உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
ஜனவரி 21, 2012 at 10:37 முப 1 மறுமொழி
செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://wwitv.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலகின் முக்கிய செய்தி சேனல்களின் செய்திகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இதில் எந்த செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாகசெய்தியின் முழுவிபரமும் அறிந்து கொள்ளலாம்.இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கும் நாம் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து உலகின் முன்னனி செய்தி சானல்களில் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்துறை மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அனைத்து சாட்டிலைட் டிவி சேனல்களின் Frequency -ம் ஒரே இடத்தில் நொடியில் அறியலாம்.
தொலைக்காட்சியில் இருந்து வீடியோ (8 – வது சேனல்) பயனுள்ள தளம்.
ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்
தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.
தினம் ஒரு புத்தகம் முல்லை முத்தையா அவர்கள் எழுதிய ” தமிழ் சொல் விளக்கம் ” புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு கடவுள் எப்போதும் கருணை புரிவதில்லை.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to refine தூய்மையாக்கு, சுத்தமாக்கு to refrain விலகி இரு to refuel எரிபொருள் நிரப்பு to refurbish புதுப்பி to refurbish (கட்டடம்) மீள அலங்கரி to refuse மறு to refute தவறென்று நிருபி to register பதிவு செய் , பதிவேடு to regularize ஒழுங்குபடுத்து to regularize சீர்படுத்து
இன்று ஜனவரி 21
பெயர் : விளாடிமிர் லெனின், மறைந்த தேதி : ஜனவரி 21, 1924 ரஷ்யப் புரட்சியாளர்,போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் ஆவார்.லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. என்றும் மக்களின் மகத்தான தலைவர் லெனின்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் வேலை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகின் முக்கிய செய்தி, உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்., திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்..
1.
தனபாலன் | 11:23 முப இல் ஜனவரி 25, 2012
பயனுள்ள சிறந்த பதிவு! நன்றி!