மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.
ஜனவரி 19, 2012 at 9:57 முப பின்னூட்டமொன்றை இடுக
PDF கோப்புகள் திறப்பதற்கு சில நேரங்களில் நாம் கடவுச்சொல் கொடுத்து வைத்திருப்போம் ஆனால் பல நேரங்களில் கடவுச்சொல்மறந்து போகும் அப்படி கடவுச்சொல் மறந்து போகும் நேரத்தில் குறிப்பிட்ட PDF கோப்பின் கடவுச்சொல்லை நீக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பெரும்பாலும் இபுத்தகங்கள் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் , படங்கள் போன்றவற்றை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்திருப்போம், ஆனால் சில நேரங்களில் நாம் வைத்த கடவுச்சொல் மறந்து இந்த கோப்புகளை திறக்க முடியாமல் இருப்போம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இணையதள முகவரி : http://www.becyhome.de/download_eng.htm#becypdfmetaedit
இத்தளத்திற்கு சென்று Download என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் எளிதாக நிறுவிக்கொள்ளலாம். மென்பொருளை நிறுவிய பின் இயக்கியதும் முதலாவதாக கடவுச்சொல் உள்ள PDF கோப்புகளை தேர்ந்தெடுக்க சொல்லும் அதை நாம் தேர்ந்தெடுத்த பின் Save As என்பதை சொடுக்கி வேறு பெயரில் PDF கோப்பாக சேமிக்கலாம், இனி PDF கோப்புகளின் கடவுச்சொல் மறந்துவிட்டாலும் இந்த மென்பொருள் உதவியுடன் PDF கோப்புகளை எளிதாக திறந்து படிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்
ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.
தினம் ஒரு புத்தகம் மா. இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ” தமிழகக் கலைகள் ” புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நம் முயற்சியின்மையைத் தவிர, காலமும் நேரமும் ஒரு போதும் நம்மை சோம்பேறியாக்குவதில்லை
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு quart நான்காக மடித்த தாள் quarter கால் வாசி,கால் பங்கு quarter நான்கில் ஒரு பகுதி quarter-inch கால் அங்குலம் quarterly காலாண்டு quarters விடுதி quartet நாலுடி வெண்பா quartet நான்கு போர் கொண்ட ஒரு இசைக்குழு quartz வெண்கல் , படிகம் quash தள்ளிவிடு
இன்று ஜனவரி 19
பெயர் : ஓஷோ , மறைந்த தேதி : ஜனவரி 19, 1990 இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர்.சிறந்த பேச்சாளர்.ஆங்கிலத்திலும் இந்தியிலும் பல சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். புத்தர்,கிருஷ்ணர்,குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற ஞானிகளிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். நேர்மை துணிவு மிகுந்தவர். அன்பானவர். தியானத்தில் பல புதுவழியை கண்டறிந்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்..
Subscribe to the comments via RSS Feed