நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.
மே 9, 2011 at 2:07 முப 2 பின்னூட்டங்கள்
உள்ளூர் மாணவர்கள் முதல் உலக அளவில் பெயர் பெற்ற பிரபலங்கள்
வரை அனைவருமே டிவிட்டர் கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கும்
நிலையில் நம் டிவிட்டர் செய்திகளை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
திருக்குறளுக்கு அடுத்தபடியாக இரண்டு அடியில் பிரபலம் என்றால்
உடனடியாக நம் நினைவிற்கு வருவது டிவிட்டர் தான் அந்த அளவிற்கு
அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு அழகான
சோசியல் நெட்வொர்க் தான் இந்த டிவிட்டர். இந்த டிவிட்டரில் நாம்
பகிர்ந்து கொண்ட செய்திகளை மொத்தமாக சேமித்துக்கொள்ள ஒரு
தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://tweetbackup.com
இத்தளத்திற்கு சென்று நாம் நம் டிவிட்டர் பயனாளர் கணக்கைப்
பயன்படுத்தி உள்நுழையலாம். அடுத்து படம் 1-ல் காட்டியபடி
இருக்கும் Export என்ற மெனுவை சொடுக்கி நம் பதிவுகளை
மொத்தமாக ஒரே கோப்பாக மாற்றி கணினியில் சேமித்து
வைக்கலாம். நான்கு விதமான (CSV | RSS | Text | HTML) ஃபார்மட்களில்
நம் மறக்க முடியாத டிவிட்டர் நினைவுகளை சேமித்து
வைக்கலாம். டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
டிவிட்டர் செய்திகளை பேச வைத்து காதால் கேட்கலாம்.
104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
முதன் முதலில் டிவிட்டர் கணக்கில் உங்களை பின் தொடர்ந்தவரை கண்டுபிடிக்க.
டிவிட்டரில் உங்கள் செல்வாக்கை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்
வின்மணி சிந்தனை நல்லவனை ஆண்டவன் சற்று அதிகமாகவே சோதிப்பான். கெட்டவனை அவன் கண்டு கொள்வதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் ? 2.இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் யார் ? 3.இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் யார் ? 4.இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் யார் ? 5.இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் யார் ? 6.இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் யார் ? 7.இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவர் யார் ? 8.இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவர் யார் ? 9.இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் யார் ? 10.இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் யார் ? பதில்கள்: 1.ராஜேந்திர பிரசாத், 2.ராதாகிருஷ்ணன், 3.ஜாஹிர் உசேன், 4.V.V. கிரி, 5.பகுருதீன் அலி அகமது,6.நீலம் சஞ்சிவரெட்டி, 7.கியானி ஜெயில்சிங், 8.R.வெங்கட்ராமன், 9.சங்கர் தயாள் சர்மா, 10.K.R. நாராயணன்.
இன்று மே 9
பெயர் : அன்னமாச்சாரியார், பிறந்த தேதி : மே 9, 1408 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கர்நாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்..
1. Devarajan | 7:23 முப இல் மே 11, 2011
ஆஹா..நம் ட்வீட்களை பிற்காலத்தில் புத்தகம் போட உதவும். 🙂
2. winmani | 12:40 பிப இல் மே 11, 2011
@ Devarajan
வரலாறு முக்கியம் அமைச்சரே !