65 இலட்சத்திற்கும் மேல் இபுத்தகங்களை தேடிக் கொடுக்கும் பிரம்மாண்ட தளம்.

ஜனவரி 6, 2012 at 1:38 முப 2 பின்னூட்டங்கள்

ஒன்றல்ல இரண்டல்ல 65 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடி பெறலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வளரும் தொழில்நுட்ப சாதனங்களால் எந்த இடத்தில் இருந்தும் ஒருவர் இபுக் படிக்கலாம் என்ற நிலை வந்த பின் மொபைல் மூலம் இபுத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதே சமயம் புத்தகங்களை தேடி நாளும் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது இப்படி புத்தகங்களை தேடும் நேரத்தை குறைப்பதற்காகவும் ஒரே இடத்தில் அத்தனை இ-புத்தகங்களை கொடுக்கவும் ஒரு தளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://pdfsb.com

இணைய உலகின் பல்வேறு தளங்களில் கிடைக்கும் இபுத்தகங்களை எல்லாம் நாம் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தேடிப் பெறுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.PDF SB என்றால் PDF ” Search Books “. இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் புத்தகத்தின் பெயரை  கொடுத்து தேடலாம், எல்லாவிதமான இபுத்தகங்களையும் ஒரே இடத்தில் இருந்து
எளிதாக தறவிரக்கலாம்.65 லட்சத்திற்கும் மேற்பட்ட இபுத்தகங்களை இத்தளம் தேடி நொடியில் கொடுக்கிறது. இபுத்தகம் படிக்கும் நம்மவர்களுக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம்.

குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை

கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி.

கூகிள் வெளியீட்டுள்ள அழகான புதிய காமிக் புத்தகம் சிறப்பு பார்வை.

ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்

 
வின்மணி சிந்தனை
அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதும்
நாம் அவருக்கு செய்யும் உதவி தான்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to fabricate  புனைதல் ,போலியாகத் தயார் செய்தல்
to facilitate  எளிதாக்கு ,உதவு
to fade    சாயம்போ ,
to familiarize  நெருங்கி பழகு
to fantasize   வினோதமான கற்பனை செய்
to fart  வாயு வெளியேற்று
to fascinate  வசீகரி , வசியம் செய்
to fast    உபவாசமிரு , விரதமிரு
to fasten    கட்டு , இனண , இறுக்கு
to FAX    தொலை நகல் அனுப்பு
 
இன்று ஜனவரி 6 

பெயர் : ஏ. ஆர். ரகுமான் ,
பிறந்த தேதி : ஜனவரி 6, 1966
புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா 
திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக
அறிமுகமானார்.இந்தி, தமிழ், ஆங்கிலம்
மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர்
இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்
விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது
போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான பேக்ரவுண்ட் பேட்டர்ன்( Background pattern) விரும்பியபடி ஆன்லைன் மூலம் உருவாகலாம். அழகான புதுமையான நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...