விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள விக்கிநதி.
மே 11, 2011 at 12:37 முப பின்னூட்டமொன்றை இடுக
உலக அளவில் தொடர்ந்து மர்ம முடிச்சுகளை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விக்கிலிக்ஸ் பற்றிய உடனடி தகவல்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://wikiriver.org
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர் இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிசெய்தி என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தி பற்றிய வல்லுனர்களின் கருத்து எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கி செய்திகளை கொடுக்கிறது அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விக்கிலீக்ஸ் செய்திகளை தேடிக் கண்டுபிடித்து படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தத்தளம் பல நிமிடங்களை மிச்சம் செய்து கொடுக்கும்.
திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்
நாளை செய்ய வேண்டிய வேலையை நிர்வகிக்க உதவும் Effective Task Reminder.
கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி
கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்யும் நண்பர்களுக்கும் உதவும் தகவல் சுரங்கம்
வின்மணி சிந்தனை உண்மையாக வாழும் நபர்களிடம் இரகசியம் ஒரு போதும் இருப்பதில்லை. அவர்கள் எதற்கும் பயப்படுவதும் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பிரின்சிபல் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 2.குட் எர்த் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 3.சமுதாய ஒப்பந்தம் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 4.வேஸ்ட் லேண்ட் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 5.பேரடைஸ் லாஸ்ட் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்? 6.மெயின் காம்ப் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்? 7.வார் & பீஸ் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்? 8.வெல்த் ஆப் நேஷன் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 9.ஜிப்ஸி என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார் ? 10.தாஸ்காபிடல் என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்? பதில்கள்: 1.ஐசக் நீயூட்டன், 2.பேர்ள்ஸ் பக், 3. ரூசோ,4.டி.எஸ்.எலியட், 5.ஜான் மில்டன்,6.அடால்ப் ஹிட்லர்,7.லியோ டால்ஸ்டாய், 8.ஆடம் ஸ்மித், 9.அலெக்சாண்டர் புஷ்கின், 10.கார்ல்மார்க்ஸ்.
இன்று மே 11
பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, பிறந்த தேதி : மே 11, 1895 இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள விக.
Subscribe to the comments via RSS Feed