எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.
பிப்ரவரி 19, 2012 at 10:07 முப 1 மறுமொழி
புதிதாக ஒரு பிளாக்( Blog) என்று சொல்லக்கூடிய வலைப்பூ உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வோம் ஆனால் உடனடியாக சில செய்திகளை பதிவிட்டு அதை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும் அப்படி உடனடியாக பதிவுகளை வெளியீடுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வலைப்பூ தொடங்கி தான் செய்திகளை வெளியீட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் உடனடியாக செய்திகளை வெளியீடுவதற்கு Instant Blog என்று ஒரு தளம் உள்ளது இதன் மூலம் நாம் பதிவுகளை சில நிமிடங்களில் பதிவிடலாம் தேவைப்படும் நேரங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.instablogg.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Title என்பதில் நாம் எந்த தலைப்பில் பதிவு இடப்போகிறோமோ அந்த தலைப்பை கொடுக்க வேண்டும் அடுத்து உள்ளே இருக்கும் கட்டத்திற்குள் நாம் செய்திகள் அனைத்தையும் நம் விருப்பபடி தட்டச்சு செய்ய வேண்டியது தான், எந்த இடத்தில் எந்தவிதமான மாற்றம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்த பின் Privacy: என்பதில் இந்தப் பதிவை அனைவரும் பார்க்கலாமா அல்லது குறிப்பிட்ட நபர்கள் தான் படிக்க வேண்டுமா என்தையும் தேர்ந்தெடுத்து பின் Comments Enable அல்லது Disable எது வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கு அடுத்து இருக்கும் வார்த்தையை கட்டத்திற்குள் சரியாக கொடுத்து Save and Continue editing எனபதை சொடுக்கினால் போதும் நம் பதிவு இணையத்தில் பதிவிடப்பட்டு
நமக்கு ஒரு முகவரி கிடைக்கும் இதில் Your post is published in the following address for everyone இந்த முகவரியை காப்பி செய்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ எளிதாக அனுப்பலாம் இதே போல் You can edit your post in the following address என்று கொடுத்திருக்கும் முகவரியை சேமித்து வைத்து இந்தப்பதிவில் ஏதாவது எடிட் செய்ய வேண்டும் என்றால் எடிட் செய்யலாம். கண்டிப்பாக உடனடியாக பிளாக் பதிவிட வேண்டும் என்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.
நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்
ஒரே நிமிடத்தில் டிவிட்டரைப் போல் லோகோ இலவசமாக உருவாக்கலாம்
தினம் ஒரு புத்தகம் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய " தமிழ்ச் சொல்லாக்கம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை தீமை செய்தாலும் அடுத்தவரைப்பற்றி புறங்கூறாமல் இருப்பதே சிறந்த அறம்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு dauntless தடுக்கப்படாத dauntless சலியாத , சளையாத , பயமில்லாத dawn வைகறை , விடியற்பொழுது dawn விடி , எழு ,தோன்று , புலர் ,கதி day பகல், கிழமை, நாள்,தினம் day after tomorrow நாளை மறுதினம் day before yesterday நேற்றுமுன் தினம் day break வைகறை,விடியற்பொழுது day break பொழுது பிறந்தாகிவிட்டது day care வீட்டை/குழந்தைகளை கவனித்தல்
இன்று பிப்ரவரி 19
பெயர் : உ.வே.சாமிநாதையர், பிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855 பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்..
1.
தனபாலன் | 1:12 பிப இல் மார்ச் 2, 2012
புதுசு கண்ணா புதுசு ! தலைவரே ! தூள் கிளப்புறீங்க ! நன்றி !