விண்மீன்களின் உலகத்தைப் பற்றி படங்களுடன் விரிவாக சொல்லும் பயனுள்ள தளம்.

ஓகஸ்ட் 17, 2011 at 10:26 முப 2 பின்னூட்டங்கள்

வானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்,விண்மீன்களின் உலகம் சற்றே வித்தியாசமானது புதுமையானது என்று பொதுவாக சொல்லாமல் நேரடியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் பற்றியும் அதைப்பற்றிய கூடுதல் தகவல்களையும் நமக்கு கொடுத்து ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வானத்தை அண்ணாந்து பார்த்து பிரமிப்பை ரசித்துக்கொண்டிருக்கும் நமக்கு  அனைத்து விதமான வாண்வியல் துறைகளிலும் உண்மையான அறிவியல் தகவல்களை படங்களுடன் கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.galaxyzoo.org

இத்தளத்திற்கு சென்று நாம் வானில் உள்ள ஒவ்வொரு கிரகங்கள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கேலக்ஸி பற்றிய அனைத்து விபரங்களையும் இத்தளத்தில் சென்று தேடலாம். கேலக்ஸிகளை வகைகளாக பிரித்து ஒவ்வொரு கேலக்ஸி பற்றியும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் மற்றும் படங்கள் வரலாற்றில் இந்த கேலக்ஸி பற்றி ஏதாவது தகவல்கள் இருக்குமானல் அதையும் விரிவாக சொல்கிறது. ஒவ்வொரு கிரகங்களும் சுழலும் திசை எந்த மாதத்தில் எங்கு செல்லும் முப்பரிமான படங்களுடன் காட்டுகிறது. புதுமை விரும்பிகள் முதல் வானியல் துறைப்பற்றி விரிவாக விளக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.

நம் இணையதளத்துக்கு வார்த்தை மேகம் எளிதாக உருவாக்கலாம்

தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.

வானத்து மேகத்தில் உங்கள் கைவண்ணத்தை காட்ட ஒரு புதுமையான முறை.

 
வின்மணி சிந்தனை
சிறிய சிறிய விஷயங்களில் கவனம் வைத்தால் பெரிய 
பிரச்சினைகளில் இருந்து தப்பலாம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முதன் முதலில் அணுகுண்டு சோதனை எப்போது
  மேற்கொள்ளப்பட்டது ?
2.இரண்டாவது அணுகுண்டு சோதனை எங்கு 
 மேற்கொள்ளப்பட்டது ?
3.முதல் அணுகுண்டு சோதனையின் குறியீட்டு பெயர் என்ன ?
4.இந்தியாவின் முதல் எதிர்கட்சி தலைவர் யார் ?
5.மேலவை என்று அழைக்கப்படும் அவை எது ?
6.இந்தியக்குடியரசு தலைவர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது 
 வரம்பு என்ன ?
7.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
8.இந்தியாவில் கொத்தடிமை முறை தடைச்சட்டம் எந்த ஆண்டு
  கொண்டு வரப்பட்டது ?
9.இந்திய அரசியலமைப்புச்சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு
 வந்தது ?
10.இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் ?
பதில்கள்:
1.1974, 2.பொக்ரான்,3.சிரிக்கும் புத்தர்,4.டாக்டர்.ராம்சுபாக் சிங்,
5.மாநிலங்களவை, 6.35 வயது, 7.டாக்டர். அம்பேத்கார்,
 8.1976, 9.1950, 10.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.
 
இன்று ஆகஸ்ட் 17

பெயர் : ஷங்கர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963
இந்தியத் திரைப்பட இயக்குநர்,இவருடைய
படங்கள் தொழில் நுட்பம் , பிரம்மாண்டம் ,
அதிரடியான சமூகக் கருத்துகளை மையமாகக்
கொண்டு உருவாக்கப்படுகிறது.வரும் காலத்தில்
இந்தியாவின் பெருமையை உலகநாடுகளுக்கு
எடுத்துச் செல்வதில் இவரின் பங்கு முக்கியமானதாக
இருக்கும்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள். ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சி. ஜெயபாரதன்  |  5:22 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

    நண்பர்
    உங்கள் வலத்தளத்தில் என் வலைத்தளத்துக்கு இணைப்பளியுங்கள். உன்கள் தளத்தை நான் இணைத்துள்ளேன்.
    http://jayabarathan.wordpress.com/
    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

    மறுமொழி
    • 2. winmani  |  6:04 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

      @ சி. ஜெயபாரதன்
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...