உலகின் முக்கிய பிரபலங்களின் தகவல்களையும் தேடிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

ஓகஸ்ட் 20, 2011 at 9:40 பிப 6 பின்னூட்டங்கள்

உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது  இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1

முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற  தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான். ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை  என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.yatedo.com

உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும்  தெரிந்து கொள்ளலாம். இத்தேடலில் இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டினர் விபரங்களே அதிகம் கிடைக்கிறது. முக்கியமான நபர்களின் விபரங்களை தெடும் நபர்களுக்கு இத்தேடுபொறி பயனுள்ளதாக இருக்கும்.

சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.

உலகின் முக்கிய பிரபலங்களின் முகங்களை எளிதாக தேட வழி

ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.

தினமும் உலக அளவில் பிரபலமான முதல் 12 வீடியோக்களை காட்டும் தளம்.

 
வின்மணி சிந்தனை
மனதினால் இருக்கும் இடத்தில் கடவுளை உளமாற
அன்போடு நினைத்தால் அவன் அருளைப் பெறலாம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.லோக் சபையின் தற்போதைய உறுப்பினர்கள் எத்தனை பேர் ?
2.தாஜ்மஹாலை வடிவமைத்தவர் யார் ?
3.லோக் சபைக்கு இந்தி யயூனியன் பிரதேசங்களில் இருந்து
  எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
4.அமர்தியாசென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எந்த
  ஆண்டு பெற்றார் ? 
5.இராஜ்ய சபையின் தற்போதைய உறுப்பினர்கள் எத்தனை பேர்?
6.இந்தியாவிற்கு புகையிலையை அறிமுகப்படுத்திய
  ஐரோப்பியர்கள் யார் ?
7.தாஜ்மஹால் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ?
8.லோக் சபைக்கு இந்திய குடியரசுத்தலைவரால் எத்தனை
  உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் ?
9.சர்.சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு எந்த
  ஆண்டு வழங்கப்பட்டது ?
10.இந்தியாவில் தற்போது எத்தனை பேர் நோபல்பரிசு
  பெற்றுள்ளனர் ?
பதில்கள்:
1.545, 2. உஸ்தாத் இஸா ,3.13 , 4.1998, 5.245,
6.போர்த்துகீசியர், 7.யமுனை, 8.2, 9.1930, 10.6 பேர்.
 
இன்று ஆகஸ்ட் 20 

பெயர் : நாராயண மூர்த்தி, 
பிறந்ததேதி : ஆகஸ்ட் 20, 1946
இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல்
தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர்.கடந்த
2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை
செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது
இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும்,
தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.
பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தமது நேரத்தை
சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட். நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sutha  |  2:36 முப இல் ஓகஸ்ட் 25, 2011

    Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing

    enakku oru help pannunga please en kitta some CD’s irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks

    Sutha

    மறுமொழி
    • 2. winmani  |  5:17 முப இல் ஓகஸ்ட் 25, 2011

      @ sutha
      இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் விரிவான விளக்கம் கொடுக்கிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 3. Tamil Comedy World  |  2:31 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

    மிகவும் பயன்னுள்ள தகவல்!.
    பாராட்டுகள்.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    மறுமொழி
    • 4. winmani  |  10:07 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

      @ Tamil Comedy
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. sutha  |  5:58 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

    Thanks I send you email

    once again thaks

    sutha

    மறுமொழி
    • 6. winmani  |  10:07 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

      @ sutha
      உங்களுக்கு பதில் அனுப்பியாச்சு.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: