ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.
பிப்ரவரி 18, 2012 at 9:05 முப 1 மறுமொழி
அரிய வனவிலங்குகளைப் பற்றிய அனைத்து வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோக்களையும் ஒரே இடத்தில் இருந்து காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் வனவிலங்குகள் தொடர்பான அனைத்து வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.itvwild.com
Itv Wild என்ற இத்தளத்திற்கு சென்று உலக அளவில் பிரபலமான வனவிலங்குகளின் வீடியோக்களையும் இதற்காக நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அரிய பல விலங்குகளின் வீடியோக்கள் இத்தளத்தில் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது, எந்த விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை Search என்று இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து சொடுக்கினால் போதும். குறிப்பிட்ட விலங்கு சார்ந்த அனைத்து வீடியோக்களும் நமக்கு காட்டப்படும். வனவிலங்குகள் பற்றி தெரிந்துகொள்வதற்காக குவிஸ் போட்டியும் நடத்துகின்றனர், குழந்தைகளுக்கும் வனவிலங்கு பற்றி தகவல்களை சேகரிப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.
கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ
பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.
டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
தினம் ஒரு புத்தகம் நா. சஞ்சீவி அவர்கள் எழுதிய " திருநெல்வேலி சரித்திரம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை ஆரம்பம் முதல் நாம் பட்ட கஷ்டங்களை சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு date expired காலாவதியாகிவிட்டது date of payment பணம் செலுத்தும் தவணை முறை date-plum பேரீச்சம்பழ வற்றல் datesfood பேரீச்சம்பழம் dativeling. பெயரடையுடன் இணைவதை Dative caseling நான்காம் வேற்றுமை datumcomp தரவு உருப்படி daub கரடு முரடான Daughter மகள், புத்திரி, புதல்வி daunt அச்சுறுத்து
இன்று பிப்ரவரி 18
பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர், பிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர் சுவாமி விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர். உங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம.
1.
vsraj | 4:12 பிப இல் ஏப்ரல் 7, 2012
itv wild is now closed… disappointed
very much.
vsraj