முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்
மே 18, 2011 at 11:09 பிப 4 பின்னூட்டங்கள்
அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்று தனியாக ஒரு சோசியல் நெட்வொர்க் உருவாக்கி அழகு பற்றிய அத்தனை விபரங்களையும் நாம் ஒரே தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளள நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அலங்காரம் செய்வது ஒரு தனி கலை தான் , தற்போதுள்ள சுழலில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் முகத்தை அழகாக வைத்துக்கொள்வதும் வேகமாக மக்களிடையே வளர்ந்து வருகிறது. இதற்காக அழகு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுபவத்துடன் அள்ளிக்கொடுக்கஒரு சோசியல் நெட்வொர்க் தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://makeupalley.com
இத்தளத்திற்கு சென்று நாம் அழகு மற்றும் ஒப்பனை சார்ந்த அனைத்து தகவல்களும் தெரிந்து கொள்ள்லாம். புதிதாக வந்திருக்கும் அழகு சார்ந்த பொருட்கள் என்ன என்பது முதல் அழகுபடுத்தும் முறைகள் என்ன என்பது வரை அனைத்து தகவல்களையும் அறியாலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு அழகு சம்பந்தப்பட்ட கேள்விகளையும் , ஆலோசனைகளையும் , தாங்கள் பயன்படுத்திய அழகு சாதனப்பொருட்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் மார்க்கெட்-ல் புதிதாக வந்திருக்கும் அழகு சாதன பொருட்களை எத்தனை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது வரை அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து கொள்லலாம். அழகு மற்றும் ஒப்பனையில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்
கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்
ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.
வின்மணி சிந்தனை ஒருவர் மேல் நமக்கு இருக்கும் அன்பு , பாசத்தை நம் முகம் எப்படியும் அவருக்கு காட்டி கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எலுமிச்சையில் எத்தனை வகைகள் உள்ளது ? 2.கருவேல் மரம் எந்த நதிக்கரையில் அதிகமாக காணப்படுகிறது? 3.பலாமரம் எந்த இசை வாத்தியம் செய்யப்பயன்படுகிறது ? 4.இந்தியாவில் எந்த பயிறு வகை அதிகமாக காணப்படுகிறது? 5.இரப்பர் மரத்தின் பழைய பெயர் என்ன ? 6.எப்போதும் விரியாதப்பூ எது ? 7.தக்காளி முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது ? 8.எந்த மரத்தை பூச்சி , கரையான் அரிப்பதில்லை ? 9.ரோஜாப்பூவில் இருந்து என்ன மாத்திரை தயாரிக்கப்படுகிறது? 10.வெற்றிலை முதன் முதலாக எந்த நாட்டில் பயிரிடப்பட்டது? பதில்கள்: 1.60 வகைகள்,2.நைல் நதி, 3.மிருதங்கம்,4. பருப்பு, 5.ஹவாயா, 6.அத்திப்பூ,7.லவ் ஆப்பிள், 8.கருங்காலி, 9.ரோசலின், 10.மலேசியா
இன்று மே 18
பெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி, பிறந்த தேதி : மே 18, 1913 இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: முக அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்வதற்கென்றே தனி சோசியல் நெட்வொர்க்.
1.
Life Direction Network | 9:29 பிப இல் மே 20, 2011
அழகு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றுதான், ஆனால் அது உடம்பிலிருந்துதான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் உடல் அழகில்தான் அக்கரை செலுத்துகிறார்கள். அதுவும் நல்ல விசயம்தான். பலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் பதிவு, தங்களின் வகைவகையான பதிவுகள் தொடரட்டும்.
2.
winmani | 12:58 முப இல் மே 21, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி
3.
suganthiny75 | 11:49 முப இல் மே 21, 2011
mikka nanry
4.
winmani | 12:23 பிப இல் மே 21, 2011
@ suganthiny75
மிக்க நன்றி