நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.
மே 14, 2011 at 12:20 முப 2 பின்னூட்டங்கள்
பாடலுக்கு இசையமைக்க ஆசை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் மூலம் எளிதாக நம் பாடலுக்கு இசையமைக்க ஒரு இசை ஸ்டூடியோ உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சிறிய ஒலியை கூட இசையாக மாற்றும் திறமை நம்மிடம் இருக்கலாம் ஆனால் இசையமைக்கத் தேவையான எந்த இசைக்கருவி (instrument )-ம் இல்லாமல் எப்படி இசையமைக்க முடியும் என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும் இதற்கு பதிலாக ஒரு இணையதளம் நாம் பாடும் பாடலுக்கான இசையை நாமே உருவாக்கும் வண்ணம் ஒரு தளத்தை வடிவமைத்துள்ளது.
இணையதள முகவரி : http://www.ujam.com
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். நாம் பாடினால் மட்டும் போதும் அதற்கான இசையை நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்கலாம். எல்லா வகையான instrument -ம் நம் பாடலில் பயன்படுத்தலாம். ஒரு பாடலுக்கு என்னவெல்லம் தேவையோ அத்தனை வசதிகளையும் இத்தளம் நமக்கு செய்கிறது. ஒவ்வொரு இசையுடனும் உங்கள் பாடல் சேர்ந்து எப்படி இருக்கிறது என்பதை உடனுக்குடன் சோதித்துப்பார்த்துக்கொள்ளலாம். முழுமையாக இசையை உருவாக்கிய பின் அதை Mp3 கோப்பாகவும் சேமித்துக் கொள்லலாம். இசைப்பிரியர்களுக்கும் புதிய இசையை உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.
பூனை கீபோர்ட்-ல் வாசிக்கும் அழகான இசை வீடியோவுடன்
நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.
இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.
வின்மணி சிந்தனை இசையால் மனிதன் தன்னிடம் இருக்கும் அன்பையும் அழகான இயற்கையையும் ரசிக்க முடிகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பழங்கால புத்த சமய இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது ? 2.நாகலாந்தின் ஆட்சி மொழி என்ன ? 3.பெல்ஜியம் நாட்டில் பேசப்படும் மொழி எது ? 4.பேங்க் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது ? 5.ஹவாய் நாட்டு மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளது ? 6.எந்த மொழியில் பூஜ்யத்தை குறிக்கும் எழுத்து இல்லை ? 7.உருது மொழி முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது ? 8.ஆங்கிலம் இங்கிலாந்தின் அரசமொழியாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது ? 9.பிரெஞ்சு மொழி எத்தனை நாடுகளில் அரசு மொழியாக உள்ளது? 10.எந்த நாட்டிற்கு தனி தேசிய மொழி கிடையாது ? பதில்கள்: 1.பாலி மொழி, 2.ஆங்கிலம், 3.பிளமிங்,4. இத்தாலி மொழி, 5.13 எழுத்துக்கள்,6.ரோம மொழி,7.ரீக்தா,8.கி.பி.1362, 9.24, 10.சுவிட்சர்லாந்து.
இன்று மே 14
பெயர் : ஜோர்ச் லூகாஸ், பிறந்த தேதி : மே 14, 1944 உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார். இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர்.அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ..
1.
stalin | 6:28 பிப இல் மே 28, 2011
ரொம்ப நாளா இதத்தான் தேடிக்கிடிருந்தேன்
இத இத இதத்தான் எதிர் பார்த்தேன்
நன்றிங்க………..
2.
winmani | 6:30 பிப இல் மே 28, 2011
@ stalin
மிக்க நன்றி