கூகிள் வெளியீட்டுள்ள அழகான புதிய காமிக் புத்தகம் சிறப்பு பார்வை.

ஓகஸ்ட் 4, 2011 at 10:02 முப 1 மறுமொழி

ஒரு காலத்தில் காமிக் (Comic) படங்கள் பெரும்பாலும் பலதரப்பட்ட மக்களின் பாராட்டையும் அன்பையும் பெற்று வளர்ந்துவந்தது என்றால் அது மிகையாகாது, விளம்பரங்கள் மூலம் வருமானம்  தேட விரும்புபவர்கள் பெரும்பாலும் காமிக் படங்களை கொண்டே பலதரப்பட்ட மககளிடம் செல்வாக்கையும் பெற்றனர், ஆண்டுகள் பல சென்றாலும் காமிக் படங்களுக்கு இருந்த வரவேற்பை பொருத்து கூகிள் தற்போது புதிதாக ஒரு காமிக் புத்தகம் வெளியீட்டுள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தினமும் பத்திரிகைகளில் வெளிவரும் காமிக் கதைகள், வாரந்தோறும் வெளிவரும் சிறுகதைகள் முதல் நெடுங்கதைகள் வரை அனைத்திலுமே காமிக் படங்களின் பங்களிப்பு இருக்கும் இதே போல் ஒரு முறையை தேர்ந்தெடுத்து கூகிள் தன் சேவையைப் பற்றி அழகாகவும் விளக்கமாகவும் சொல்கிறது.

இணையதள முகவரி: http://www.google.com/googlebooks/chrome/small_00.html

எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் நம் கூகிள் , தன் குரோம் உலாவியைப் பற்றியும் அது கொடுக்கும் சேவையப் பற்றியும் காமிக் புத்தகம் வடிவில் கொடுத்துள்ளது.  செப்டம்பர் 2008 -ல் முதன் முதலாக கூகிள் குரோம் காலடி எடுத்து வைத்தது அன்று முதல் இன்று வரை கூகிளின் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை கதை  வடிவமாகவும் படமாகவும் காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுக்கிறது.  அறிவியல் மற்றும் புனைவுத்தொடர்புடைய அமெரிக்காவின் முன்னனி கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட்  என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்ல வேண்டிய வார்த்தையை கார்டூனில் காட்டி உலக மக்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவர் தான் கூகிள் குரோம்-ன் காமிக்புத்தகத்தை வடிவமைத்துள்ளார், புதிதாக குரோம் பற்றி அறிந்த கொள்ள விரும்பும்  நபர்களுக்கு இந்தக்  காமிக் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.

கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

கடிதம் எழுத ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி உதவுகிறது கூகிள்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
எந்நேரமும் குறையை கூறும் மனிதன் எப்போதும்
முழுமையான மனிதனாக இருக்க முடியாது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழகத்தின் முதல் பெண்முதலமைச்சர் பதவி விலகிய ஆண்டு?
2.திராவிடர் கழகமும், தி.மு.க வும் இரட்டைக்குழல் துப்பாக்கி
  எனக்கூறியவர் யார் ? 
3.கூரம் சாசனம் எந்த மன்னன் காலத்தில் எழுதப்பட்டது ?
4.முதலமைச்சர் பதவியில் இருந்து காமராஜர் விலகி பின்
  முதல்வரானவர் ?
5.சோழ குறுநில மன்னன் நள்ளி ஆண்டப் பகுதி ?
6.தமிழ்நாட்டின் முக்கியப்பணப்பயிர் எது ?
7.மதுரையில் உலகத்தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடத்தப்பட்டது ?
8.சங்ககால குறுநில மன்னன் ஆய் ஆண்ட பகுதி எது ? 
9.எம்.ஜி.ஆர் இறந்தபோது தற்காலிக முதல்வராக பதவி
  வகித்தவர் யார் ?
10.தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
பதில்கள்:
1.1988, ஜனவரி 28, 2.அண்ணாதுரை,3.முதலாம் நரசிம்மவர்மன்,
4.பக்தவத்சலம், 5.தொட்டி மலை, 6.நிலக்கடலை, 7.1981,
8.பொதிகை மலை,9.நெடுஞ்செழியன், 10.1916.
 
இன்று ஆகஸ்ட் 4


பெயர் : பராக் ஒபாமா
பிறந்த தேதி : ஆகஸ்ட் 4, 1961
அமெரிக்காவின் 2008-ம் ஆண்டு குடியரசுத் தலைவர்
தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி
வேட்பாளராவார். தற்போது இவர் மேலவையிலும்
இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய
உறுப்பினராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில்
ஆப்பிரிக்க அமெரிக்க  இனத்தை சேர்ந்த முதலாவது
குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும்
செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க
இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம். பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...