெயர் : ஜோசப் ஃவூரியே, மறைந்த தேதி : மே 16, 1830 ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆவுகளுக்காவும், கணிதவியலில் ஃவூரியேத் தொடர் என்னும் கருத்துக்காகவும் புகழ்பெற்றவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்..
Subscribe to the comments via RSS Feed