சோசியல் மீடியாயை வைத்து போட்டி : எந்த நிறுவனம் பிரபலம் என்று அறியலாம்.

மே 15, 2011 at 1:41 பிப 6 பின்னூட்டங்கள்

இரண்டு பிரபலமான நிறுவனங்கள் அல்லது இரண்டு முக்கிய பிரபலமான நபர்களில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று நொடியில் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சோசியல் மீடியாவை வைத்து பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக சோசியல் மீடியாவை வைத்து இரண்டு முக்கிய நிறுவனங்கள் அல்லது நபர்களில் யார் பிரபலம் என்று எளிதாக அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.socialmediafight.com

சோசியல் மீடியாக்களில் சண்டை என்பது நாளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது எங்கள் நிறுவனம் தான் பெரியது நாங்க இப்ப புதிதாக பல துறைகளில் உள்ளோம் என்பது முதல் எங்கள் தலைவர் தான் பெரியவர் எங்க முதலாளி தங்க முதலாளி என்பது வரை பல தகவல்கள் இடம் பெறுகிறது. இதில் யார் அல்லது எந்த நிறுவனம் சோசியல் மீடியாக்களில் பிரபலம் என்பதை வைத்து இவர் தான் வெற்றியாளர் என்பதை அறிவிக்கிறது. இத்தளத்தில் Keyword 1 மற்றும் Keyword 2 என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் சோதிக்க விரும்பும் இரண்டு நிறுவனங்களின் பெயர் அல்லது நபரின் பெயரை கொடுத்து Fight என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு யார் செல்வாக்கு அதிகம் என்பதை வைத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்கிறது. கண்டிப்பாக சோசியல் நெட்வொர்கில் எந்த நிறுவனம் முதலிடம் என்பதை அறிந்து உதவுகிறது.

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்

30 சோசியல் நெட்வொர்க்கு தகுந்தபடி நம் புகைப்படத்தை வடிவமைக்கலாம்.

சோசியல் நெட்வொர்க்-ல் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி .

 
வின்மணி சிந்தனை
போட்டி என்பது இருவரின் திறமையை வெளிக்கொண்டு வரும்
ஒரு பயிற்சி தான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் யார்?
2.O வின் முக்கியத்துவத்தை உணர்த்திய வானியல் நிபுணர் யார்?
3.கலாச்சேத்திரா என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
4.ஆர்ய சமாஜத்தை உருவாக்கியவர் யார் ?
5.புத்தமத்தை உருவாக்கியவர் யார் ?
6.அலாவுதின் கில்ஜி அரசவையில் வாழ்ந்த புலவர் யார் ?
7.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார் ?
8.இராஜ தரங்கினி என்னும் புகழ்பெற்ற நூழை இயற்றியவர் யார் ?
9.வங்க சிங்கம் என்று அழைக்கப்பட்ட சுதந்திர போராட்டவீரர் யார்?
10.மனு தர்மத்தை இயற்றியவர் யார் ?
பதில்கள்:
1.பாபர், 2.ஆர்யபட்டர், 3.அருண்டேல் ருக்மணி தேவி,
4.தயானந்த சரஸ்வதி, 5.கெளதம புத்தர்,6.அமீர்குஸ்ரு,
7.இந்திராகாந்தி,8.கல்ஹனர், 9.லாலா லஜ்பத்ராய், 10. மனு.
 
இன்று மே 15

சிறப்பு : உலக குடும்ப நாள்
அம்மா,அப்பா, மகன், மகள்,பேரக்குழந்தைகள்
சந்தோஷமாகவும் மகிழ்சியாகவும் இருப்பதற்க்கு
பெயர் தான் குடும்பம். ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்துச் சென்றால் அந்த வீட்டில்
குடும்பம் கோவிலாகும். சிறிய காரணங்களுக்காக
விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் குடும்பத்தை
பிரிக்காமல் மகிழ்ச்சியாக இருப்போம்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ. நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ponmalar  |  3:00 பிப இல் மே 17, 2011

    நல்ல பகிர்வு. சுவாரஸ்யமாக இருந்தது

    மறுமொழி
  • 3. Life Direction Network  |  6:54 முப இல் மே 18, 2011

    நண்பரே! இந்த தளம் எதை வைத்து முடிவை காட்டுகின்றது, Winmani உட்பட பல முன்னணி பெயர்களோடு Life Direction Network என்ற பெயரைக் கொடுத்து பார்க்கும்போது என் தளமே பிரபலம் என்ற முடிவைக் காட்டுகிறது, இது எப்படி உண்மையாகும். ஒரு வேளை நான் அதிகமான சோசியல் நெட்ஒர்க்குகளில் இணைந்துள்ளதால் அந்த முடிவை காட்டுகிறதா, இது எனக்கு புரியவில்லை!

    மறுமொழி
    • 4. winmani  |  11:23 முப இல் மே 18, 2011

      @ Life Direction Network
      நான் அதிகமான சோசியல் நெட்ஒர்க்குகளில் இணைந்துள்ளதால் அந்த முடிவை காட்டுகிறதா // ஆம் அதுதான் உண்மை.
      நன்றி

      மறுமொழி
  • 5. Beral max  |  4:38 பிப இல் மே 18, 2011

    இணையத்தில் யார் பிரபலம் என்பதை தீர்மானிக்கும் அருமையான தகவல், நன்றி.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...