Archive for பிப்ரவரி 10, 2012
நம் பேஸ்புக் அல்லது நண்பர்களின் பேஸ்புக் -ல் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் எளிதாக சேமிக்கலாம்.
சமூக வலைதளங்களில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக் தளத்தில் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்பட ஆல்பங்கள் மற்றும் நம் நண்பரின் புகைப்பட ஆல்பங்கள் என அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமித்து வைக்க ஒரு இணையதளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆரம்ப காலத்தில் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வசதி இல்லாமல் ஏதாவது ஒரு தளத்தில் பகிர்ந்து கொண்டு அதன் இணைப்பை பேஸ்புக்-ல் பயன்படுத்தி வந்தனர் ஆனால் அதன் பின் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றலாம் என்ற பின் பலரும் தங்களுடைய புகைப்படங்களை ஆல்பங்களாக மாற்றி சேமித்து வைத்துள்ளனர் இப்படி நாம் அல்லது நம் நண்பர்கள் பேஸ்புக் தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமிக்க ஒரு தளம் உதவுகிறது…