தங்கத்தின் விலையை கணக்கிட்டு சொல்லும் தளம் : அட்சயதிருதியை சிறப்பு பதிவு
மே 4, 2011 at 8:43 பிப பின்னூட்டமொன்றை இடுக
உலோகங்களில் தங்கத்திற்கு இருக்கும் செல்வாக்கு நாளும் உயந்து
கொண்டு தான் செல்கிறது இப்படி தினமும் உயர்ந்து கொண்டிருக்கும்
தங்கத்தின் விலையை , நாம் எத்தனை கிராம் வாங்குகிறோம் அதற்கு
ஆகும் செலவு என்னவெறு நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது.
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

அட்சதிருதியை வாழ்த்துக்கள்
அட்சதிருதிதியில் தங்கம் வாங்கினால் தங்கம் மேலும் சேரும் என்பது
ஐதீகம்.தங்கத்தின் விலை நாளும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது
துல்லியமாக நாம் வாங்கும் தங்கத்திற்கு ஆகும் செலவு என்ன என்பதை
நமக்கு கணக்கிட்டு சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://goldcalc.com

படம் 1
இத்தளத்திற்கு சென்று எத்தனை கிராம் தங்கம் வாங்கப்போகிறோம்
என்பதையும் எத்தனை காரட் சுத்ததங்கம் (Gold Purity) என்பதையும்
தங்கத்தின் அன்றைய தினத்தின் விலை டாலரில் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் அன்றைய விலையில் மாற்றம் இருந்தால்
விலையை மாற்றி விட்டு Calculate Gold Scrap Value என்ற பொத்தானை
சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் மொத்தமாக
நாம் எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும் என்பதை துல்லியமாக
காட்டுகிறது.
அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்
(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.
கூகுள் கணினி பற்றிய அடிப்படையை நம் பெற்றோருக்கு சொல்லிக்கொடுக்கிறது
அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்
வின்மணி சிந்தனை அறிய பொன் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதது ”எதையும் எதிர்பார்க்காத அன்பு “.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஓட்டப்பந்தைய பாதைகள் எப்படி அமைந்துள்ளது ? 2.முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் எத்தனை போட்டிகள் நடைபெற்றது ? 3.இந்திய தேசிய ஆக்கிஅகாடமி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? 4.முதல் ஒலிம்பிக் போட்டி எத்தனை நாட்கள் நடைபெற்றது ? 5.கராத்தே எந்த ஆண்டு அறிமுகமானது ? 6.வாலிபால் விளையாட்டு எந்த ஆண்டு உருவானது ? 7.பத்தாயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் யார் ? 8.ஸ்பெயின் நாட்டு தேசிய விளையாட்டு என்ன ? 9.இந்திய கிரிக்கெட்டின் தந்தை யார் ? 10.கிரிக்கெட் ஆட்டத்தின் சட்டதிட்டங்கள் எந்த ஆண்டு முழுமை பெற்றது ? பதில்கள்: 1.வலமிருந்து இடமாக, 2.9, 3.1992, 4.ஒரே ஒரு நாள்,5.1916, 6.1895,7. கவாஸ்கர், 8. மாட்டுச்சண்டை,9.டி.பி.தியோதர்,10.1744.
இன்று மே 4
பெயர் : திப்பு சுல்தான், மறைந்த தேதி : மே 4, 1799 மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தங்கத்தின் விலையை கணக்கிட்டு சொல்லும் தளம் : அட்சயதிருதியை சிறப்பு பதிவு.
Subscribe to the comments via RSS Feed