உலக அளவில் தமிழ் குறும்படத்திற்கான போட்டி அனைத்து நாட்டினரும் பங்கேற்கலாம்.

மே 13, 2011 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக

தமிழில் முதல் முறையாக குறுப்படத்திற்கான போட்டியை ஐக்கிய அரபு நாடுகளின் தமிழ் அமைப்பான யு.ஏ.இ தமிழ்ச்சங்கம் நடத்துகிறது உலக அளவில் அனைத்து தமிழர்களும் பங்கேற்கும் வண்ணம் இந்தப்போட்டி அமையவிருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குறும்பட போட்டி

யு.ஏ.இ. தமிழ் சங்கம் நடத்தும் குறும்படத்திற்கான போட்டி விரைவில் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்க இருக்கிறது. நமக்குள் மறைந்திருக்கும் நடிகர் , இயக்குநர் , ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர்,  சண்டைப் பயிற்சியாளர், எடிட்டிங் போன்ற திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு களமாகவே இது அமையப்போகிறது. இக்குறும்பட போட்டிக்கான விதிமுறைகள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

* குறும்படத்திற்கான போட்டியில் உலக அளவில் வாழும் அனைத்து தமிழர்களும் பங்கேற்கலாம்.

* ஆபாசம் (sex) , மதம் (Religion)  மற்றும் அரசியல் (Politics) தொடர்பான குறும்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* குறும்படத்திற்கான கால அளவு 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

* குறும்படம் தமிழ் மொழியிலே இருக்க வேண்டும்.

*  நடிகர், நடிகை, ஓளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்கலாம்.

* ஒரு இயக்குநர்-ன் ஒரே ஒரு குறும்படம் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும்.

நான்கு விதமான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

      1. DRAMA ( உருக்கமான கதைகள் )

     2. HUMOR  ( நகைச்சுவை கதைகள் )

     3. THRILLER  ( விறுவிறுப்பான கதைகள் )

     4. ROMANTIC  ( காதல் கதைகள் )

*  சிறந்த நடிகர் ,  நடிகை ,  இயக்குநர் , கதையாசிரியர் , ஒளிப்பதிவாளர்,  சண்டைப்பயிற்சியாளர், குழந்தை நட்சத்திரம் , சவுண்ட் மிக்ஸிங் , கிராபிக்ஸ் , இசையமைப்பாளர் , எடிட்டர் , பாடலாசிரியர் என தனித்தனி துறைகளிலும் சிறந்த குறும்படத்திற்கான விருதும் , பரிசும் , பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது.

*  போட்டியில் பங்கேற்பவர்கள் வரும் மே 21 ம் தேதி சனிக்கிழமைக்குள் தங்கள் குறும்படம் பற்றிய தகவல்களை அனுப்பும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

*   இப்போட்டியில் பங்கேற்க http://www.uaetamilsangam.com/becomemember.asp   என்ற தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கி கொள்ளவும்.  ( பயனாளர் கணக்கு உருவாக்கும் இடத்தில் உள்ள HOW YOU HEARD ABOUT US  என்பதில் winmani.wordpress.com  என்ற முகவரியை கொடுக்கவும் )

* தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள நம் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசுகளையும் பாரட்டுச்சான்றிதழையும் பெற வின்மணியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை தறவிரக்க UAE Tamil Sangam Short Filim Competition சொடுக்கவும்

உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க

கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்.

பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

நம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்

 
வின்மணி சிந்தனை
குறைந்த நேரத்தில் செய்யப்படும் வேலைகள் நம்
திறமையை வெளி உலகிற்கு காட்டும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட
  இடம் எது ?
2.இந்தியாவில் முதன் முதலில் கிடைக்கப்பெற்ற இலக்கண
  நூல் எது ?
3.இந்தியாவில் முதல் நெசவாலை ஆரம்பிக்கப்பட்ட இடம் எது ?
4.இந்தியாவில் முதல் தொலைக்காட்சி நிலையம் துவங்க்கப்பட்ட
  இடம் எது ?
5.இந்தியாவில் முதல் பாதாள ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட
  இடம் எது ?
6.இந்தியாவில் முதன் முதலில் சிம்பொனி இசையமைத்தவர் யார்?
7.இந்தியாவின் முதல் பேசும் படம் எது ?
8.இந்தியாவில் முதன் முதலில் எண்ணெய் வளம் 
 கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது ?
9.இந்தியாவில் முதல் தொலைபேசி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட
 இடம் எது ?
10.இந்தியாவில் முதன் முதலில் புத்தர் உபதேசம் ஆரம்பித்த
  இடம் எது ?
பதில்கள்:
1.கொல்கத்தா, 2.தொல்காப்பியம், 3.மும்பை,4.புதுடெல்லி, 
5.கொல்கத்தா,6.இளையராஜா,7.ஆலம் ஆரா,8.அசாம், 
9.கொல்கத்தாரி, 10.சாராநாத்.
 
இன்று மே 13

பெயர் : ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிறந்த தேதி : மே 13, 1956
ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார்.
தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில்,
ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன்
அழைக்கப்படும் இவர் வாழும் கலை என்ற நிறுவனத்தை
தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச்
செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன். நம் பாடலுக்கு ஏற்ற இசையை நாமே உருவாக்க புதிய மெகா இசை ஸ்டூடியோ.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: