தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
ஓகஸ்ட் 3, 2011 at 9:42 முப 4 பின்னூட்டங்கள்
இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து கொண்டிருக்கும் கூகிளை விட, வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு,

படம் 1
தேடலைப் பொருத்தவரை கூகிள் கொடுக்காத சேவை என்றும் ஏதுவும் இல்லை , இருந்தும் கூகிளில் பல சேவைகளைப்பற்றி மக்கள் இன்றும் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர், வகை வாரியாக தேடுவதில் கூகிளை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.helioid.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்ற கட்டத்திற்குள் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் கொடுத்த வார்த்தைக்கு வகையான தளங்களை மட்டும் பிரித்து நமக்கு காட்டுகிறது. தேடல் முடிவுகளும் கூகிளை விட சிறப்பானதாகவே தெரிகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் கூகிளில் சென்று தேடி நமக்கு சரியான விடை கிடைக்காதபோது இதைப்பயன்படுத்தி பார்த்தால் உண்மை தெளிவாக புரியும். முகப்பு பக்கத்தில் லோகோவும் பொத்தான் படமும் தவிர பெரிதாக ஏதும் இல்லை , தேடல் முடிவுகளும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கிறது. இதேத் தேடலை கூகிளிலும் தேடலாம் எப்படி என்றால் நாம் தேட வேண்டிய வார்த்தைகளை “ “ ( அடைப்புக்குறி) கொடுத்து தேடினால் அதே வகையுள்ளதை காட்டும். ஆனால் கூகிள் காட்டும் தளங்களை விட இந்தத்தளம் சிறப்பாகவே தன் வேலையைச் செய்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் தேடலில் மாற்றம் விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி இன்றைய சிந்தனை தேவையான நேரத்தில் நாம் செய்யும் உதவிகள் ஒருவருக்கு அல்ல பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பிடித்துள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் பழமையான மொழி ? 2.தமிழ்நாட்டில் பாராளூமன்ற தனித்தொகுதிகளின் எண்ணிக்கை? 3.ஆயிரம் ஆலயங்களின் நகரம் எது ? 4.சோழ குறுநில மன்னன் காரி ஆண்ட பகுதி எது ? 5.தமிழக அரசின் சின்னத்தில் “ வாய்மையே வெல்லும் “ என்ற சொற்களை சேர்த்த முதலமைச்சர் யார் ? 6.தமிழ்நாட்டில் தொழில்நகரம் என அழைக்கப்படுவது ? 7.சோழ குறுநில மன்னன் பேகன் ஆண்ட பகுதி எது ? 8.இயற்கை விரும்பிகளின் பூமி என்று அழைக்கப்படும் இடம் ? 9.திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தலைமை தாங்கியவர் யார் ? 10.சோழ குறுநில மன்னன் ஓரி ஆண்ட பகுதி எது ? பதில்கள்: 1.பிராமி, 2. 7, 3.காஞ்சிபுரம், 4.திருக்கோவலூர், 5.அண்ணா துரை, 6.விருதுநகர் ,7.நல்லூர், 8.தேனி, 9.இராஜாஜி, 10.கொல்லி மலை.
இன்று ஆகஸ்ட் 3
பெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின் மறைந்த தேதி : ஆகஸ்ட் 3, 2008 ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின் எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி தெரியவந்தது. இதனால் 1970- ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
Devarajan | 10:14 முப இல் ஓகஸ்ட் 4, 2011
பயனுள்ள பதிவு..!!
2.
winmani | 10:16 முப இல் ஓகஸ்ட் 4, 2011
@ Devarajan
மிக்க நன்றி
3.
Amirthalingam Nagarajan | 11:39 முப இல் ஓகஸ்ட் 4, 2011
thanks for the information. you are updating every one’s knowledge.
4.
winmani | 11:55 முப இல் ஓகஸ்ட் 4, 2011
@ Amirthalingam Nagarajan
மிக்க நன்றி