ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
மே 3, 2011 at 1:15 முப 3 பின்னூட்டங்கள்
Osama bin Laden Killed (LIVE VIDEO) என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ்
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.

படம் 1
உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு
வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்
நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத
காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி
அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப்
பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்
கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக
யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில்
தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும்
இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.
பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை
இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?
வின்மணி சிந்தனை நல்ல செய்தியை விட கெட்ட செய்திதான் வேகமாக மக்களிடத்தில் சென்றடையும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.LPG என்பதன் விரிவாக்கம் என்ன ? 2.அணுமின் உலைகளில் எந்த நீர் பயன்படுத்தப்படுகிறது ? 3.PVC என்பதன் விரிவாக்கம் என்ன ? 4.அலுமினியம் உடலில் கலந்தால் எந்த உறுப்பு பாதிப்படையும் ? 5.பேதி மருந்துகள் எந்த வகை உப்பு என அழைக்கப்படுகிறது ? 6.உயர்ந்த வகை நிக்கல் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது ? 7.ஆப்பிள் பழத்தில் என்ன அமிலம் உள்ளது ? 8.அதிவேக விமானங்கள் செய்ய எந்த வகை உலோகம் பயன்படுத்தப்படுகிறது ? 9.தண்ணீரின் இரசாயணப்பெயர் என்ன ? 10.வெள்ளைப் பூண்டில் எந்த வேதிப்பொருள் உள்ளது ? பதில்கள்: 1.Liquefied petroleum gas, 2.கனநீர்,3.Poly Vinyl Chloride, 4.மூளை,5.எப்சம் உப்பு,6.புருன்டி,7.மாலிக் அமிலம், 8. டைடானியம்,9.ஹைட்ரஜன் ஆக்சைடு,10.அலிசின்.
இன்று மே 3
பெயர் : சுஜாதா , பிறந்த தேதி : மே 3, 1935 தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ் ஒரு எ.
1.
Devarajan | 6:10 முப இல் மே 5, 2011
நல்ல வேளை கணினியை காப்பாற்றினீர்கள்..!! நன்றி..!! 🙂
2.
winmani | 9:38 முப இல் மே 5, 2011
@ Devarajan
மிக்க நன்றி
3.
shareef | 3:13 பிப இல் மே 5, 2011
naa antha pakkame poga mattomla
nanri