படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.
மே 10, 2011 at 1:34 முப 6 பின்னூட்டங்கள்
Scan செய்யப்பட்ட டாக்குமெண்டுகள் , மற்றும் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை சில நிமிடங்களில் வேர்டு கோப்புகளாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அதிகமான இமெயில் நண்பர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால் JPG படங்களில் இருக்கும் எழுத்துக்களை எப்படி வேர்டு கோப்பாக மாற்ற வேண்டும் ? , PDF கோப்புகளை வேர்டு கோப்புகளாக மாற்றுவது எப்படி ? இந்த கேள்விகளுக்கு பதிலாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.paperfile.net/freeocr.exe
FreeOCR என்ற இந்த இலவச மென்பொருளை நம் கணினியில் தறவிரக்கி நிறுவிக்கொள்ளவும் அடுத்து நாம் வேர்டு கோப்பாக மாற்ற விரும்பும் PDF கோப்புகளையோ அல்லது JPG படங்களில் இருக்கும் எழுத்துக்களை வேர்டு கோப்பாக மாற்ற விரும்பினால் அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு OCR என்பதை சொடுக்கி எளிதாக வேர்டு கோப்பாக தட்டச்சு செய்த எழுத்துக்களாக மாற்றலாம். Save என்ற ஐகானை சொடுக்கி வேர்டு கோப்புகளாக நம் கணினியில் சேமிக்கலாம்.Scanner மூலம் நேரடியாக ஸ்கேன் செய்த புகைப்படங்களையும் உடனடியாக வேர்டு கோப்புகளாக மாற்றலாம். தமிழ் மொழி எழுத்துக்களை தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழிகளுக்கு மட்டுமே இப்போது துணைபுரிகிறது. ஆங்கில கோப்புகளை இனி தட்டச்சு செய்து வேர்டு கோப்பாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மாறும் மனிதனின் மனது எப்போதும் எதற்காகவும் மாறாமல் இருக்கிறதோ அப்போது அவன் கடவுள் நிலையை அடைகிறான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வேடந்தாங்கல் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 2.பெரியார் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 3.மானஸ் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 4.காசிரங்கா சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 5.கிர்காடுகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 6.சந்திரபிரபா சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 7.முதுமலை சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 8.ரங்கன்தட்டு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 9.பண்டிப்பூர் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? 10.தக்காங் சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது ? பதில்கள்: 1.தமிழ்நாடு, 2.கேரளா, 3. அசாம்,4.அசாம், 5.குஜராத், 6.உத்திரபிரதேசம்,7.தமிழ்நாடு, 8.கர்நாடகா, 9.கர்நாடகா, 10.காஷ்மீர்.
இன்று மே 10
பெயர் : பிருட்டே கால்டிகாசு, பிறந்த தேதி : மே 10, 1946 முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்னையானவர் ஆவார். கால்டிகாசு தற்போது பிரிட்டிசு கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்..
1.
alex | 11:25 முப இல் மே 12, 2011
this is very useful information.
2.
narayan | 6:58 பிப இல் ஓகஸ்ட் 20, 2011
Thanks a lot sir
3.
winmani | 10:55 பிப இல் ஓகஸ்ட் 21, 2011
@ narayan
மிக்க நன்றி
4.
DEVIDASS | 9:45 பிப இல் ஓகஸ்ட் 26, 2011
VERY USEFUL FOR ALL
5.
winmani | 10:22 பிப இல் ஓகஸ்ட் 26, 2011
@ DEVIDASS
மிக்க நன்றி
6.
ganes | 9:02 பிப இல் திசெம்பர் 14, 2011
your all document very very use full ts for your team