ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம்.

ஓகஸ்ட் 18, 2011 at 10:49 முப பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகள் விளையாடும் படகு செய்வது அல்லது நிஜமான படகுகளை யார் துணையும் இன்றி நாமாகவே செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தண்ணீரில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் பயன்படுத்தும் ஒரு வாகனம் தான் Boat என்று சொல்லக்கூடிய படகு. இந்தப்படகுகளை நாம் ஆன்லைன் மூலம் எளிதாக கற்று செய்யலாம் படங்களுடன் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://koti.kapsi.fi/hvartial/

பாய்மரப்படகு செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்றாலும் பல நேரங்களில் நமக்கு அதைப்பற்றிய வித்தியாசமான ஐடியா தோன்றியதில்லை, ஆனால் Hannu என்பவர் பாய்மரப்படகு எப்படி எளிதாக செய்யலாம் என்பதை படத்துடன் சொல்லி கொடுக்கிறார். இத்தளத்திற்கு சென்று நாம் எந்த மாதிரி படகு வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு விரிவாக எத்தனை பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி , எத்தனை மீட்டர் நீளம், அகலம், உயரம் என அனைத்து விதமான விபரங்களையும் படங்களில்  துல்லியமாக விளக்குகிறது.  பொழுதுபோக்கிற்காக கூட நாம் இது போன்ற அழகான படகு உருவாக்கலாம். கண்டிப்பாக கடலில் பயணம் செய்யும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.

நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.

புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
நல்ல நண்பர்கள் கிடைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம்
கிடைத்த நண்பர்களை தக்க வைப்பது நம் கடமை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் வரதட்சனை தடைச்சட்டம் எந்த ஆண்டு 
  கொண்டுவரப்பட்டது ?
2.இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்க ஆன காலம்
  எவ்வளவு ? 
3.அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக 
  செயல்பட்டவர் யார் ? 
4.இந்தியாவில் வரதட்சனை தடைச்சட்டம் கொண்டு வந்த
  இந்தியப்பிரதமர் ? 
5. இந்தியப்பிரதமர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது ? 
6.இந்தியாவில் கொத்தடிமை முறை தடைச்சட்டம் கொண்டு
  வந்த இந்தியப்பிரதமர்  ? 
7.இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் எப்போது 
  கடைபிடிக்கப்படுகிறது ? 
8.Forest Survey of India தலைமையகம் எங்குள்ளது ? 
9.இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டமான Project Tiger
  தொடங்கப்பட்ட ஆண்டு ?
10.இந்தியாவில் எத்தனை சதவீதம் காடுகள் காணப்படுகிறது ?
பதில்கள்:
1.1961, 2. 2 ஆண்டுகள், 11 மாதங்கள் , 18 நாட்கள்,
3.டாக்டர் ராஜேந்திர பிரசாத் , 4.இந்திராகாந்தி,5.25, 
6.இந்திராகாந்தி, 7.ஆகஸ்ட் 29, 8.டேராடூன்,
9.1973 ஏப்ரல் 1, 10.20.64 %.
 
இன்று ஆகஸ்ட் 18

பெயர் : சுபாஷ் சந்திர போஸ்,
மறைந்ததேதி : ஆகஸ்ட் 18, 1945
நேதாஜி என்று இந்திய மக்களால்
மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ்
சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை
ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு
எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும்
ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள்
அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

விண்மீன்களின் உலகத்தைப் பற்றி படங்களுடன் விரிவாக சொல்லும் பயனுள்ள தளம். வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...