வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.

ஓகஸ்ட் 19, 2011 at 11:06 பிப 11 பின்னூட்டங்கள்

புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு SEO அதாவது Search Engine optimization பற்றி நம் வின்மணி வலைப்பூ மூலம் தெரிந்து கொள்வதற்காக இந்த சிறப்புப்பதிவு.

படம் 1

புதிதாக இணையதளம் உருவாக்கியாச்சு ஆனால் பார்க்க யாரும் இல்லை , ஏன் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருக்கும் , மிகச்சிறப்பான சேவை கொடுத்தாலும் அதை மக்களிடம் எடுத்து செல்லும் பொறுப்பு Search Engine என்று சொல்லக்கூடிய தேடுபொறிகளுக்குத் தான் உண்டு. தேடுபொறிகளிலும் மிக முக்கியமான தேடுபொறியாக உள்ளது கூகிள் தான் இந்த கூகிள் தேடுபொறியில் நம் வலைப்பூவை கொண்டு வருவது பற்றிய சிறப்பு பதிவு.

இணையதளம் உருவாக்க வேண்டும் அதைவிட தேடுபொறியில் தேடும் போது சரியான நேரத்தில் மக்களிடம் எடுத்துச் காட்ட வேண்டும் இதைத்தான் SEO என்று சொல்கிறோம். மிகப்பெரிய நிறுவனங்கள் தேடுபொறியில் தங்கள் தளம் முதலிடம் வைப்பதற்காக பெரிய அளவு தொகையை செலவு செய்கின்றது. இதையெல்லாம் விட கூகிள் டெக்னிக்கல் ட்ரிக்ஸ் மூலம் நம் வலைப்பூவை கூகிள் தேடலில் முதலிடத்திற்கு கொண்டுவரலாம். எப்படி என்பதைப்பற்றி இனி பார்க்கலாம்.

1. நம் வலைப்பூவில் Flash ( ஃபிளாஷ் ) Content அதிகமாக இருக்கக் கூடாது.

2. வலைப்பூவில் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையை மட்டுமே  < Meta > Tag -ல்  கொடுக்க வேண்டும்.

3. Heading tag   <H1>… முதல் <H6> சரியான முறையில் தேவையான இடத்தில்  பயன்படுத்த வேண்டும்.

4.சில வகை இலவச பிளாக் டெம்பிளேட்டுகள் ( Blog templates ) -கள் நம் தளத்தின்  Back Side -ல் தேவையில்லாத சிக்கல்களை  கொண்டுவரும்.

5. எல்லா உலாவிகளிலும் தெரியும்படி பொதுவான ஸ்கிரிப்ட் (Script) களை மட்டுமே  தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

6.W3C standards -ல் வரையருக்கப்பட்டிருந்தால் மேலும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

7.மிக முக்கியமான Keywords -களை  < Meta Keywords >  – ல் கொடுக்க வேண்டும்.

8.உங்கள் தளம் எப்போதும் கூகிள் தேடலில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு இடம் பிடிப்பதற்கு  சில வகையான ஆன்லைன் டூல் உதவியை கட்டணம் கொடுத்து பயன்படுத்த வேண்டும்.

9.வடிவமைப்பு மற்றும் இணையதள கட்டுமானம் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

கூகிளின் தற்போதைய மேம்படுத்தப்பட்ட தேடலில் வழக்கமாக ஒரு தளம் கொடுத்து தேடினால் அதிகபட்சமாக 8 முதல் 10  பக்கங்களை மட்டுமே காட்டும் ஆனால் கூகிள் தளத்தில் சென்று  வின்மணி என்று கொடுத்து  தேடினால் 12 பக்கங்களை காட்டுகிறது. இது வின்மணி  வலைப்பூவின் SEO திறம்பட வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது. நாம் SEO  வடிவமைத்து கொடுத்த சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலைப்பூக்களும் கூகிள் தேடலில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உதாரணமாக சில தளங்களை கூகிளில்  சென்று  தேடினால் உண்மை புரியும். உதாரணமாக கூகிளில் சென்று கொடுக்க வேண்டிய வார்த்தை

Aloha – usa

hotel sivamurugan

புதிதாக இணையதளம் வடிவமைக்க விரும்புபவர்கள் எந்த அளவிற்கு டிசைனிற்கு  முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அதே அளவிற்கு SEO -விற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தங்களின் சேவை உலகமெங்கும் தெரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு.

நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்

அனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.

ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
தேடினால் கிடைக்காதது என்று ஏதும் இல்லை முயற்சி
மட்டும் தான் மூலதனம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது ?
2.இந்தியாவில் யானைகள் பாதுகாப்பு திட்டமான Project Elephant
  தொடங்கப்பட்ட ஆண்டு ? 
3.Zoological Survey of India எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
4.பாராளுமன்ற மேலவையின் அதிகபட்ச உறுப்பினர்கள் 
 எத்தனை பேர் ?
5.ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா முதன் முதலில்
 தங்கம் வென்ற ஆண்டு எது ?
6.இந்தியாவில் உயிரியல் பாதுகாப்பு மையங்கள் தற்போது
  எத்தனை உள்ளன ?
7.ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தொடர்ச்சியாக
  எத்தனை தங்கப்பதக்கம் வென்றுள்ளது ?
8.Botnical Survey of India  தலைமையகம் எங்குள்ளது ?
9.இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் கொண்டு
 வரப்பட்ட ஆண்டு ?
10.இந்திய குடியரசுத்தலைவர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது ?
பதில்கள்:
1.ஹாக்கி, 2. 1992 ,3.1916 , 4.250, 5.1928, 6.14, 
7.6 முறைகள், 8.கொல்கத்தா, 9.1972, 10.35.
 
இன்று ஆகஸ்ட் 19

பெயர் : சங்கர் தயாள் சர்மா,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 19, 1918
இந்தியாவின்  ஒன்பதாவது குடியரசுத் தலைவர்
ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை
பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர்
எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக
பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால்
மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம். உலகின் முக்கிய பிரபலங்களின் தகவல்களையும் தேடிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nathnavel  |  5:52 முப இல் ஓகஸ்ட் 24, 2011

    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 3. salemdeva (@salemdeva)  |  6:46 முப இல் ஓகஸ்ட் 24, 2011

    வாழ்த்துகள்..!!

    மறுமொழி
  • 5. Robinson  |  10:11 பிப இல் ஓகஸ்ட் 24, 2011

    நன்றி…..

    மறுமொழி
  • 7. Life Direction Network  |  11:04 பிப இல் ஓகஸ்ட் 24, 2011

    தங்கள் தயவால் SEO சேவை குறித்து ஏற்கனவே அதிகம் அறிந்து கொண்டேன், மேலும் அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள், நாம் விரும்பும் பெயருக்கு, நாம் விரும்பும் டொமைன் கிடைக்காமல் போனாலும், SEO சேவையில் முந்திக் கொண்டோமானால் அதுவே நமக்கு உலக முகவரியை கொடுத்து விடும். எல்லாம் தங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் நன்றி.

    மறுமொழி
    • 8. winmani  |  11:26 பிப இல் ஓகஸ்ட் 24, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. Tamil Comedy World  |  4:27 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

    \\”தேடினால் கிடைக்காதது என்று ஏதும் இல்லை முயற்சி
    மட்டும் தான் மூலதனம்.”//
    மிகவும் நல்ல கருத்து .

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    மறுமொழி
    • 10. winmani  |  10:07 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

      @ Tamil Comedy
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 11. henry  |  5:07 பிப இல் செப்ரெம்பர் 12, 2011

    very nice tips winmani.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...