கணினியின் பழைய பாகங்களை வாங்க அமெரிக்காவில் ஒரு புதிய முயற்சி.
மே 8, 2011 at 12:55 முப 2 பின்னூட்டங்கள்
நம்மிடம் இருக்கும் கணினியின் பழைய , உடைந்த , உபயோகமில்லாத
பாகங்களை குப்பையில் போட்டு சுற்றுசுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை
தடுக்கும் வகையில் கணினியின் பழைய பாகங்களை நம் வீட்டுக்கே
வந்து வாங்கி அதை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம் கணினி பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தால்
இனி தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டாம். நமக்கு பயன்
தராத கணினியின் பாகங்களை மறுசுழற்சி (Recyclling) செய்து
பயன்படுத்துகின்றனர்.
இணையதள முகவரி : http://reconnectpartnership.com
இத்தளத்திற்கு சென்று நாம் (Zip Code) அஞ்சல் குறியீட்டு எண்னை
கொடுத்து நம் கணினியின் எந்த பாகத்தை கொடுக்க விரும்புகிறோம்
என்ற தகவல் மட்டும் இந்த இணையதளத்திற்கு சென்று தெரிவித்தால்
போதும். மானிட்டர் முதல் கீபோர்ட் , மவுஸ், ஹார்ட்டிரைவ்,ஸ்பீக்கர்,
பிரிண்டர் , ஸ்கேனர், கேபிள் மற்றும் மென்பொருள் சிடி வரை
அத்தனை பழைய பொருட்களையும் அவர்களே வந்து வாங்கிக்
கொள்கின்றனர். குப்பைத்தொட்டிக்கு சென்று சுற்றுப்புற சுழலுக்கு
தீங்கு விளைவிக்காமல் இருக்கவும் பயன்தராத கணினி பொருட்களை
மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலமும் கிடைக்கும் பணத்தை
கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது இத்தளம்.
குட்வில், Dell மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் பங்கிற்கு
உதவிகளை செய்கிறது. நம் வீட்டிற்கு வந்து எடுக்கும் பொருட்களின்
மதிப்பிற்கு தகுந்தபடி ரசீது கொடுத்துவிட்டு செல்கின்றனர்
வருமானவரித்துறையால் செல்லுபடியாகும் அளவிற்கு ரசீது
இருக்கிறது. ஆனால் தற்போது இந்தச்சேவை அமெரிக்காவில்
மட்டுமே இருக்கிறது. சுற்றுச்சுழலை மாசுபடுத்த விரும்பாதவர்களுக்கும்
பிறர்க்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
ஆதாரத்தகவல்கள் (வாரண்டி) இனி தேட வேண்டாம் – புதிய வழிமுறை
மரங்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பான புதிய கார் அறிமுகம்
பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம்
3D விளையாட்டை எந்த கண்ணாடியும் அணியாமல் பார்க்கலாம் புதிய அதிசயம்
வின்மணி சிந்தனை பிறருக்கு உதவி செய்ய எண்ணுபவர்களுக்கு முதலில் சோதனை அமைந்தாலும் விரைவில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பர்மா ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட ஆண்டு ? 2.சோழர்களின் ஆட்சி தொடங்கிய ஆண்டு ? 3.அக்பர் பிறந்த ஆண்டு ? 4.சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு ? 5.சோமநாதர் ஆலயம் முகம்மது கஜினியால் கொள்ளை அடிக்கப்பட்ட ஆண்டு ? 6.புத்தர் பிறந்த ஆண்டு ? 7.முதல் பொதுத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்ற ஆண்டு ? 8.மெட்ராஸ் மகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு ? 9.இந்தியாவில் இண்டெர்நெட் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ? 10.தண்டி யாத்திரை நடைபெற்ற ஆண்டு எது ? பதில்கள்: 1.1886, 2.கி.பி 900, 3.1542, 4.1863, 5.1025 -26, 6.கி.மு. 563, 7.1952, 8.1969, 9.1995 ஆகஸ்ட் 14, 10.1930.
இன்று மே 8
பெயர் : ஹென்றி டியூனாண்ட், பிறந்த தேதி : மே 8, 1828 செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன் பகிர்ந்து பெற்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கணினியின் பழைய பாகங்களை வாங்க அமெரிக்காவில் ஒரு புதிய முயற்சி..
1.
Rajarajeswari | 12:55 பிப இல் மே 10, 2011
சுற்றுச்சுழலை மாசுபடுத்த விரும்பாதவர்களுக்கும்
பிறர்க்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
2.
winmani | 11:50 பிப இல் மே 10, 2011
@ Rajarajeswari
மிக்க நன்றி