பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஓகஸ்ட் 5, 2011 at 6:54 முப பின்னூட்டமொன்றை இடுக
குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலன நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes ) கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.easynotecards.com
இத்தளத்திற்கு சென்று குறிப்புகள் ( நோட்ஸ் ) மட்டுமல்ல புத்தகங்களையும் எளிதாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம். பல்வேறு வகையான துறைகளில் நோட்ஸ் நமக்கு கிடைக்கிறது. அதிகமாக கொடுத்தால் படிக்க நேரம் இல்லை என்று நாம் சொல்வோம் என்பதை கருத்தில் கொண்டு இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. சில வகையான நோட்ஸ் ஒரே வரிகளில் இருக்கிறது, சில வகையான குறிப்புகளில் படங்களும் சேர்ந்தே இருக்கிறது. சில வகையான கேள்விகளுக்கு விடை இத்தளத்தில் இருக்கிறது. கூடவே இதனுடன் ஒரு Quiz -ம் சேர்ந்துள்ளது. புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால் இனி நேரம் ஆகாது. எல்லாமே குறிப்பு தான் அதுவும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரே வரியில் இருக்கிறது. நம் சுட்டிக் குழந்தைகளும் பல்வேறு துறைவாரியான தகவல்களை தெரிந்து கொள்ள இத்தளம் கண்டிப்பாக உதவும்.
அனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.
பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.
ஒவ்வொரு குறியீட்டுக்கும் (Symbol) அதன் அர்த்தத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
வின்மணி இன்றைய சிந்தனை ஒவ்வொரு மணி நேரத்தையும் சரியாக பயன்படுதுவதை வழக்கமாக கொண்டால் நேரம் நம் பின்னால் வரும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மக்கள் நெருக்கத்தில் இந்திய அளவில் தமிழகம் எத்தனையாவது இடம் ? 2.புரோ இந்தியா என்ற பத்திரிகையை நடத்தியவர் யார் ? 3.மக்கள் தொகையில் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து தமிழகம் எத்தனையாவது இடம் ? 4.அதியமான் தலைநகர் எது ? 5.எழுத்தறிவில் இந்திய மாநிலங்கள் அளவில் தமிழகம் எத்தனையாவது இடம் ? 6.ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது பெற்ற முதல் தமிழகவீரர் யார்? 7.மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள தமிழக மாவட்டம் ? 8.ராஜாரத்தினம் விளையாட்டு மைதானம் உள்ள இடம் எது ? 9.வள்ளூவர் கோட்டம் உள்ள இடம் எது ? 10.இந்திய அளவில் உற்பத்தியில் தமிழகம் எத்தனையாவது இடம்? பதில்கள்: 1.6 வது இடம், 2.டாக்டர் செண்பகராமன்,3.6 வது இடம், 4.தகடூர்,5.6 வது இடம்,6.விஸ்வநாதன் ஆனந்த்,7.திருவள்ளூர், 8.சென்னை, 9.சென்னை, 10.இரண்டாமிடம்.
இன்று ஆகஸ்ட் 5
பெயர் : நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தேதி : ஆகஸ்ட் 5, 1930 சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20, 1969இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின்,மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்த மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும.
Subscribe to the comments via RSS Feed