நம் வலைப்பூக்கு முப்பரிமான ( 3D) ரிப்பன் பேனர் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
ஜனவரி 20, 2012 at 10:15 முப 3 பின்னூட்டங்கள்
இணையதளம் அல்லது பிளாக் வைத்து இருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு முப்பரிமான ரிப்பன் எப்படி உருவாக்குவது என்பதை சொல்லி கொடுப்பதோடு உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1
சில நிமிடங்களில் நம் தளத்திற்கு ரிப்பன் பேனர் நாம் விரும்பும் வண்ணத்தில் அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து
உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.quickribbon.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் இருக்கும் Step 1 என்பதில் Rippon Text என்பதில் என்ன வார்த்தை தெரிய வேண்டுமோ அதை தட்டச்சு செய்ய வேண்டும் அடுத்து நமக்கு பிடித்த Font , Size மற்றும் Color போன்றவற்றை தேர்ந்த்டுத்துக்கொண்டு அடுத்து Step 2-ல் நமக்கு பிடித்த ரிப்பன் Style மற்றும் ரிப்பன் இருக்க வேண்டிய வண்ணத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இருக்கும் Step 3-ல் Background Color மாற்றம் செய்ய வேண்டுமானால் அதையும் தேர்ந்தெடுத்து Apply என்பதை சொடுக்கி Preview பார்த்துக்கொள்ளலாம், அடுத்து இருக்கும் Step 4-ல் ரிப்பனை சொடுக்கினால் எந்தத்தளத்திற்கு செல்ல வேண்டுமோ அதன்Hyperlink -ம் கொடுத்து Generate Ribbon என்பதை சொடுக்கினால் வலது பக்கம்
இருக்கும் கட்டத்திற்குள் கிடைக்கும் JavaScript Code -ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்துவிட வேண்டியது தான் அழகான முப்பரிமான ரிப்பன் உருவாக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம்.
நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.
அடோப் பிளாஷ் முப்பரிமானத்தில்(3D) மிரட்ட வருகிறது.
முப்பரிமானத்தில் ஒபாமா தொழில் நுட்பத்தின் சாதனை
தினம் ஒரு புத்தகம் ஆ. கார்மேகக் கோனார் அவர்கள் எழுதிய ” கண்ணகி தேவி ” புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அன்போடு மனதார இறைவனிடம் பேசினால் நடக்காத செயல் என்றும் எதுவுமில்லை.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to receipt இரசிது கொடு to recite பாட்டுப் பாடு to reckon கணக்கிள் அடங்கு to recognize மட்டுக் கட்டு to recognize early முன்கூட்டி அறிந்து கொள் to reconcile பொருத்து,ஒன்று சேர்,இணை to reconcile ஒப்பிட்டு சரிசெய் to reconsider ஒரு விடயம் தொடர்பாக மறுபடியும் நினை. to reconstruct மீள் அபிவிருத்தி செய் to reconstruct புனருத்தாரணம் செய்
இன்று ஜனவரி 20
பெயர் : பெரியசாமி தூரன் , மறைந்த தேதி : ஜனவரி 20, 1987 தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக இசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை நடத்தவும் காரணமாக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் வலைப்பூக்கு முப்பரிமான ( 3D) ரிப்பன் பேனர் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில.
1.
stalinwesley | 12:08 பிப இல் ஜனவரி 24, 2012
நான் எதிர் பார்த்த பதிவு ………நன்றி
2.
சீராசை சேதுபாலா | 8:40 பிப இல் ஜனவரி 24, 2012
தினமொரு புதிய தொழிற் நுட்பம், புத்தகம், சிந்தனை, தமிழறிஞ்ர், ஆங்கிலம்-தமிழ் மொழி பெயர்ப்பு வார்த்தைகள் எப்படி வின்மணிக்கு மட்டும் சாத்தியமாகின்றது? தொடரட்டும் தங்க்கள் தமிழ்ப்பணி.
3.
♠புதுவை சிவா♠ | 12:19 முப இல் ஜனவரி 26, 2012
useful info thanks winmani